Thursday, October 22, 2015

2009 முள்ளிவாய்க்காலுக்கு என்ன பதில்?



நேற்றைக்கு யாழ்பாணத்தில் வடக்கு மாநில முதல்வரும், ப.சிதம்பரம் அவர்களும் சந்தித்தார்கள். அப்போது "ராஜீவ்காந்தி ஜெயவர்த்னே ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருப்பதைப் போல மாநிலங்களுக்கு அதிகாரங்களும் உரிமைகளும்  இலங்கையில் மாகாணங்களுக்கு வழங்க இந்தியா முயற்சித்தது"  என்றார் சிதம்பரம்.

ஆனால், 2009 முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழ் இனத்தை அழிக்க இந்திய அரசு துணைபோன ரகசியங்களை மட்டும் ஏன் சொல்லவில்லை?

மன்மோகன்சிங்கே அப்போது  போர் தளவாடங்கள் வழங்கினோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். யாழ்பாணத்திற்குச் செல்லும்போது 1987ல் நிகழ்ந்தவை பற்றிச் சொல்லும் சிதம்பரம் 2009 முள்ளிவாய்க்கால் பற்றியும் சொல்லி இருந்தால் ப.சிதம்பரத்தின் நேர்மையைப் பாராட்டலாம்.


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015

‪#KSR_Posts‬ ‪#KSRadhakrishnan‬ #SrilankanTamilsIssue

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...