Tuesday, June 14, 2016

விஷ்ணு சித்தர்

ஸ்ரீவல்லப தேவன் என்ற பாண்டிய மன்னனுக்கு, ஆன்மீகத் தெளிவு பெற ஒரு ஒரு அரங்கம் அமைத்து பெரியோர்களையும் ஞானிகளையும் வரவழைத்தான்.
சமயங்களின் சாரத்தை சரியாக விளக்குபவருக்கு தோரணவாயிலில் உள்ள கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் பொன்னும் மணியும் நிறைந்த பொற்கிழி. கடவுள் சித்தப்படி உரியதாகும் என்று ஏற்பாடாயிற்று. பலர் வந்து விளக்கங்கள் கொடுத்தும் கம்பம் அசையவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்திர சாயிக்கு, நந்தவனத்திலிருந்து பூக்களைப் பறித்து மாலை காட்டி சமர்பித்துக்கொண்டிருந்தார்
விஷ்ணுசித்தர் என்ற பக்தர். பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர் கனவில் தோன்றிய இறைவன் ”மதுரை சென்று பொற்கிழியைப் பெறுவாயாக” என்று கூறினார்.

”வேத சாஸ்திரங்களை அறிந்தவருக்கல்லவா இப்போட்டி இதில் எனக்கு ஏது இடம்” என்றார் விஷ்ணு சித்தர். “உண்மையை நீதான் காட்டுவாய் செல்” என்றார் இறைவன்.

மதுரை சென்ற விஷ்ணு சித்தர் பண்டிதர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து, இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளான், அவனைத் துதிக்காத நாள் வீணாகிப் போன நாளே” என்று விளக்க, பொற்கிழி கட்டிய கம்பம் அவர் அருகே வளைந்து சாய்ந்தது. மன்னன் மகிழ்ந்து பொற்கிழியை அவருக்களித்து, பட்டத்து யானைமேல் ஏற்றி நகர்வலம் வரும் சிறப்பைச் செய்தான். அச்சமயம் தன் உண்மை பக்தன் பெற்ற பெருமையைக் காண லஷ்மி தேவியுடன் விஷ்ணு பகவான் நேரில் காட்சியளித்தார். அவர்மீது பொங்கிய தமது அன்பின் காரணமாக

”பல்லாண்டு, பல்லாண்டு,பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திந்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வித் திருக்கப்பு"


என ஆரம்பித்து பல பாடல்களைப் பாடினார். இதுவே மங்களாசாசனப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

இவரே பெரியாழ்வார், என்றும் பல்லாண்டு பாடிய பட்டர்பிரான் என்றும் அழைக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...