செங்கோட்டை- புனலூர்(கேரளா) செல்லும் சாலையில் உள்ள
( பார்டர்) ரஹ்மத் புரோட்டா கடை நானறிந்த வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இருக்கின்றது.
அங்கு சென்றால் புரோட்டாவை இலையில் பிய்த்துப்போட்டு, சால்னா ஊற்றி சாப்பிடுவது அனைவருடைய வாடிக்கை. எண்ணெயில் பொரித்த சிக்கன் லெக்பீசின் சுவையும் அருமையாக இருக்கும். வெங்காயத்தில் வறுத்த கோழியும், புரோட்டாவும் அருவியில் குளித்த பசியில் நன்றாக தின்று தீர்க்கலாம்.
இது நெல்லைமாவட்டத்தின் அடையாளமாகத் திகழ்வது மட்டுமில்லாமல், அருகாமையில் உள்ள கேரளமக்களும் விடுமுறை நாட்களில் இந்த புரோட்டாவையும் வறுத்த கோழியையும் சாப்பிட வருவார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகமாகக் கூட்டம் சேரும்.
இங்கு தயாரிக்கப்படும் புரோட்டாவின் மாவைச்
சரியான பதத்தில் சூடேற்றி, சால்னாவையும் முறையான மசாலாக்களைச் சேர்த்து தங்களுக்கேயுரிய கைப்பக்குவத்தில் தயாரிப்பதுதான் அதன் சுவைக்கு காரணமாகும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2015.
#KsRadhakrishnan #KSR_Posts #SenkottaiBorderParotta
No comments:
Post a Comment