Friday, October 16, 2015

நெல்லை உக்கிரன்கோட்டையில் அகழாய்வு பணி -Nellai Ukkirankottai Archaelogy

நெல்லை உக்கிரன்கோட்டையில் அகழாய்வு பணி  -Nellai Ukkirankottai Archaelogy
_______________________________________________________________________________

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டை,  1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளத்தை தொல்லியல் துறையினர் கண்டெடுப்பு.

திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டை உள்ளது 
கடந்த 2 மாதங்களாக இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்கு குழிகள் தோண்டி இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் பாண்டியர்களின் படைத்தளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித் தனர்.

கி.பி. 768 முதல் 815-ம் ஆண்டு வரையில் மதுரையை தலைநகராக கொண்டு பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிரபாண்டியன் ஆட்சி செய்திருக்கிறார். அவரது ஆளுகைக்கு உட்பட்டு திருநெல் வேலி உள்பட தென்பகுதிகள் இருந்துள் ளன. இந்த பகுதிகளை கண் காணிக்கவும் படைகளை அனுப்பவும் படைத்தளபதிகள், படைக் கலன்கள், படைவீரர்கள் தங்கியிருக்க உக்கிரன் கோட்டை யில் படைத்தளம் இருந்திருக்கிறது.



ஆனைமலையிலிருந்து கிடைத்த கல்வெட்டில் `களக்குடி நாட்டு கரவந்தாபுரம்’ என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த களக்குடி உக்கிரன்கோட்டை அருகேயுள்ள பகுதியாகும். இதை அடிப்படையாக கொண்டு இந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தபோது, பண்டையகாலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருட்களும் கிடைத்தன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015

‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Nellai_Ukkirankottai_Archaelogy

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...