200 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள செண்பகவல்லி தடுப்பணையை கேரள வனத்துறையினர் இடித்துள்ளனர். நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெற்ற இத்திட்டம் முடக்கப்பட்டுள்ளது. இதை சீர்படுத்தக் கோரி விவசாயிகளின் சங்கத்தின் சார்பில் வரும் 15.6.2016 அன்று சங்கரன்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். விவசாய சங்கத்தினர் இதை முன்னின்று நடத்த உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதில் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கலந்துகொள்ள கேட்டுக் கொண்டுள்ளோம். அக்கறையுள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- கே.எஸ். இராதாகிருஷ்ணன்
No comments:
Post a Comment