Saturday, June 11, 2016

உலகில் அமைதியான நாடு எது?

ஆஸ்திரேலியாவை தலைமை இடமாகக்கொண்ட Institute for Economics and Peace - பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச சிந்தனை மையம் அண்மையில் அமைதியான நாடுகளை ஆய்வு செய்து பட்டியலிட்டது. இதில் ஆஸ்திரேலியா 15 ஆம் இடத்தைப் பிடித்தது. மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்ற அந்த பட்டியலில் ஐஎஸ் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மிகுந்த அமைதி குறைந்த நாடாக இடம் பெற்றுள்ளது. உலகளவில் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 141-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இந்தியா 2 இடங்களில் முன்னேறியிருந்தாலும், நாட்டின் அமைதிக்கான புள்ளி மிகவும் சரிந்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை 97ஆவது இடைத்தைப் பிடித்தது. உலகின் மிக அமைதியான நாடாக ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக டென்மார்க், ஆஸ்திரியா இடம் பெற்றுள்ளன. நான்காம் இடத்தை நமது அருகாமை நாடு நியூசிலாந்து பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...