Friday, October 23, 2015

உலகின் முதல் பணப் பயன்பாடு இல்லாத நாடு ஸ்வீடன்!





ஸ்வீடன் உலகி்ல் காகிதப்பணம் பயன்பாட்டில் இல்லாமல் செய்த முதல் நாடாகிறது . ஸ்வீடன் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் பிரதானமான பெரிய நாடு.

உலகில் அனைத்துப் பகுதியிலும் பணம்தான் பரிவர்த்தனைக்கு மாற்று முறை கருவியாக உள்ளது. ஆனால் ஸ்வீடனில் முதன்முதலாக பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை, அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் கைப்பேசிமூலமாக செலுத்தலாம் என்ற நடைமுறை வந்துவிட்டது.

ஸ்வீடன் கரன்சியான "ஸ்வீடிஷ் கரோனா" காகிதப்பணம் தற்போது புழக்கத்தில் இல்லை. தங்கள் கடன் அட்டை, வங்கி அட்டை மூலமாக அனைத்து கணக்குகளையும் முறைப்படுத்துகின்றனர். செலுத்தவேண்டிய பாக்கிகளை கடன் அட்டை ,வங்கி அட்டை, கைபேசி மூலமாக நேர் செய்கின்றனர். சில்லரை வணிகப் பொருள்களைக்கூட காசு கொடுத்து வாங்காமல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அனைத்து ரொக்கப் பணங்களும் 60 %வங்கியிலும் 40%சதவிதம் மக்களிடம் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது. எனவே ஸ்வீடனில் ரொக்கப்பணம் என்ற நடைமுறை இல்லாமல் ஆகிவிட்டது. இவ்வாறு நடைமுறைப்படுத்தும்போது கருப்புப்பணம் ஒழிக்கப்பட்டுவிடும். இனிமேல் வங்கி அட்டைகளுக்குத்தான் அங்கே மதிப்பு.

என் நினைவுக்கு உள்ளவரை, முதன்முதலாக சீனாவில் தான் பணத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன என்று நினைக்கின்றேன். பணம் என்பது ஒரு இடத்தில் நிற்காமல் புழக்கத்தில் இருக்கவேண்டும் என்றுதான் தாள்களில் அச்சடிக்கப்பட்டது. காற்றில் தாள்கள் ஓடுவதுபோல பணமும் ஓடவேண்டும் என்பதுதான் நோக்கம். சிறுமதிப்புள்ள காசுகள் ஓடாது.

பணத்தாள்கள் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது என்பதால்தான் ஓடும் பணத்தாள்கள் என்று குறிப்பிடுவது உண்டு. இது ஒரு உலகப்பொருளாதாரத்தில் இந்தமுறை ஒரு வித்யாசமாகப் படுகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-10-2015.


#KsRadhakrishnan #KSR_Posts #SwedishKrona) #swedenCurrency

No comments:

Post a Comment

When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*

*When life knocks you down Get back up and fight harder. Yes sometimes, life can be tough*. But always remember so are You. Belive the stren...