Saturday, October 10, 2015

ரணத்தில் மூணார் - Munnar








புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடியபடி,
“சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே” என்ற வரிகளுக்கு ஜீவனைத் தந்த மூணார் வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பாடுபடும் தொழிலாளர்களை நினைத்தால் கொடுமையிலும் கொடுமை.


இன்றைக்கு மூணார் தேயிலைத்தோட்டங்களில் வேலைபார்க்கும் பெண்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டைத்தை முன்னெடுத்து வருகிறார்கள். 20 சதவீத போனசுக்கும், நாள் ஒன்றுக்கு ரூ. 500 ஊதியத்திற்குமாக இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி, கே.டி.எச்.பி., கம்பெனி அங்கு செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டிய காலக்கெடு முடிந்தும், ஊதிய உயர்வு வழங்காமல் தொழிலாளர்களுக்கு பத்து சதவீத போனசை அறிவித்தது. இதனை தொழிலாளர்கள் வாங்க மறுத்து நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டத்தில்
குதித்துள்ளனர்.

நான்கு தலைமுறைக்கும் மேல் இப்பகுதியிலுள்ள காடுகளைத் திருத்தி, விஷப்பூச்சிகளின் கடிகள், கடுங்குளிர் என எல்லா சித்திரவதைகளையும் அனுபவித்து இந்தத் தேயிலைத் தோட்டங்கள் உருவானது ஒரு நெடிய வரலாறு ஆகும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-10-2015.


#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts#Munnar

No comments:

Post a Comment

புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100 சற்று முன் அவருடன் சந்திப்பு

#புத்தாண்டு2025 #ஆர்நல்லகண்ணு100  சற்று முன் அவருடன் சந்திப்பு ———————————————————- புத்தாண்டு 2025 உதயத்தின் சில மணித்துளிகள் முன்  ஆர்நல்ல...