கடந்த இரண்டுநாட்களாக Antonia Fraser எழுதிய, “Marie Antoinette” என்ற நூலைப் படித்து வருகிறேன்.
உலக வரலாற்றில் அதிர்வுகளை ஏற்படுத்திய, பிரெஞ்சுப்புரட்சிக்குக் காரணமானவர்தான் அகந்தைபிடித்த “மேரி ஆண்டாய்னட்”. பிரெஞ்சு மக்கள் பட்டினியால் வாடியபொழுது, அரண்மனை வளாகத்துக்குச் சென்று ராணியின் முன்னிலையில், “எங்கள் பசிக்கு உண்ண ரொட்டி தாருங்கள்” என்று கேட்டபோது, திமிராக “கேக் சாப்பிடுங்கள்” என்று பேசியதன் விளைவுதான் மக்கள் எழுச்சியாக மாறி பிரெஞ்சுப்புரட்சி ஏற்பட்டது.
மனிதகுல வரலாற்றில், மனித உரிமைகள், “விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்” என்னும் முழக்கத்தால் மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பியது பிரெஞ்சுப்புரட்சி. 16-ஆம் லூயிமன்னன் கொடுங்கோலனாக மாறி கோரதாண்டவம் ஆடியதோடு அல்லாமல், “நானே அரசன், நானே இந்த நாடு, நானே எல்லாம்” என்று கொக்கரித்தான். அதன் விளைவு மன்னனை எதிர்த்து, அவன் படைகளை எதிர்த்து, மக்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அதிகாரக் கோட்டையின் பீடமாக விளங்கிய பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்தனர்.
ஆஸ்திரியாவில் பிறந்து, 14ம் லூயியை மணந்து பிரெஞ்ச் அரசியான மேரி ஆண்டாய்னட் தன்னுடைய கணவனைப்போல திமிராகவும், பகட்டாகவும் மக்களுடைய வரிப்பணங்களை தங்களுடைய சொகுசு வாழ்க்கைக்காக செலவளித்துக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்தார்.
பெண் என்றால் இயற்கையாக கருணை குணம் இருக்கும். ஆனால் மேரி ஆண்டாய்னட்டிடம் அதற்குமாறாக, அராஜகப்போக்கும் கர்வமும், எவரையும் மதிக்காத அரசியாக மேரி ஆண்டாய்னட் தன் வாழ்நாள் முழுக்க இருந்துள்ளார்.
ஆடம்பரம் பகட்டு மட்டுமில்லாமல், விலங்குகளை வேட்டையாடுதல், விதவிதமான குதிரைகளை வாங்கி குதிரையேற்றம், சவாரி செய்தல் எல்லாம் இவர் வாடிக்கை.
வகை வகையான இசைக்கருவிகளை வாங்கி அவற்றைக்கொண்டு இசைமீட்டவும் செய்வார். ஒரு அரசி எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்யாமல், எதைச் செய்யக்கூடாதா அவையத்தனையும் செய்தவர் தான் மேரி ஆண்டாய்னட்.
இவருடைய புதல்வர்கள் நான்குபேருமே இவர ஒத்த குணமுடையவர்களாகவே வளர்ந்திருந்தனர். மேரி ஆண்டாய்னட்டினுடைய பாசத்திற்குரிய சகோதரி மரியா கரோலினா நேப்பிள் அரசி. பார்ப்பதற்கு இவரைப்போலவே இருப்பார். அவர்மீது மேரி ஆண்டாய்னட்டுக்கு அளவுகடந்த பிரியங்க்ளோடு மட்டுமல்லாமல் அவரோடு நெருக்கமாக இருந்ததார். மேரி ஆண்டாய்னட் மீது வழக்குகள் தொடுத்து, சிறையிலடைக்கப்பட்டு, சிறையிலே 1793ல் இறந்தார்.
மேரி ஆண்டாய்னட் பற்றி இதுவரை அறியப்படாத செய்தியாக, அவர் ஒரு லெஸ்பியன் என்ற செய்தி இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு மேரி ஆண்டாய்னட்டின் வரலாற்றைப் படிக்கும்போது, பிரெஞ்சு நாட்டினைப்பற்றியும், இன்னும்பல தகவல்களும் தெரிய வருகின்றன.
இவரைப்பற்றிப் படிப்பவர்களுக்கு ஆட்சியில் உள்ள சிலருக்கும் பதட்டம் ஏற்படலாம். மேரி ஆண்டாய்னட் போன்றவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமரக்கூடாது என்பதற்கு அவருடைய வரலாறே ஒரு சிறந்த செய்தியாகிவிட்டது.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன் | 24-10-2015
#KsRadhakrishnan #KSR_Posts #MarieAntoinette
No comments:
Post a Comment