Friday, October 16, 2015

ஷேல் எரிவாயு-ரணத்தில் டெல்டா மக்கள் - Shell Methane

ஷேல் எரிவாயு-ரணத்தில் டெல்டா மக்கள்
_________________________________________________

மயிலாடுதுறை அருகே அடியாமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுத்து , அங்குள்ள கிணறுகள் வற்றிவிட்டன என்று பணியை கைவிட்டது ஒ.என்.ஜி.சி நிறுவனம் . தற்போது அதே இடத்தில பல ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு குழாய் பதிக்கும் பணியை தொண்டகியிருக்கிறது அந்த நிறுவனம் . இதனை அறிந்த மக்கள் கொதித்து போய்விட்டனர் . 'எரிவாயு எடுத்தபோது பூமிக்கடியில் செலுத்தப்பட்ட ரசாயனங்களால் நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து , பல வகையான நோய்களையும் உருவாக்கியது . இந்நிலையில்தான் , கடந்த 12.09.15 அன்று ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தனியார் பள்ளி மாணவிகள் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர் . உடனே அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது . 

மயிலாடுதுறை வட்டாட்சியர் நாகலட்சுமி , சம்பவ இடத்திற்கு வந்து விசாரிக்கவே , விரைவில் குழாய்  பதிக்கும் பணியை நிறுத்தி விடுவதாக பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். அதோடு குழாய் பதிக்கும் பணியின்போது வெளியேறும் கழிவுநீர் பாசன வாய்க்காலில் கலப்பதை கண்டுபிடித்திருகின்றனர் கூட்டமைப்பினர், ஒரு டம்ளரில் அந்த கழிவுநீரை எடுத்து தீ வைக்க , அது கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது . 'உடனே பணியை நிறுத்தி எந்திரங்களை அப்புறப்படுத்த வேண்டும்' என்று போராட்ட கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைத்தனர்.


தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகள் , மாவட்ட ஆட்சியர் கண்ணசைவில் திரும்பவும் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்ட பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த 11-10-2015 அன்று , மாதிரிமங்கலத்திலும் ஷேல் குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கும்பொழுது  அம்மக்கள் முற்றுகையிட்டனர். இரும்பு குழாய் ஏற்றிவந்த கனரக வாகனத்தையும் மறித்தனர். காவல்துறையினரும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.  தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மீதேன் திட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று சொல்லிவிட்டு போராடும் மக்கள் மீது வழக்குகளை தொடுப்பதில் தமிழக அதிமுக அரசு இரட்டைவேடம் போடுவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது . 

மத்திய அரசும் மாநில அரசும் இப்படி நடந்துக்கொண்டால் போராடும் மக்களின் நியாயங்கள் மறுக்கப்படும் . 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #ShellMethane

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...