Wednesday, June 29, 2016

டி.ஆர். மகாலிங்கம் அன்றைய வெள்ளித்திரையின் ஆளுமை.

டி.ஆர்.மகாலிங்கம்....... 1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர்.
அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி.கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்களில் கூடியுள்ள மக்கள் அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் பாடிப் பழகியவர்கள். இனிமையும் குன்றாது பாடினார்கள். 1937ல் நந்தகுமார் என்ற படம் மூலமாக திரையுலகில் பிரவேசித்தார். பல படங்களில் நாயகனாகவும் பிற்பாடு குணச்சித்திர, புராண வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். 1945ல் வந்த ஸ்ரீவள்ளி படத்தில் முருகக் கடவுள் வேடத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவரது கலைப் பயணத்தில் சில படங்கள்: பூலோகரம்பை, நாம் இருவர், வேதாள உலகம், ஞானசௌந்தரி, பவளக்கொடி, லைலா மஜ்னு, இதயகீதம், பாரிஜாதம், மோகனசுந்தரம், மாலை இட்ட மங்கை, ஆடவந்த தெய்வம், கவலை இல்லாத மனிதன், ரத்தினபுரி இளவரசி, திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜ சோழன், திருமலைத் தெய்வம், கிருஷ்ணலீலை....... விஸ்வநாதன் ராமூமூர்த்தி இசையில் இவர் அருமையாகப் பாடிய “செந்தமிழ் தேன் மொழியாள்” பாடல் இன்றளவும் மெல்லிசை மேடைக் கச்சேரிகளில் தவறாமல் பாடப்படுகின்றது. இவரது ஹிட் பாடல்கள் பல. அவற்றில் சில: எங்கள் திராவிடப் பொன்னாடே...., இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...., தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே...., நமச்சிவாய என்று சொல்வோமே..... இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு இவர் குரல் மிகவும் பிடித்தமானதால் நிறைய வாய்ப்பு கொடுத்தார். நானன்றி யார் வருவார் என்ற பாடலை மெலடியாகப் பாடி அசத்தியிருப்பார். இவர் மறைந்த ஆண்டு 1978.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...