Sunday, June 12, 2016

கலித்தொகை பாவின் துள்ளல் நடை

பனிக்காலம் முடிந்து இளவேனில் காலம் வருவதைப் பற்றி தோழி தலைவியிடம் மகிழ்வோடு கூறுகிறாள்.

தலைவனைப் பிரிந்து வாடும் உன்னுடைய துயர் தீர்க்கும் மருந்தாக இளவேனில் வருகிறது. பின்னிக் கிடக்கும் காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் வாய்நீரை விட இனிமையான தண்ணீர் தரும் அருவியைப் பார். அதன் அருகே உள்ள முல்லைக் கொடியின் பூக்கள் எல்லாம் “என்னை எடுத்து சூடிக் கொள்ளேன்!” எனத் தலைவனுக்காகத் தூது சொல்வது போல் இருக்கிறது. வா! நமது கவலையை விட்டு, இந்த இளவேனில் பருவத்திற்கு விருந்து வைப்போம்.

பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே!

-கலித்தொகைப் பாடல்களில் உள்ள துள்ளல் நடையையும், அப்பாடல்கள் தரும் அகவுணர்வையும் எந்த விளக்கவுரையினாலும் தர முடியாது .

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...