Sunday, October 18, 2015

கார்கள் இல்லாத சென்னை எலியட்ஸ் கடற்கரை.



போக்குவரத்து மற்றும் வளர்ச்சி நிறுவனம் (ஐடிடிபி) சார்பில்  “நம் சென்னை நமக்கு” என்ற கருப்பொருளோடு சென்னை பெசண்ட் நகர் எலியட்ஸ் சாலையில் இன்றைக்கு (18-10-2015) காலை 6மணி முதல் 9மணி வரை 800மீட்டர் நீளமுள்ள கடற்கரை ஒட்டிய சாலையில்  மோட்டார் வாகனப் போக்குவரத்து இல்லாமல் இருப்பது என முடிவு செய்து கடைபிடித்தது நல்ல முயற்சி.  பாராட்டுகள்.

ஏற்கனவே டெல்லியில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதேமாதிரியான வார இறுதிநாட்களில் மோட்டார்கார் இல்லாத சாலைகள் என்ற நடவடிக்கையை கடைபிடித்தார்.

இன்றைக்கு சென்னை மட்டுமில்லை இந்தியா முழுக்க வாகன நெரிசல்களும், அதிலிருந்து வெளிவரும் புகையும், வான இரைச்சல் ஒலிகளும் அப்பப்பா தாங்க முடியவில்லை. இதனால் பல நோய்களும், அமைதியின்மையும் ஏற்படுகின்றன. இதைக்குறித்து பல பதிவுகளிலும் சொல்லியுள்ளேன். உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின்  வாகனங்களில் ஒலிகளை எழுப்பக்கூடாது என்ற உத்தரவுக்குப் பின்னும், சக்திமிக்க ஒலியெழுப்பி ஹாரன்களை வைத்துக்கொண்டு, எவ்வித தயக்கமும் இன்றி ஹாரன் அடிப்பது ஒரு பந்தா என்று நினைத்துக்கொண்டு சாலைகளில் பயணிப்பது எரிச்சலை உருவாக்குகின்றது.

ஓரளவு உலகநாடுகள் பலவற்றுக்கு பயணித்துள்ளேன். அந்நாடுகளில் குறிப்பாக, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், பாரிஸ், கெய்ரோ, ஜோஹன்ஸ்பர்க், துபாய் போன்ற பல நகரங்களில் இம்மாதிரி ஹாரன் ஒலிகளை எழுப்புவதில்லை. அப்படி எழுப்பினால் அது அநாகரீகம் என்று மக்கள் நினைக்கின்றனர். அந்த உணர்வு ஏன் இங்கு வரவில்லை.

ஒருவீட்டில் மூன்று நான்கு கார்கள் வைத்துக்கொண்டு வீட்டின் முன் உள்ள சாலைகளிலும், தெருக்களிலும் நிறுத்திவைப்பது சரிதானா என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒருகணம் நினைத்துப்பார்க்க வேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-10-2015

#KSR_Posts #KsRadhakrishnan #EdwardElliotsBeachRoad #Chennai

No comments:

Post a Comment

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo

#Bungalow, #Banglā, #bungalo, #banggolo.  A single storied living quarter for the prosperous commoner. Typically  a 'garden house'; ...