Thursday, June 30, 2016

Srilankatamils..

I'm மனித உரிமைகள் விவகாரத்தில், சிறிலங்கா மேலும் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ள அதேவேளை, வெளித்தலையீடுகளின்றி உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண, சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் நேற்று சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர், வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து, பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த அறிக்கை தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர். இதன்போது, கருத்து வெளியிட்ட ரஷ்யாவின் பிரதிநிதி, வெளியாரின் தலையீடுகள் இல்லாமல் தமது உள்நாட்டு விவகாரத்துக்குத் தீர்வு காண சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரினார். அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, கானா, மசிடோனியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், உரையாற்றிய போது, சிறிலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், மேலும் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள #சிறிலங்கா தொடர்பான அடுத்த அறிக்கைக்காக காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. அதேவேளை, மசிடோனிய நாட்டுப் பிரதிநிதி கருத்து வெளியிடுகையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு காலம் தேவை என்று நாம் அறிவோம். எனினும் தற்போதுள்ள வாய்ப்புகளை காலவரம்பின்றி நீடிக்கக் கூடாது. பொறுப்புக்கூறல் விவகாரத்தில், தீர்மானத்தில் உள்ள பந்திகளுக்கு ஏற்ப, அனைத்துலக ஆதரவு மற்றும் பங்களிப்புடன், சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க மசிடோனியா வலியுறுத்துவதாக தெரிவித்தார். தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்ட நோர்வே பிரதிநிதி, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும், நல்லிணக்க, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் செயற்பாடுகள் அனைத்தும், பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம், பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை அடிப்படையாக கொண்டு இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். அதேவேளை, பிரித்தானியப் பிரதிநிதி உரையாற்றுகையில், இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார். சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரித்தானிய பிரதிநிதி இன்னமும் அதிகளவான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். வடக்கில் இராணுவம் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்2018க்குள் தமிழர்களின் நிலங்கள் முழுமையாக கொடுக்க்ப்படும் - ஐநா அவையில் இனப்படுகொலை இலங்கையின் வெளிவிவகாரத்துறை மந்திரி மங்கள சமரவீரா 

இலங்கையில் சொல்லும்படியாக முன்னேற்றம் எற்பட்டுக்கொண்டே இருக்கிறது.மேலும் அதுவலுப்பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும் -ஐநா மனித உரிமை ஆணையர் அல் ஹுசைன்

ஆகமொத்தம் இனப்படுகொலை இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு ’டைம்’ வாங்கிகொடுத்துறீங்க அப்படித்தானே. இதுக்கு எதுக்கு ஐநா சபை, மனித உரிமை மன்றம் எல்லாம் அவனவன் அவனவனுக்கான தீர்வை தேடிக்கோங்கன்னு சொல்லிரவேண்டியதுதானே?, பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவாக நீக்க வேண்டும்.#srilankatamils

Amazon..

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

வருடமெல்லாம் கொட்டும் மழை! 

சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! 

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை  பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!  

அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!! 

இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்! 

ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.

இந்த காடுகள் ஆபத்தானவை. 

இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது! 

இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.

இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!! 

இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். 

இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. 

முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள். 

அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது. 

'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.

------------------------

அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை!  

இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்! 

எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.

1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!

அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். 

மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.

ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!

மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.

முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. 

பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம். 

சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.

அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. 

பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.

-------------------

''அமேசான் மழைக்காடுகள்''

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது. 

சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. 

பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. 

பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். 

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. 

இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு,  உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன. 

3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. 

எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். 

அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 47,76,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

--------------------------

அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர். 

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். 

கி.பி. 1500-ம் ஆண்டு 6.090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள். 

ஆனால் இப்போது,  வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர். 

இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!

இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். 

விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர். 

இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். 

ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர். 

ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர். 

அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.

----------------------------

உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன. 

பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன. 

இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.  

இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன. 

அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம். 

ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு. 

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.

---------------------------

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

இது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. 

அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. 

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு,  ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது! 

நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார். 

எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

----------------------------

குளிரான  அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.

4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது. 

அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது. 

உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.

இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது. 

100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது. 

விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி. 

இது சிறிய ஆறு. 

ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு. 

ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.

வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.


Wednesday, June 29, 2016

படித்ததில் ரசித்த சிறுகதை.


ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.
தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது
.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர், "பாருங்கள்! 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.
நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து, "என்ன சொல்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.
"ஐயா! என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.
பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுத்துவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள்! என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களேஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

பொதுஜன வாக்கெடுப்பு - ஒரு பார்வை!

சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு (referendum) செய்திகள் வருகின்றன; அது குறித்தான விவாதங்களும் நடக்கின்றன. பொது வாக்கெடுப்பு (referendum) என்றால் என்ன என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டிருந்தனர். அது குறித்து விவரமான பதிவுகளோடு என்னுடைய கட்டுரை இன்றைய (29.6.2016) தினமணியில் நடுப்பக்க தலையங்கப் பக்கத்தில் "பொதுஜன வாக்கெடுப்பு - ஒரு பார்வை!" என்ற தலைப்பில் வெளி வந்துள்ள எனது பத்தி.

பொதுஜன வாக்கெடுப்பு - ஒரு பார்வை!

பிரிட்டனில், கடந்த 23.6.2016 ஐரோப்பிய யூனியனுடன் இருக்கக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். அதைப் போன்று 2014 செப்டம்பர் 18ம் தேதி ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்துதான் இருக்க வேண்டும் என்றும் பொதுஜன வாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது.

பொதுஜன வாக்கெடுப்பு, கருத்தறியும் வாக்கெடுப்பு (Referendum / Plebiscite) என்று அழைக்கப்படுகின்ற முறை நேரிடையாக நாட்டில் மக்களே பங்கேற்று முடிவெடுக்கின்ற முறையாகும்.  நாட்டில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள், முக்கியப் பிரச்சினைகள் குறித்து தீர்வு காணவேண்டிய விடயங்களுக்கு, மக்களே ஆம் / இல்லை என்ற கருத்து வாக்களிக்கின்ற முறைதான் பொதுஜன வாக்கெடுப்பு. இதை நேரடி ஜனநாயகம் என்பார்கள். சில நாடுகளில் பொது வாக்கெடுப்பை Plebiscitory என்றும் அழைக்கப்படுகிறது. பொது வாக்கெடுப்பு முடிவுகள் சில சமயங்களில் ஆலோசனைகளாகவும், பரிந்துரைகளாகவும், அரசு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளாகவும் உள்ளன.

பொதுத் தேர்தல் போன்று இல்லாமல் மக்களின் கருத்துக்களையும், எப்படி கிரேக்கத்தில் நகர அரசுக்களில் மக்களே பங்கேற்றார்களோ அதைப் போன்று அரசின் முடிவுகளிலும் பங்கேற்கும் முறைதான் இது.  இந்த முறை கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளன.

உலக அளவில் 58 ஜனநாயக நாடுகளில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் 39 நாடுகளில் அதிகமாக பொதுஜன வாக்கெடுப்பை பின்பற்றுகின்றன.  அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன.

அரசியலமைப்பு சாசன முறைகள், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள், தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைத்தல் (Recall) போன்ற சூழல்களில் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. நேரடி ஜனநாயகம் பிரதானமாக இந்த முறைகளில் விளங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவம் இந்த முறைக்கு சம்பந்தமில்லை. நாடாளுமன்றங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உட்படாமல் மக்களே நேர்மையாக தங்கள் விருப்பத்தையும், கருத்துக்களையும் வெளிப்படையாக சொல்வதுதான் பொதுஜன வாக்கெடுப்பு. மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் இனிஷியேட்டிவ் முறையில் மனுக்கள் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை பதவியிலிருந்து திரும்ப அழைக்கும் முறை மக்களின் உரிமையாகும் என்று அரசியல் அறிஞர் ஜேம்ஸ் டஃப் பார்னட் கூறுகிறார். இவர் திரும்ப அழைக்கும் முறைக்கு முழுமையான கோட்பாடுகளை வடிவமைத்தவர்.

இந்தியாவில் இது நடைமுறையில் இல்லை. ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற நாடுகளிலும்பொதுஜன வாக்கெடுப்பு நடைமுறையில் இல்லை.

இங்கிலாந்தில் ஜேம்ஸ் கோல்டுஸ்மித்தால் 1933ல் ரெஃபரெண்டம் கட்சி என்று மக்களின் கருத்துக்களை முன்னெடுக்கும் வகையில் அரசியல் கட்சியும் துவக்கப்பட்டது. அந்தக் கட்சியினுடைய தாக்கம்தான் இன்றைக்கு பிரிட்டனில் இயங்கும் யூகேஐபி கட்சி. இந்த இயக்கம்தான் இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து இருக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தை நடத்தியது.

பொதுஜன வாக்கெடுப்பு போன்று; மக்களோ, சில மக்கள் குழுக்களோ கையொப்பமிட்ட மனுக்கள் மூலமாக நாட்டின் முக்கியப் பிரச்சினைகளுக்கு மக்களின் கருத்தறிய வாக்களிப்பை நடத்துவதற்கு பெயர்தான் இனிஷியேட்டிவ் (Initiative) என்ற மக்கள் முயற்சி. இதுவும் பொதுஜன வாக்கெடுப்பு போன்ற நடைமுறையாகும். இது அமெரிக்காவில் முதன்முதலாக 1890ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதில் பிரதானப் பங்கு மக்களே. அரசு வெறும் பார்வையாளர் மட்டும்தான். சுவிட்சர்லாந்திலும் பல சமயங்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் முதல் அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தை கலிபோர்னியா மாநிலத்தில் இந்த இனிஷியேட்டிவ் முறையில் செயல்படுத்தியது. கட்சி அரசியல், மக்கள் பிரதிநிதி மன்றங்களே இம்முறையால் வினாக்கள் எழுப்பப்பட்டு நாட்டின் தலைவர்களே பிரச்சினைகளைக் கண்டு அச்சம் கொண்டதும் உண்டு.

பல வகையான வாக்கெடுப்புகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. ஒரு புதிய புரட்சிகர அரசியலமைப்பின் மீது 1793-ல் பிரான்ஸ் வாக்களித்த போதிலிருந்து, தற்போது வரை ஏறக்குறைய 3000 தேசிய அளவிலான வாக்கெடுப்புகள் உலகமெங்கும் நடந்துள்ளன. தேசிய மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்து பல வாக்கெடுப்புகள் நடந்துள்ளன. பாலியல் தொழில், மாஃபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பிரிட்டனின் உறுப்புரிமை ஆகியவற்றுக்கு இடையே பொதுவான அம்சம் என்ன? இவையனைத்துமே மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.

1970-லிருந்து வாக்கெடுப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது. இந்த எண்ணிக்கை 1990-களில் மிகவும் உச்சத்தைத் தொட்டது. மாஃபியா உறுப்பினர்களை வீட்டுக் காவலில் வைப்பது குறித்து கூட 1995-ஆம் ஆண்டில் மட்டும், இத்தாலி 12 பகுதிகளில் வாக்கெடுப்புகளை நடத்தியது.  1997-ஆம் ஆண்டு ஈக்வடோர் நாடு 14 பகுதிகளில் வாக்கெடுப்புகளை நடத்தியது. இதில் அந்த நாட்டு அதிபரை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான வாக்கெடுப்பும் அடங்கும். எரிவாயு பணிகளை தேசிய மயமாக்குவதிலிருந்து, வரிகள் செலுத்துவது வரை பல பிரச்சினைகளுக்கும் பொதுஜன வாக்கெடுப்புகள் பல நாடுகளில் நடந்தன. கடந்த 2009-ஆம் ஆண்டு, மசூதியின் கோபுர அமைப்புக்கள் கட்டுதலை தடுக்க சுவிட்சர்லாந்து வாக்களித்தது. 2012-இல் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஜூரிச், கார்களில் பாலியல் தொழில் நடத்த "உடலுறவு பெட்டிகள்" வசதியினை கொண்டு வருவதற்கு ஆதரவாக வாக்களித்தது. உலகில், அரசுக்கு சட்டங்களை மக்களே பரிந்துரை செய்யவும், சட்டங்கள் கடுமையாக வலியுறுத்தப்பட்டால் அவற்றின் மீது நேரடியாக வாக்களிக்கவும் வழிவகை செய்யும் ஒரே நாடு சுவிட்சர்லாந்து மட்டுமேயாகும்.

மக்கள் வாக்கெடுப்புகளின் வினோத தன்மையையும் தாண்டி, தனி நாடாக வேண்டும் அல்லது ஒரு அமைப்பிலிருந்து ஒரு நாடு வெளியேறுவது போன்ற அம்சங்களின் மீது ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அது பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. 1945-ஆம் ஆண்டிலிருந்து, விடுதலை கோரும் 50-க்கும் மேற்பட்ட வாக்கெடுப்புகள் இதுவரை நடந்துள்ளன. இவற்றில் 27 வாக்கெடுப்புகள் விடுதலை வேண்டுமா என்பதற்கு. ''ஆம்'' என்றும், 25 வாக்கெடுப்புகள் ''இல்லை'' என்றும் வாக்களித்துள்ளன. ஆனால், ''ஆம்'' என்று வாக்களித்த நாடுகளில் மோசமான ஜனநாயகமே இருந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. 1990களில் 14 நாடுகள் விடுதலை கோரி வாக்களித்தன.  சோவியத் யூனியன் உடைந்த போது, அவற்றில் 8 நாடுகள் அதிலிருந்து பிரிந்தன. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து 3 நாடுகள் பிரிந்தன, எத்தியோப்பியாவிலிருந்து ஒரு நாடு பிரிந்தது. மேலும்  விடுதலை கோரி பிரிந்த ஒரு நாடு தற்போதுள்ள கிழக்கு தைமூர் ஆகும். இதன் முடிவினை அங்குள்ள கொடூரமான போராளிக் குழு எதிர்த்தது.

பெரும்பாலான கருத்தறியும் வாக்கெடுப்புகள் புதிய மற்றும் அதிக வெளிப்படையான சகாப்தத்தின் தொடக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால், விடுதலை கோரும் வாக்கெடுப்புகள் திரும்ப நிலையை எட்ட முடியாத ஒரு வழிமுறையினை தொடக்கி விடுவதாக சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். 1967இல் இருந்து அமெரிக்காவிடமிருந்து விடுதலை வேண்டுமா என்று நான்கு வாக்கெடுப்புகளை ப்யுயர்ட்டோ ரிக்கோ நடத்தியது. இவையனைத்துக்குமே ''இல்லை'' என்ற பதிலே வாக்களிக்கப்பட்டது.  அதே வேளையில், கனடாவை விட்டு வெளியேறுவதற்கு எதிராக இரண்டு முறை கியூபெக் வாக்களித்தது. ஆன போதிலும், அங்கு இன்னொரு வாக்கெடுப்பு வேண்டி நடக்கும் பரப்புரைகள் பலமாக உள்ளன.

உலகில், ஸ்லோவேனியா (1990), குரோஷியா (1991), மாசிடோனியா (1991), உக்ரைன் (1991), ஜார்ஜியா (1991), டிரான்ஸ்னிஸ்டீரியா (1991), போஸ்னியா (1992), எரித்ரியா (1993), மால்டோவா (1994), கிழக்கு தைமூர் (1999), மாண்டிநிக்ரோ (2006), தெற்கு ஒசேடியா (2006), தெற்கு சூடான் (2011), கினா, ஹெரிசிகோவினா ஆகிய நாடுகள் பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி பிரிந்த நாடுகள் ஆகும்.

போகைன்வில்லே நியூசிலாந்திடமிருந்தும்; நியூ கலிடோனியா பிரான்ஸ் நாட்டிடமிருந்தும்; மேற்கு சகாரா ஆகிய நாடுகள் தன்னுடைய தனி இறையாண்மையை வழங்க கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுஜன வாக்குரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் ஈழக் கோரிக்கைக்காக தனி நாடு வேண்டும் என்று பொதுஜன வாக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இரு தேசம் ஒரு நாடு என்ற நடைமுறையாவது வரவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கையில் தமிழர்கள் வைத்துள்ளனர்.

உலக அளவில் பொதுஜன வாக்கெடுப்பு / பிளெபிசிட்டி, மக்கள் முயற்சி என்ற இனிஷியேட்டிவ் என்பது மக்களுக்கு வழங்கப்படுகின்ற அடிப்படை உரிமைகள். தாங்களும், நாட்டை வழிநடத்துவதில் பங்கேற்று ஆரோக்கியமான அரசியல், ஜனநாயகம் மேம்பட இந்த கோட்பாடுகள் அவசியம். ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டத்தில் இதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தனி மாநிலமாக அங்கீகாரம் பெற பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினை, நதிகள் இணைப்பு, மத்திய-மாநில உறவுகள் குறித்தான பல விடயங்களில் பொதுஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் நடைமுறைப்படுத்த இங்கு வழி வகை இல்லை.

வடகிழக்கு மாநிலங்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடும்பொழுதும் இதே கோரிக்கைகள் எழுந்தன. நாகாலந்து மக்கள் தங்கள் தேசிய இன அடையாளத்தை மீட்டெடுக்க 50 ஆண்டுகளாக போராடுகின்றனர். இது ஆயுதப் போராட்டமாகவும் உருவெடுத்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தனிநாடு கேட்டுப் போராடிய ஐசக் - மொய்வா தலைமையிலான நாகா தேசிய சோசலிச கவுன்சில் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கிலாந்து சென்ற போது, வாஜ்பாய் ஐசக், மொய்வா இரு தலைவர்களையும் முன்னறிவிப்பு இன்றி சந்தித்துப் பேசினார்.  இப்போது இந்திய அரசு நடத்தி வந்த அமைதி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, நாகாலாந்து மக்களுக்கு தனி கொடியும், தனி கடவுச்சீட்டும், ஏற்படுத்திக்கொள்ள இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், தட்பவெப்பநிலை இருக்கும் நிலையில் பன்மையில் ஒருமை என்ற கொள்கையில் ஒருமைப்பாடு என்ற கண்ணியத்தை காத்து வருகின்றோம். ஆனால் மக்களின் அபிலாஷைகளுக்கேற்ற வகையில் தீர்வுகள் கிட்டவேண்டும்.

மக்கள் தொகையும் பெருகிக் கொண்டு வருகின்றது. பிரச்சினைகளும், தேவைகளும் அதிகரிக்கின்றன. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் பொதுஜன வாக்கெடுப்புப் போன்ற முறைகள் நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் இருக்கலாம். அந்த சிரமங்களையெல்லாம் எதிர்கொண்டு, இங்கு மக்கள் குடியாட்சியில் பங்கேற்கும் வகையில், பொதுஜன வாக்கெடுப்பு முறைக்கு வரவேண்டும்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த முறைகளை இடம்பெற செய்யவேண்டும். இம்மாதிரி ஜனநாயக முறைகளை வென்றெடுத்து குடியாட்சியை மேலும் நவீன முறையில் வலுசேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.



டி.ஆர். மகாலிங்கம் அன்றைய வெள்ளித்திரையின் ஆளுமை.

டி.ஆர்.மகாலிங்கம்....... 1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர்.
அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி.கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்களில் கூடியுள்ள மக்கள் அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் பாடிப் பழகியவர்கள். இனிமையும் குன்றாது பாடினார்கள். 1937ல் நந்தகுமார் என்ற படம் மூலமாக திரையுலகில் பிரவேசித்தார். பல படங்களில் நாயகனாகவும் பிற்பாடு குணச்சித்திர, புராண வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். 1945ல் வந்த ஸ்ரீவள்ளி படத்தில் முருகக் கடவுள் வேடத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவரது கலைப் பயணத்தில் சில படங்கள்: பூலோகரம்பை, நாம் இருவர், வேதாள உலகம், ஞானசௌந்தரி, பவளக்கொடி, லைலா மஜ்னு, இதயகீதம், பாரிஜாதம், மோகனசுந்தரம், மாலை இட்ட மங்கை, ஆடவந்த தெய்வம், கவலை இல்லாத மனிதன், ரத்தினபுரி இளவரசி, திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜ சோழன், திருமலைத் தெய்வம், கிருஷ்ணலீலை....... விஸ்வநாதன் ராமூமூர்த்தி இசையில் இவர் அருமையாகப் பாடிய “செந்தமிழ் தேன் மொழியாள்” பாடல் இன்றளவும் மெல்லிசை மேடைக் கச்சேரிகளில் தவறாமல் பாடப்படுகின்றது. இவரது ஹிட் பாடல்கள் பல. அவற்றில் சில: எங்கள் திராவிடப் பொன்னாடே...., இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...., தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே...., நமச்சிவாய என்று சொல்வோமே..... இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு இவர் குரல் மிகவும் பிடித்தமானதால் நிறைய வாய்ப்பு கொடுத்தார். நானன்றி யார் வருவார் என்ற பாடலை மெலடியாகப் பாடி அசத்தியிருப்பார். இவர் மறைந்த ஆண்டு 1978.

காந்திமதி அம்பாள் உயர்நிலைப் பள்ளி - திருநெல்வேலி

திருநெல்வேலிக்கு பல அடையாளங்கள் உண்டு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி ஜங்ஷன், ரயிலடி, நட்ராஜ் ஸ்டோர், கா.மு. கட்டிடம், சிவாஜி ஸ்டோர், சந்திரவிலாஸ் ஹோட்டல், பாளை பஸ் ஸ்டாண்ட், மரியா கேண்டீன், தெற்கு பஜார், பாளை மார்க்கெட், முருகன் குறிச்சி என்று பல இடங்களை பேச்சு வழக்கில் சொல்வதைப் போல, ஹை கிரவுண்ட் காந்திமதி அம்பாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் அடங்கியதாகும். திருநெல்வேலியில், கதீட்ரல் உயர்நிலைப்பள்ளி, சேப்டர் உயர்நிலைப்பள்ளி, ம.தி.தா. இந்து கல்லூரி உயர்நிலைப்பள்ளி, திருநெல்வேலி டவுன் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி, செயிண்ட் ஸேவியர் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, என்று பல உயர்நிலைப்பள்ளிகள் 1960, 70களில் முக்கியமான கல்வி நிலையங்கள் ஆகும். இப்பள்ளி துவங்கி 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 21.6.1956 அன்று நெல்லையப்பர் தேவஸ்தானத்தால் நிறுவப்பட்ட பள்ளியாகும். அன்றைக்கு அறநிலைய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பக்தவத்சலம் இந்த பள்ளியை திறந்து வைத்தார். இன்றைக்கும் இப்பள்ளி இந்து அறநிலையத் துறையின் கீழ்தான் இயங்குகின்றது. இந்த பள்ளியின் எதிர்புறத்தில் உள்ள ஆல மரம்தான் நகரப் பேருந்து பயணிகள் நிற்குமிடம். இப்பள்ளியின் தெற்கே மகாராஜா நகர், மேற்கில் ஹை கிரவுண்ட் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கிழக்கே மருத்துவக்கல்லூரி விடுதிகள், மாவட்ட நீதிபதி இல்லம், மூத்த போலீஸ் அதிகாரிகளின் இல்லங்கள் எல்லாம் அமைந்துள்ளன. அப்போது இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. பேருந்துக்கு குறைந்தது 20 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டும். ஒரு முறை பேருந்துக்காக காத்திருந்தபோது, இப்பள்ளியின் நுழைவாயில் திறந்திருந்து, உள்ளே வேப்ப மரம் பச்சை பசேல் என்று இருந்தது. சீருடை அணிந்த பெண் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அப்போது 'சர்வர் சுந்தரம்' படம் ஹிட்டாகி ஒடியபோது இப்பள்ளியின் மாணவிகள் ஒரு நிகழ்ச்சியில் "சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு" என்ற பாடலை பாடியதை காதில் கேட்டது நினைவுக்கு வருகிறது. தமிழ் அறிஞரும், தமிழில் விஞ்ஞான நூல்களை கொண்டு வந்த பெ.நா. அப்புசாமி அவர்களுடைய புதல்வி அம்மணி அம்மாள் இந்த பள்ளியின் தலைமையாசிரியராக நீண்ட காலம் பணியாற்றினார். அவர் மாணவிகளிடம் கண்டிப்பாகவும், பாசமாகவும் இருந்த தலைமையாசிரியர் என்று சொல்வார்கள். 60 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்பள்ளியில் படித்த பலர் பெரிய பொறுப்புகளுக்கு வந்த பாரதி கண்ட புதுமைப் பெண்களாக திகழ்கின்றனர்.

Tuesday, June 28, 2016

Tudor- King HenryVlll

King Henry VIII of England was born #OnThisDay in 1491. He was the second monarch of the House of #Tudor and was succeeded by his son Edward VI. Infamous for his six marriages, Henry VIII is known for his role in the separation of the The Church of England from the Roman Catholic Church and the dissolution of the monasteries. In 1512 after a fire in the Palace of #Westminster, Henry VIII abandoned the building in favour of the nearby Palace of Whitehall. Westminster then became the permanent home of #Parliament http://goo.gl/dMTZAW

UK

This may be the most useful Venn Diagram .
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? " 
தென்னங்கன்று சொன்னது, 
" ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது. 
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. 
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.

வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை. 
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது. 
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .

ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. ஆம் . வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது. 
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகும்.

" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...
படித்ததில் பிடித்தது........

Monday, June 27, 2016

"No doubt, there was peace after all this, but it was a peace stained with blood."
--from ANNALS by Tacitus

The complete historical works of the greatest chronicler of the Roman Empire in a wholly revised and updated translation. A brilliant narrator and a master stylist, Tacitus served as administrator and senator, a career that gave him an intimate view of the empire at its highest levels, and of the dramatic, violent, and often bloody events of the first century. In the Annals, he writes about Augustus Caesar’s death and observes the inner workings of the courts of the emperors Tiberius and Nero. In the Histories, he describes an empire in tumult, four emperors reigning in one year, each overthrown by the next. The Agricola, a biography of Tacitus’s father-in-law, Julius Agricola—the most celebrated governor of Roman Britain—is the first detailed account of the island that would eventually rule over a quarter of the earth. And in the Germania, the famed warrior-barbarians of ancient Germany come richly to life.

Sunday, June 26, 2016

மதுரை அழகர் கோவில்

தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகர் மதுரை. ரோம் நகரமும், ஏதென்ஸ் நகரமும் வரலாற்றின் பண்டைய உலக நகரங்களாகும். மாமதுரையும் அதற்கொப்ப ரோம், ஏதென்ஸ் நகரத்துக்கு முந்தைய நகரமாகும். தமிழ் மண்ணின் அடையாளம். தமிழ்நாட்டுப்புற கலைகளுக்கும், வாடிக்கைகளுக்கும் முகவரி. மதுரையின் அருகே அமைந்த அழகர் கோவில் வைணவமும், சைவமும் இணைந்த மலைப்பிரதேசம் ஆகும். பிரம்மாண்டமான அழகர்கோவில் சாலை பற்றி கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் புதினத்தில் எடுத்துச் சொல்வார். எழிலார்ந்த மலையும், காடும் கண்ணை கவர்கின்றன. அழகர் கோவிலின் பெரிய பிரம்மாண்டமான முன்வாயில் பதினெட்டாம் படியார் வாயில் என்று அழைப்பதுண்டு. இதை மூடி வைத்து உரிய பூஜைகளும் நடத்துவதுண்டு. நாட்டுப்புற கலைகளுக்கு அழகர் கோவில் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு காவிரியின் தென்கரையில் திருவரங்கத்தில் அரங்கன் பள்ளிக்கொண்டதிலிருந்து தென்குமரி வரை தென் தமிழகம் என்று தமிழ் பேசக்கூடிய அளவில் இரண்டு மாநிலங்கள் இந்தியாவில் அமைந்தால் என்ன? என என் நட்பு வட்டாரம் விவாதித்தது உண்டு. என்னுடைய தனிப்பட்ட முறையில் இதுவும் சரிதான் என்று படுகிறது. அதற்கு காலம் என்ன பதில் சொல்லப் போகிறதோ? இந்த விவாதம் தமிழ்நாட்டின் பிரபலமான தின பத்திரிகையின் ஆசிரியர், ஓய்வு பெற்ற சென்ன உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பத்திரிகையாளர், மதுரையைச் சார்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞரும்,  என நண்பர்களோடு அழகர் கோவில் மேலே உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றபோது இது குறித்து கடந்த வாரம் விவாதித்தோம். இது சரியா, தவறா என்பது விவாதத்துக்கு உரிய விடயம்.

அழகர் கோவில் மலையில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஒரு அதிசய செய்தி, குற்றால அருவியைப் போல் இல்லாமல் சற்று இதமான சூடாக நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் விழுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்று அழகர் கோவிலிலும் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பல ஆய்வுகளும் நடத்தப்பட வேண்டும். 

கங்காரு

தெற்கு ஆஸ்திரேலியாவில் 1985 கால கட்டத்தில் இந்த கங்காரு படம் எடுக்கப்பட்டது. இந்த ஜீவன் உயிருடன் இருக்கின்றதா, இல்லையா என்பது தெரியவில்லை. அதைப் பார்த்தால் சில சமயங்களில் பரிதாபமும், அதன் மீது கருணையும் ஏற்படும். சில நேரங்களில் வேகமாக தத்தி ஓடுவதைப் பார்த்தால் அதனுடைய முயற்சிகளும், பாவனைகளும் நமக்கே சோர்வை நீக்கும். ஈழத்தைச் சேர்ந்த அன்பு நண்பர் இந்தக் காட்சியைக் கண்டு எனக்கு கங்காரு பொம்மையை பரிசாகவும் தந்தார். ஆஸ்திரேலியா என்று நினைத்தாலோ, தொலைபேசியில் அங்கிருந்து யாரும் அழைத்தாலோ இந்த புகைப்படக் காட்சி மனதில் படும்.

கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.  ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் இது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.

இயற்கையின் அருட்கொடை எழிலார்ந்த தென்குமரி

திரள்மணிக் கதிர்கள் வீசி
திசையாளும் ஆதவன்
தென்கடல் குமரித் தாயின்
திருவடித்தேடி வந்தாரே....
........................................
........................................

சீர்காழியின் இந்தப் பாடலைக் ஐஃபோனில் கேட்டுக்கொண்டு, இந்தியாவின் தென் எல்லையின் முனையில் உள்ள காந்தி மண்டப சாலையில் வைகறைப் பொழுதில் கதிரவன் உதயத்தைப் பார்த்துக்கொண்டே நடைப்பயிற்சியில் இருப்பது ஒரு அலாதியான வாழ்க்கையில் பெற்ற பேராகும். எப்படியும் மூன்று மாதத்திற்கு, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இச்சூழல் அவசியம் இருக்கக் கூடிய நிலையில் அமைத்துக்கொள்வதால் மனநிலையும், உடல்நிலையும் புத்தாக்கம் பெறுகிறது. இதற்காகவே இயற்கையை நாம் வணங்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=1Ab0w0hPuC0

Saturday, June 25, 2016

Emergency & Constitution

Emergency - Constitution of India - "Defaced & De-filed".

On this day in 1975, the government of Mrs. Indira Gandhi imposed the Emergency,the darkest day of India’s democracy.President Fakhruddin Ali Ahmed drew on Article 352 of the Constitution to declare a state of internal emergency. The presidential proclamation said “the security of India is threatened by internal disturbance”. Between June 26, 1975 and March 21, 1977, when the Emergency was in force, the government of Prime Minister Indira Gandhi assumed draconian powers and crushed all dissent. Hours before the proclamation — through the night of June 25-26, 1975, police arrested all major Opposition leaders, including Jaiprakash Narayan. In the days that followed, civil liberties were suspended, media censored, and amendments were brought that threatened to alter the basic structure of the Constitution. Draconian laws like MISA were strengthened. The government suspended the right to move court for enforcement of Fundamental Rights.

Why did Indira impose the Emergency?

Indira’s Congress won 352 seats in the 1971 elections, and her rivals led by the likes of Morarji Desai were decimated. On June 12, Allahabad High Court ruled on a petition filed by Bharatiya Lok Dal leader Raj Narain, declaring Indira’s election win from Rae Bareli void. As the Opposition called for her resignation, the PM appealed to the Supreme Court. The vacation bench of Justice V R Krishna Iyer gave a conditional stay on the HC order, ruling that she could remain as PM, but could not speak or vote in Parliament pending a decision by a larger bench.

Who opposed the Emergency?

JP was the face of the opposition. The Janata Front (old Congress, Jana Sangh, Bharatiya Lok Dal, Socialist Party), Akali Dal, CPM and DMK openly opposed it. Nani A Palkhiwala, counsel for Indira in her appeal against the HC ruling, returned the brief. Fali Nariman, who was Additional Solicitor General, quit. The RSS, Ananda Margis and Jamaat-e-Islami were banned. Naxalites faced the brunt of police brutality. Freedom fighters including Dr Sushila Nayyar, Acharya Kriplani and H V Kamath were arrested from Rajghat for protesting on Gandhi Jayanti. ‘Free JP’ signature campaigns were launched in the US and UK. Advertisements taken out in The Times of London and The New York Times. A long march, ‘Indians for Democracy’, was taken out from Liberty Bell, Philadelphia, to the UN in New York. Supreme Court Justice H R Khanna took a principled stand against attacks on the Constitution and attempts to subvert justice. He was the only dissenter in the five-member Bench that ruled against habeas corpus, allowing the government to detain a person indefinitely.

What did the Emergency do to the Constitution?

The 38th to 42nd amendments were passed during the Emergency. The 38th Amendment barred the review of proclamations of the Emergency, judicial review of overlapping proclamations, of ordinances promulgated by the President or by Governors, and of laws that contravened the Fundamental Rights. The 39th protected the Prime Minister from possible Supreme Court action resulting from her election case. The Amendment was placed in the Ninth Schedule, beyond judicial review. The 41st Amendment said no criminal proceedings “whatsoever” could lie against a President, Prime Minister, or Governor for acts before or during their terms of office. The 42nd Amendment gave unrestrained powers to Parliament to change the Constitution, and invalidated the Supreme Court ruling in the Keshavananda Bharti case that the government couldn’t change the basic structure of the Constitution. The Janata government brought in the 43rd and 44th Amendments to undo the damage.

Emergency -1975

On the night of June 25, 1975, the Emergency was proclaimed. The Union Cabinet, in the early hours of June 26, ratified the proclamation.அவசர நிலை (Emergency) …. 41 ஆண்டுகளுக்குப் பிறகு……..

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு காரணமாக சொல்லப்பட்டது அவருக்கு எதிரான அலகாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பு. அவரது உதவியாளரான ஆர்.கே. தவான், இந்திரா உயர் நீதி மன்ற தீர்ப்பை ஏற்கும் மன நிலையில் தான் இருந்ததாகவும், தனது இராஜினாமா கடிதத்தைக் கூட தயார் செய்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சக அமைச்சர்களும், தலைவர்களும் அவர் பதவியில் நீடித்திருக்கவே விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது. பின்னர் சித்தார்த் சங்கர் ரேயின் ஆலோசனைப்படித் தான் அவசர கால நிலை அமல் படுத்தும் சிந்தனையே ஏற்பட்டது என்பதும் அது குறித்து அப்போதைய ஜனாதிபதியிடம் ஆலோசிக்கப்பட்டது என்றும் அவரது ஒப்புதலின் பேரிலேயே அவசர நிலை பிரகடன அறிவிப்பின் வரைவு சித்தார்த் சங்கர் ரேயால் தயாரிக்கப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

சற்றே வரலாறை திரும்பிப் பார்ப்போம், அவசர நிலை பிரகடனம் குறித்தும், அதற்கான சூழல் குறித்தும் அறிந்து கொள்வோம்…..

1971 ஆம் ஆண்டு பொது தேர்தலில் பெருவாரியான மக்கள் ஆதரவோடு, “ வறுமையை ஒழிப்போம்” எனும் கோஷத்துடன், 352 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸை (இ) வெற்றி பெற செய்து இந்திரா ஆட்சிக்கு வந்தார்.. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேஷ் உருவாகி காரணமாக இருந்தார். உலக அரசியலில் இந்தியாவிற்கு நன்மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தார். அவரை “துர்கா தேவி” என வருணித்தார் அடல் பிகாரி வாஜ்பாய்.. தனது அரசியல் பாதையில் உன்னதமான இட்த்தை அடைந்திருந்தார் இந்திரா. இதே கால கட்டத்தில் அவருக்கு நீதி மன்றங்கலோடு மோதல் இருந்து வந்தது.சட்டப் போராட்டங்களில் வெற்ரி பெறாத நிலையில் நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கு இருந்த செல்வாக்கால் அரசியல் சாசனத் திருத்தங்கள் மூலமாக தனது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள எத்தனித்தார். உதாரணமாக, அரசியல் சாசனத் திருத்தம் 24 மற்றும் 26. குறிப்பாக மன்னர் மானிய ஒழிப்பு மசோதா உச்ச நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டவுடன் அரசியல் சாசனத் திருத்தம் 26ன் மூலம் மன்னர் மானிய ஒழிப்பைக் கொண்டு வந்தார். தனக்கு ஆதரவாக இருந்த நீதிபதிகளை பதவி உயர்வும் செய்தார். தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தின் இரு தூண்களான அரசும் நீதி துறையும் மோதல் போக்கைக் கொண்டிருந்தனர். இந்தப் போக்கு எதிர் கட்சிகளாலும் சார்பில்லாத அறிவு ஜீவிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

குஜராத்தில் துவங்கிய “நவ நிர்மாண்’ இயக்கம 1973-74 இல் மிகப் பெரிய மாணவரியக்கமாக உருவெடுத்து சிமன்பாய் பட்டேல் தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு குடியரசு தலைவராட்சி அமல் படுத்த காரணமாக அமைந்தது. பின்னர் 1975ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜனதா கூட்டணியால் தோற்கடிக்கப்பட்டது.

இதே போல் ஜெயபிரகாஷ் நாரயண் ஆதரவுடன் பீகார் அரசை எதிர்த்து ஒரு மாணவரியக்கம் போராட்ட்த்தில் இறங்கியது. எப்ரல் 1974 ல் ஜெயபிரகாஷ் நாரயண் ‘” முழுப் புரட்சி” என்ற கோஷத்துடன் போராட்ட்த்தைக் கடுமைப் படுத்தினார். இதில் மாணவர்கள் தொடங்கி தொழிலாளர்கள் பொது மக்களையும் காந்திய வழியில் அரசுக்கு எதிராக அறப் போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்தார். மாநில அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஜேபியின் கோரிக்கையை ஏற்க மறுத்தது மத்திய அரசு. மே மாதத்தில் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தலைமியில் இரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய போராட்ட்த்தில் ஈடுபட்டனர். இரயில்கள் ஓடவில்லை. இரும்புக் கரம் கொண்டு இந்த போராட்ட்த்தை ஒடுக்க எத்தனித்த்து இந்திராவின் அரசு. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், தொழிலாளர்களின் குடும்பங்களை அவர்களுக்களிக்கப்பட்டிருந்த வீடுகளிலிருந்து வெளியெற்றியது இந்திய அரசு. இதனால் பொது மக்களிடமும் தொழிலாளர்களிடமும் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட்து இந்திராவின் அரசு.

மக்கள் விரோதக் கொள்கைகளை கடை பிடிப்பதாக இந்திராவின் அரசு நாடாளுமன்றத்துக்குள்லும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட்து. அறுதிப் பெரும் பான்மை பெற்றிருந்தாலும் 10 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை சந்தித்தது இந்திராவின் அரசு.

ஜெயபிரகாஷ் நாராயன் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையில் கடுமையான போராட்டம் வெடித்தது. தொழிற்சங்கங்கள், மாணவர்கள் தில்லி தெருக்களை முற்றுகையிட்டனர். பாராளுமன்ற வலாகமும் பிரதமரின் இல்லமும் முற்றுகையிடப்பட்டது.

இந்த காலகட்டத்தில் தான் இந்திரா காந்தியால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இராஜ் நாரயண், அவர் மீது தேர்தல் முறைகேடுகளுக்கான வழக்கௌ ஒன்றை தொடுத்திருந்தார். தேர்தலின் போது அரசு நிர்வாகம் தவறாக பயன் படுத்தப்பட்ட்தாகவும், தேர்தல் முறை கேடுகள், மோசடிகளில் இந்திரா ஈடுபட்ட்தாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு அலகபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் ஜெகன் மோகன் சின்ஹா என்பவர் முன்னிலையில் நடை பெற்றது. இராஜ் நாராயணுக்காக சாந்தி பூஷன் வழக்காடினார். இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு பிரதமர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்யப்படுவதும் நிகழ்ந்தது.

ஜூன் 12, 1975 அன்று, வழக்குத் தொடர்ந்து நான்காண்டுகளுக்குப் பிறகு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இந்திரா காந்தியின் தேர்தலை ரத்து செய்து தீர்ப்பளித்தார் நீதியரசர் ஜெகன் மோகன் சின்ஹா. மேலும், ஆறாண்டு காலத்திர்கு இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். இத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் இந்திரா.

மேல் முறையீட்டை விசாரித்த நீதியரசர் கிருஷ்ண ஐயர் அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து இந்திராவின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து ஜூன் 24 1975 அன்று தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்பில் நாடளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நீதியரசர் இந்திரா பிரதமராகத் தொடர அனுமதியளித்தார். ஜூன் 25 அன்று, இந்திராவிற்கு எதிராக தில்லியில் மாபெரும் பேரணியை திரட்டினார் ஜெயபிரகாஷ் நாரயண். இந்த பேரணியில் ஜெயபிரகாஷ் பேசியது புரட்சியை தூண்டுவதாக இந்திராவின் அரசு கருதியது.

இந்த சூழலில் தான் ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்த பதிவின் முதல் பத்திகளில் குறிப்பிட்டவை நடந்தேறியன, சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. மிகவும் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்த அவசர நிலை பிரகடனம் அமைச்சரவையில் கூட விவாதிக்கப்படவில்லை, மறு நாள் காலையில் கூடிய அமைச்சரவை ஒப்புதலை மட்டுமே அளித்தது.
• அவசர நிலை பிரகடனத்திற்கு காரணிகளாக இந்திராவின் அரசு பட்டியலிட்டவை: பாகிஸ்தானுடன் போரை சந்தித்திருந்த இந்தியா தேசிய பாதுகாப்புக்கு சவால் உள்ளது
• பருவ மழை பொய்த்ததால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு அசாதாரண நிலை நிலவி வருகிறது,
• கச்சா எண்ணெய் விலையேற்றம் பற்றாக் குறை போன்றவைகளால் பொருளாதார வளர்ச்சியில் முடக்கம்
• எதிர் கட்சிகளின் தூண்டுதலால் நாடு முழுவதும் நடைப்பெற்ற வேலை நிறுத்தங்களும் அதனால் உற்பத்தியில் பாதிப்பு
• நாடு முழுவதும் உள்ள கொந்தளிப்பான நிலையை உள் நாட்டில் உள்ள சில சக்திகள் உருவாக்கியுள்ள நிலையில் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வாய்ப்பு

அன்று இருந்த அசாதாரண சூழல் என்ன என்பதை சற்று சிந்திப்போம், நமது மதிப்பீடுகளை அதனடிப்படையிலேயே கொள்வோம்…

Friday, June 24, 2016

Brexit

BREXIT or BREAK IT (Shackles)

World War-II gave a way for integration of Europe. May 1948, Hague Congress laid the foundation of the European Union (the EU) that finally appeared in its present form because of Treaty of Maastricht of 1992. UK was also its member. However people started criticizing the EU from very early for the reason that they considered the EU weakening nation state, its structure being more bureaucratic than democratic. 

The UK Independence Party (hereinafter called the UKIP), founded in 1991, under the leadership of Nigel Farage had ben opposing or criticizing the EU for reasons that the EU is a fundamentally un-democratic institution and wanting to regain sovereignty of the UK from the EU. The UKIP had been advocating leaving the EU while maintaining trading ties with other European countries. The party leadership has suggested a referendum on whether the UK should leave the EU. Article 50 (1) of the Lisbon Treaty allows that any Member State may decide to withdraw from the Union in accordance with its own constitutional requirements.

Other main issues those were being considered and propagated by the group wanting the UK leave the EU were rising prices of goods and services; dominance of EU in tax matters over the UK; cost of membership; poor contribution of EU in R&D spending in Britain; environmental regulations; condition of UK farmers; common Fisheries Policy; and many more.

Anyway, referendum was agreed upon 23 June, 2016 was the appointed day for voting. Nearly 47 million people were registered to vote in the referendum. The referendum ballot paper asked the following question: "Should the United Kingdom remain a member of the European Union or leave the European Union." Throughout the day of voting both sides were out trying to sway undecided voters. 72.2% of registered voters (i.e.46,501,241) cast their votes and 51.9% votes were polled for Leaving the EU while 48.1% of votes were polled in favour of staying member of the EU. Hence, the people of UK opted to Leave the EU.

Map of the UK shows the clear divide on the regional, cultural and economic basis. A northwest-southeast divide in social class inequalities existed in Great Britain at the start of the 21st century, with each of the seven social classes having higher rates of poor health in Wales, the North East and North West regions of England than elsewhere. Steve Doughty reported in Daily Mail on 12 October, 2007 on that the South-East bankrolls the rest of the country, but it gets fewer policemen, worse health services and shabbier care for the elderly than anywhere else. Report of two Economic Research Groups showed that each person in the South-East pays nearly £2,000 more to the Treasury than he or she receives back in public spending on services such as schools, hospitals and infrastructure projects. Since, the EU has made policies for free trade among member countries it is apparently catering to the rich, imperialist and corporate sector. Workers and poor are not on its priority list. This aspect also led to the voters wanting the UK to leave EU outnumber those were in favour of staying in the EU. 

But the result of this referendum has triggered a chain reaction of events. David Cameron, Prime Minister of the UK has been stepping down. British pound tumbles to 31-year low. Various leaders of different European countries have been worrying and now started deliberating to make EU more democratic and calling for reforms. German Chancellor Markel regrets and apprehends further division. Matteo Salvini, Italy's most prominent far-right politician also hails the Brexit vote as an example his country should follow. "Cheers to the bravery of free citizens," the leader of the anti-immigration, anti-E.U. Northern League wrote on Twitter. "Heart, head and pride beat lies, threats and blackmail. THANKS UK, now it is our turn #Brexit". Dutch parliamentary party leader Geert Weilders calls for Netherlands to hold referendum on its EU membership. French far-right leader Marine Le Pen says there should be a similar referendum about E.U. membership in France after Britons voted to leave the 28-nation bloc. Top European Union officials are hunkering down in Brussels trying to work out what to do next after the shock decision by British voters to leave the bloc. Spain’s acting Foreign Minister says his country should make the most of Britain’s decision to leave the European Union to press its claim for sovereignty of the disputed colony of Gibraltar.

Let’s see what happens next?

+---Malkeet Singh (23.06.2016)
மதுக்கரை யானை மகாராஜா சாவுக்குப் பின்னே 
-------------------------------------
ஊருக்குள் புகுந்து அட்டகாசம்... மக்களின் உயிர்களைப் பாதுகாக்க... ப்ளா ப்ளா ப்ளார்... இவனுங்களுக்கு காரணமா கிடைக்காது.

”#யானை சந்தனக்கூண்டில் தன்னைத் தானே மோதிக் கொண்டு தலையில் காயமடைந்து இறந்து விட்டது” வனத்துறை அறிவிப்பு.

யானைகளின் வழித்தடங்களை முதலாளிகளும், அரசுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து விட்டு, யானைகள் ஊருக்குள் வருகின்றன என்ற பிரச்சாரம் வேறு. உலகத்திற்கே அன்பைப் போதிக்கும் அசைவம் சாப்பிடாத யோகா குருக்களுக்கு காடுகளை அழிப்பதோ, காட்டு விலங்குகளை அலைக்கழிப்பதோ எந்த விதமான குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தாது.

இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி புலிகளைக் காப்போம்னு மத்திய அரசோட சேர்ந்து ஏர்டெல் உள்ளிட்ட பல கார்ப்பரேட்டுகளின் ஸ்பான்சருடன் தொடர்ச்சியாய் (உண்மையை மறைத்து) பரப்புரை செய்தார்கள்.
யானைகள் ஊருக்குள் வர்ரதுக்கு ஈஷா கோஷ்டிக்கும் நிறைய தொடர்பு உண்டு.யானைகள் வாழ்விடங்களை, வழித் தடங்களை 
ஆக்கிரமித்து மதில் சுவர் கட்டியுள்ளார்கள்,  
கோவை, மதுக்கரை மலைப் பகுதியில் !
இப்படித்தான் அமிர்தா, காருண்யா, ஈஷா, மற்றும் 22 மதம்பிடித்த  கல்லூரிகள், ஆக்கிரமிப்பாளர்களால் . . .
வனப்பகுதிகள் . . .

Referendum

Referendum is also people's right .it will be added our Constitution .it is basic for a democracy .#Referendums like this need not always lead to right decisions, especially if it is just simple majority.

Democracy should always be moderated with the wisdom of the wisemen. Otherwise, it will be "flip-flop" actions now and then, and ultimately chaos will set in.

After all people tend to give only reactive responses and those responses can only reflect the momentary decisions based on very recent incidents / issues. 

Moreover, with each and everyone's vote having equal weightage, the matured and considered opinion of a 60 years person and immature opinion of a 18 year old person are the same. 

Hence, the decisions based on such referendum can at best reflect the "mood" and not the reality.

In fact among all the good virtues of Democracy, the equal weightage for all votes is one major draw back.

To take care of such a draw back only, Upper Houses in the Parliamentary democracy have been introduced.
Referendum system will be needed in india.It is must;ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என்று 51.5 சதவீத வாக்காளர்கள் வாக்கு 
#brexitப்போன்ற "ஆமாம் / இல்லை" என்று தெளிவாக குறிப்பிடும் சில வாக்கெடுப்புகள் இந்தியாவிற்கும் அவசியம்... 
உதாரணமாக,
100% அன்னிய முதலீடு, அனுஆயுத விற்பனை குழுவில் சேருவது போன்ற முக்கியமான கொள்கை முடிவுகளை மக்களிடமே கேட்கலாம்...
Thanks to Histoy :யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் #யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார். பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர். ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி, ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர். சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை. பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியாளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன். 1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை. டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும், அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள். (யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், "யாஹ்வே" அல்லது "எல்" (ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர். கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று, இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது. யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில், யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா (மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரையில்,  யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும் (அல்ஜீரியா-மொரோக்கோ), குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர். நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன. இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது. கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம் (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பு, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமினை (அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர். Thanks; history .Source :

Thursday, June 23, 2016

UN Charter.

UN Charter.           ThrowbackThursday to 71 years ago and the original manuscript of the United Nations #Charter preamble, complete with handwritten notes.

On 26 June 1945, in the auditorium of the Veterans' Memorial Hall, the delegates filed up one by one to a huge round table on which the UN Charter lay. 

In the dazzling brilliance of powerful spotlights, each delegate affixed their signature. China, first victim of aggression by an Axis power, had the honour of signing first.

"The Charter of the United Nations which you have just signed," said US President Truman "is a solid structure upon which we can build a better world. History will honor you for it . . . With this Charter the world can begin to look forward to the time when all worthy human beings may be permitted to live decently as free people."

#uno

W. Somerset Maugham

“Humility is a virtue that is enjoined upon us. So far as the artist is concerned, with good reason; indeed, when he compares what he has done with what he wanted to do, when he compares his disappointing efforts with the great masterpieces of the world, he finds it the easiest of virtues to practice. Unless he is humble he cannot hope to improve. Self-satisfaction is fatal to him."
― W. Somerset Maugham, A Writer's Notebook

Filled with keen observations, autobiographical notes, and the seeds of many of Maugham's greatest works, A Writer's Notebook is a unique and exhilarating look into a great writer's mind at work. From nearly five decades, Somerset Maugham recorded an intimate journal. In it we see the budding of his incomparable vision and his remarkable career as a writer.

Br exit

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகலாமா என்பது தொடர்பான பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இது தொடர்பான செய்திகளை அறிய கூகிளிட்டு, மேலோட்டமாக பார்க்கும் போதே, குடியேற்றம்(immigration), அகதிகள் ஆகியவற்றை முன்னிறித்தியே, பிரிய வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு வேளை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போகும் படி வாக்களித்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் பல. அதில் ஒன்று உப்பும்மா பல்கலைகழங்களின் வருமானம். இத்தகைய கல்வி நிறுவங்களில் பெரும்பாலும் படிப்பது முழுக்கவும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் தான். 
28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டுமா என்பதற்கான  பொது வாக்கெடுப்பு  இன்று நடைபெறுகிறது.  பொது மக்களும், நாடும்  சம்பந்தப்படும் போதெல்லாம்  இது போன்ற வாக்கெடுப்பு நடக்கும் .மிகப்பெரிய ஜனநாயக நடை முறை பல நாடுகளில் இருப்பது மக்களின் ஜனநாயக உரிமைக்கு  கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகும். நாமும் மிகப்பெரிய ஜனநாயகத்தைப்பற்றி பெருமை படுகிறோம். நடைமுறையில் 31%  வாக்குகளை மட்டுமே பெற்று மிகப்பெரும்பான்மை பெற்றுள்ளதாக இறுமாப்புடன் ஒரு கட்சி ஆள்கிரதையும்  ஒப்பிட்டு பார்க்கும் போது நமது ஜனநாயக நடை முறை கேள்விக்குரியதாக  தெரிகிறது. ஒருமுறை தேர்ந்தெடுத்து விட்டால் அவர்கள் (இந்தியா, தமிழகம்)  என்னவேண்டுமானாலும் செய்யலாம் , எப்படி வேண்டுமானாலும்  பல்ட்டி அடிக்கலாம். நாம் கேட்டு மவுனியாகத்தான் இருக்க முடியும். .மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படாத சர்வதிகார மனப்பான்மை நம் நாட்டில் இருந்து வருகிறது.
அண்மையில் சுவிஸ் நாட்டில் இலவசம் சம்பந்தமாக மக்கள் கருத்து கேட்கப்பட்டது  .இன்று பிரிட்டன் மக்கள் தம் விருப்பத்தை  தெரிவிக்க இருக்கிறார்கள். இதனை இந்தியா உட்பட பல நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன. பொருளாதார பலனை விட ஆங்கிலேயர்கள் சமூக அடிப்படையில் பல பாதிப்புக்கு உள்ளாவதாக நினைக்கிறார்கள்.  இருந்த போதும் அரசியல் முதிர்ச்சி கொண்ட அம்மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதையே விரும்புவார்கள் என எண்ணத்தோன்றுகிறது. இன்றைய  பிரதமர் கெமரூன் அவர்கள் பிரிய வேண்டாம் என்கிறார் .ஆனாலும்  தமது தேர்தல் வாக்குறுதிப்படி பொதுவாக்கெடுப்புக்கு உடன் படுவது பாராட்டுக்குரியதாகும்.#brexit
சுகமான, சுமையான சுடுமணல் பயணமும் மகிழ்ச்சி அளிக்கிறது. நெஞ்சுரத்தோடு நேர்மையான தொலைநோக்கு பயணத்தில் அர்த்தங்களும், கற்றலும், புரிதலும் கிடைக்கின்றன. வானம் பார்த்த கரிசல் கந்தக பூமியில் பிறந்து ;இந்த பாலைநிலப் பயணம் தெம்பாகத்தான் இருக்கின்றது.

கச்சத் தீவு

திரு. ஆதனூர் சோழன் இன்றைக்கு தன் முகநூல் பதிவில், இந்திரா காந்தி அவர்கள் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கவேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று வினா எழுப்பியிருந்தார். கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்த விவகாரத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஸ்வரன் சிங்கும், அன்றைய வெளி விவகாரத் துறை அமைச்சகத்தின் செயலாளர் கேவல் சிங்கும் ஆவார்கள். 1970களின் இறுதிக் காலக்கட்டத்தில் ஓய்வுபெற்றபின் கேவல் சிங்கை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவராக இருந்த திரு. ஜேம்ஸோடு டெல்லியில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது கச்சத்தீவை கொடுக்கவேண்டிய நிர்பந்தம் ஏன், எப்படி ஏற்பட்டது என்று கேவல் சிங் பல செய்திகளை கூறினார்.

இந்து மகா சமுத்திரத்தில் டிகோ கர்சியாவில் அமெரிக்க இராணுவதளத்தை அப்புறப்படுத்துவதற்கு இலங்கையின் ஆதரவு இந்தியாவிற்கு தேவைப்பட்டது. அமெரிக்க அரசு, வாய்ஸ் ஆப் அமெரிக்காவுக்கும், எண்ணெய் கிடங்கு அமைக்கவும் இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தைக் குத்தகைக்கு கேட்டிருந்தது. திரிகோணமலை துறைமுகம் பாறைகளால் அமைந்த இயற்கை துறைமுகம் ஆகும். அங்கு கப்பல்கள் வந்து செல்வதை சரியாக கண்காணிக்க முடியாது. இந்த துறைமுகத்தை கையகப்படுத்திக்கொண்டால் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் எதிர்காலத்தில் கொடிகட்டி பறக்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா, இலங்கை அரசோடு நட்புறவு காட்டியது. அப்போது இந்தியா ரஷ்யாவோடு இராணுவ ஒப்பந்தங்களோடு, நட்பு நாடாக விளங்கியது. அந்த காலகட்டத்திற்கு சற்று முன்பு ரஷ்யாவின் உதவியோடு பங்களாதேஷ் உதயமாக இந்தியா காரணமாக இருந்தது. இப்படியான நெருக்கடியில் அமெரிக்க-இந்திய உறவு 1964, கென்னடி காலத்திற்கு பிறகு சுமூகமாக இல்லாமல் பல பாதிப்புகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. பல புவி அரசியல் (Geo Politics)  காரணங்களால் இந்தியா இலங்கையோடு நட்புறவோடு இருக்கவேண்டும் என்ற நிலை. இச்சூழலில் இலங்கை அதிபர் பண்டாரநாயகா கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார் என்று கேவல் சிங் கூறினார். அன்றைக்கு தமிழகத்தை ஆண்ட திமுக அரசின் எதிர்ப்பை மீறியும் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை என்ன காரணங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேவல்சிங்கிடம் அப்போது நான் குறிப்பிட்டேன்.  மேலும் கச்சத் தீவை கொடுத்து விட்டீர்கள். எதிர்காலத்தில் பல பாதுகாப்பு பாதிப்புகள் இந்தியாவிற்கு ஏற்படும் என்று அவரிடம் சொன்னபோது, தலையை மட்டும் சற்று அசைத்தார். ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ஏற்புடையது இல்லை.

கச்சத்தீவு குறித்து நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் இதோ:

http://ksradhakrishnan.in/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80/

http://ksradhakrishnan.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/

Wednesday, June 22, 2016

Srilankatamils issue

காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதிகள் : ஐ.நாவில் பன்னாட்டு நிபுணர் குழு Monitoring Accountability Panel (MAP)   தெரிவிப்பு !

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றவில்லை என பன்னாட்டு நிபுணர் குழு ஐ.நா மனித உரிமைச்சபையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளையும், நடைமுறைப்படுத்தலைக் கண்காணிக்கும் வகையில் நாடுகடந்த #தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிபுணர்களை குழுவே Monitoring Accountability Panel (MAP) க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சர்வதேச நீதிபதியாகவும், விசாரணை மற்றும் மேல்முறையீட்டு வழக்கறிஞராகவும் இருக்கின்ற ஜெப்றி ரொபர்ட்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த உப மாநட்டில், கம்போடியாவின் கலப்பு தீர்பாயத்தின் பொறிமுறையில் நீதிமன்றகளின் சிறப்பு விசாரணை மன்றங்களில் பொதுச் சமுதாய நீதி முன்முயற்சிக்கான ஆலோசகராக இருக்கின்ற ஹீதர் ரியான் அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை எதிர்வரும் 29ம் நாளன்று மனித உரிமைச்சபை ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன் அவர்கள் சபையில் முன்வைக்க இருக்கின்ற நிலையில், இந்த பன்னாட்டு நிபுணர் குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஐ.நா மனித உரிமைச்சபைக்கு சிறிலங்கா வழங்கியிருந்த நீதிவழங்யிருந்த வாக்குறுதிகளில் காத்திரமான எதனையும் சிறிலங்கா செய்யவில்லை என குற்றஞ்சாட்டியிருந்த இந்த நிபுணர் குழு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது அனைத்துலக நீதிப்பொறிமுறை ஒன்றின் ஊடாகவே பெற முடியும் எனவும் தெரிவித்திருந்தது.#srilankatamils

கச்சத்தீவு

தமிழக நிலமோ : 50,216 mi²
கச்சத்தீவு நிலமோ : 0.44 mi² 
14 நூற்றாண்டில்   உருவான எரிமலை குழம்பு தான் #கச்சத்தீவு .. கச்சத்தீவு  total area is only 285-acres   ie.,0.0008%  of tamil nadu's  land 

கச்சத்தீவு  ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கலைஞர்கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)
2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)
5. வெங்கடசாமி ,ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)
9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)
10. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
11. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)
12. சக்தி மோகன் (பா.பிளாக்)
13. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது: "இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.''

எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள் இ.காங்கிரஸ் உட்பட. 

அ.தி.மு.க. பிரதிநிதி, Aranganaigam தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார்.

- Radhakrishnan KS

Tuesday, June 21, 2016

பாராளுமன்ற செயலாளர் பதவி

டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பாராளுமன்ற செயலாளர் பதவி என்பதை உருவாக்கியுள்ளது. இந்தப் பதவிக்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றார். இந்த பாராளுமன்ற செயலாளர் பதவியைக் குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்படவில்லை. இவர்கள் அரசுக் கோப்புகளை கையாளும்போது, சில ரகசியங்களைக் காப்பாற்றப்படவேண்டும். அதற்கான ரகசியக் காப்புப் பிரமாணத்தை இவர்கள் முறையாக எடுத்துக்கொள்வதுமில்லை. நீதிமன்றங்களும் இதை ரத்து செய்துள்ளன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலும் இம்மாதிரி பதவிகளை உருவாக்கப்பட்டது. இது முதன்முதலாக 1960ல் குஜராத்தில் நடைமுறைக்கு வந்தது. தனி அமைச்சர்களைப் போன்று தனித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. அமைச்சர்களுக்கு வழங்கப்படுகின்ற வசதிகளும், அதிகாரங்களும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற ஆதாயத்தோடு மற்றொரு ஆதாயம் தரும் பதவி எப்படி சாத்தியப்படும் என்பதுதான் இன்றைய கேள்வி.  2005ல் இமாச்சலப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற செயலாளர்கள் பதவிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் தடை செய்தது. அதேபோல 2009ல் கோவாவிலும், 2015ல் தெலுங்கானாவிலும் அதே ஆண்டில் மேற்கு வங்கத்திலும், ஹரியானாவிலும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற செயலாளர்கள் என்ற பதவியை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரித்து ரத்து செய்தன. ஆனால் 2015 ஹரியானாவில் மட்டும் வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது.

டெல்லியைப் போன்று குஜராத்தில் 5 பேர், ராஜஸ்தானில் 5 பேர் பாராளுமன்ற செயலாளர் பொறுப்பில் உள்ளனர். நாகலாந்தில் 60 எம்.எல்.ஏ.க்களில் 24 பேர் பாராளுமன்ற செயலாளர்கள் என்று நியமிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 60 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர், மேகாலயாவில் 18 பேர், மணிப்பூரில் 5 பேர் பாராளுமன்ற செயலாளர்களாக உள்ளனர். இவை யாவும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், தனிப்பட்டவர்களின் சுயநலங்களுக்காக இந்த பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன. டெல்லியில் முன் தேதியிட்டு 21 பேரை இப்பதவிக்கு அமர்த்தியுள்ளது சட்டப்படி சாத்தியமில்லை என்ற குடியரசுத் தலைவர் இந்த சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார். இதே போல நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு காதி போர்டு தலைவர், மகளிர் ஆணையத் தலைவர் என்று மத்திய சர்க்காரும் கடந்த காலத்தில் தனி மனிதரை திருப்திப் படுத்த வழங்கியதும் உண்டு. 1959ல் நேரு ஆட்சிக்காலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி ஆதாயம் தரும் பதவிகள் எவை என்று பட்டியலிட்டது. அதன் பின்புதான் இது குறித்தான கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் நடைமுறைக்கு வந்தன. இப்போது டெல்லி மாநில நாடாளுமன்ற செயலாளர்கள் பதவிகள் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் கெஜ்ரிவாலுக்கும், பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவுக்கும் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஒரு சில எம்.எல்.ஏ.க்களை திருப்திப்படுத்த கெஜ்ரிவால் பாராளுமன்ற செயலாளர்கள் என்று நியமித்தார். இந்தப் பதவி திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது. எனவே இது குறித்தான நாடு தழுவிய விவாதங்கள் நடத்தி இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஏற்கனவே உயர்நீதிமன்றங்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளன. இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் நடுப்பக்க பத்தியாக பி.டி.டி. ஆச்சாரி எழுதிய கட்டுரை இதோ:

http://www.thehindu.com/opinion/lead/its-about-propriety-not-constitutionality/article8752584.ece?homepage=true

ஒரு சமய தேர்தல் (தேர்தல் சீர்திருத்தம்)

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தவேண்டும் என்ற நிலையில் ஒரு சமய தேர்தல் என்ற பரிந்துரையை லா கமிஷன் பரிந்துரைத்தும் நாடாளுமன்ற குழுவும் பரிந்துரைத்தும் இந்திய தேர்தல் ஆணையம் இது போன்ற "ஒரு சமய தேர்தல்" நடத்த தயார் என்று குறிப்பிட்டுள்ளது. இது வரவேற்கக் கூடிய நடவடிக்கை ஆகும். ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் என்றால் நாட்டினுடைய கஜானாவிலிருந்து செலவு குறையும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்தலுடைய கால விரயம் என்ற பல பிரச்சினைகளை தவிர்க்க முடியும். ஒரு சில மாநில அரசாங்கம் கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்கின்றார்கள். கவிழ்ந்து விட்ட எஞ்சிய காலத்தில் அடுத்த தேர்தல் நடத்தும் வரை தேசிய அரசாங்கம் (National Government) என்ற நிலையை உருவாக்கலாம். தேசிய அரசாங்கம் பிரச்சினை குறித்து ஜனதா ஆட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் கவிழ்ந்தபோது விவாதிக்கப்பட்ட ஒரு கருத்தாகும். இது குறித்து நேற்றைக்கு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தம் குறித்து தாக்கல் செய்த எனது வழக்கு குறித்து விவாதித்தபோது தேர்தல் ஆணையம் ஒரு சமய தேர்தலுக்கு ஒத்துக்கொண்டது ஒரு மகிழ்ச்சியான விஷயம். இத்தோடு விகிதாச்சார பிரதிநிதித்துவம், அரசே வேட்பாளர்களுக்கு செலவு செய்தல் (State funding of election), வாக்களிப்பதை கட்டாயமாக்குதல், வேட்பாளர்களுடைய தகுதித் தன்மை, கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது, ஒவ்வொரு மாநிலத்திலும் மேலவையை உருவாக்குவது என்ற பல தேர்தல் சீர்திருத்தங்கள் வேண்டும் என்று நான் பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அது குறித்து முழுமையான விவரங்களை பின் நாட்களில் பதிவு செய்கின்றேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1984 வரை சட்டமன்றத் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் ஒன்றாகவே நடைபெற்று வந்தது.

ராஜ்ய சபா தேர்தல்

இன்றைய அரசியலில் பண பலம், குண்டர்கள் என வைத்துக் கொண்டுதான் தேர்தலை சந்தித்து பல கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்கு செல்கின்றனர். ஆனால் ராஜ்ய சபா தேர்தலில் திறமையானவர்கள், பிரச்சினைகளை பேசக் கூடியவர்கள், ஆற்றலாளர்கள் செல்ல வேண்டும். ஆனால் இன்றைக்கு என்ன நடக்கின்றது? ராஜ்ய சபா உறுப்பினர் பதவி விற்பனையாகிவிட்டது. இந்தியாவின் கடனாளி மல்லையா, எம்.ஏ.எம். ராமசாமி போன்றவர்கள் மருத்துவ கல்லூரியில் கேபிடேசன் பணத்தைக் கட்டி சீட்டு வாங்குவதைப் போல ராஜ்ய சபாவுக்கு சென்றதும் உண்டு. இது அபத்தமான செயல் அல்லவா? திறமையானவர்கள், பொருத்தமானவர்கள் செல்ல வேண்டிய அவைக்கு பணத்தைக் கொடுத்து ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெறுவது என்ன நியாயம்? எப்படியோ கையை, காலைப் பிடித்து தகுதியில்லாதவர்கள் எல்லாம் ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஆகிவிடுகிறார்கள். 

மாநிலம் விட்டு மாநிலம் மாறி ராஜ்ய சபா உறுப்பினர்களாகவும் ஆகிவிடுகின்றனர். இந்தியாவில் ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவி மாநிலத்திற்கு மாநிலம் எண்ணிக்கையில் வித்தியாசமாக உள்ளன. ஒன்றுபட்ட உத்தரப் பிரதேசத்திற்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம்.  ஆஸ்திரேலியாவில் எல்லா மாநிலங்களுக்கும் சரிசமமாக மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளன. அதே போல இந்தியாவிலும் சமஷ்டி அமைப்பு என்ற நிலையில் மாநிலங்களவை என்ற பெயரில் இருக்கின்ற அவைக்கு கூடுதல் குறைவு இல்லாமல் சரிசமமாக அத்தனை மாநிலங்களுக்கம் உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும். இதை முறைப்படுத்தி அந்த அவைக்கு செல்லும் உறுப்பினர்களுடைய தகுதியையும், ஆற்றலையும் அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மாநிலங்களவையைப் போன்று இருந்த மேலவையை நடிகை நிர்மலாவை உறுப்பினராக்க முடியவில்லையே என்ற காழ்ப்புணர்ச்சியில் எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார். இந்திய ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் அவைகள் இரண்டு அவைகள் (Bicameral) ஆகும். இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு மேலவையை ஒழித்துள்ளனர். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் மேலவையை ஒழித்தார். நுண்மான்நுழைபுலம் கொண்டவர்கள் பங்கபெறவேண்டிய மேலவை தகுதியற்ற சில அரசியல் தலைவர்களால் ஒழிக்கப்படுகின்றன.

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...