அதிமுகவின் புதிய 50 மாவட்ட செயலாளர்கள் ஜெயலலிதாவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்கள். இது அதிமுக விவகாரம்தான் . அனால் புகைபடத்தில் இருப்பவர்கள் அடிமைகள் போல கும்பிடுவதும், அடங்கி ஒடுங்கி அமர்வதும் மனித இனத்திற்கு ஏற்புடையதுதானா ??
பதவிக்காக நடிப்பா இல்லை உண்மையான நிலைதானா என்றாலும் என்ன வேடிக்கை அலங்கோல காட்சிகள், என்ன வேடிக்கை மனிதர்கள்.
கல்லூரிகளிலும் வகுப்பு குழு புகைப்படங்கள் எடுப்பதுண்டு. இப்படி எவரும் நிற்பது கிடையாது . இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகளும் இருகின்றார்கள். இதையெல்லாம் பற்றி சிந்தித்தாலும், இப்படியும் சில மனிதர்கள் .
சில நேரங்களில் சில மனிதர்கள் , இதையும் அந்த கட்சியின் தலைமை வேடிக்கை பார்த்துகொண்டு வெளியிடுகிறது. இதை உலக சமுதாயம் பார்த்தால் என்ன நினைக்கும் என்ற சிந்தனை கூட அவர்களுக்கு வரவில்லையா ??
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-10-2015
#KSR_Posts #KSRadhakrishnan
No comments:
Post a Comment