Sunday, June 12, 2016

இறைவியும், அவள் ஒரு தொடர்கதையும்

இறைவியை கொண்டாடுகிறவர்கள் கொஞ்சம் 1974ல் வெளிவந்த பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை" பார்த்தால் நலம்.

நண்பர் ஒருவர் இப்படம் வெளியான 3.6.2016 அன்றே என்னை வலியுறுத்தி அழைத்து சென்றார். வித்தியாசமான படம்தான்.

பலரும் இறைவி படத்தில் காதாப்பாத்திரங்கள் அருமை, வசனம் சூப்பர், பெண்மையை போற்றும் கதை என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் 38 ஆண்டுகளுக்கு முன்பு வந்த "அவள் ஒரு தொடர்கதை" படத்தின் கதை, கதாப்பாத்திரம், பாடல்கள், வசனம் இவைகளுக்கு அருகில் கூட "இறைவி" படம் நிற்க முடியாது. சவாலாகவே சொல்கிறேன் இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் அப்படி ஒரு படத்தை யாராலும் எடுக்க முடியாது .

குடிகார அண்ணன், குருட்டு தம்பி, விதவை சகோதரி, கல்யாணமாகாத தங்கை, அம்மா, அண்ணன் குடும்பம் என்று அத்தனை போரையும் துக்கி சுமக்கும் தோணியாக கவிதா (அறிமுக நாயகி சுஜாதா). திமிரும் ஆணவமும் பிடித்தவராக காட்டப்பட்டு இருப்பார். ஆனால் அவருக்கான கனவுகள், காதல், ஏமாற்றங்கள் என்று நெஞ்சில் நீங்க இடம் பிடிக்கிறார் .

இந்த படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் தான். பலமுறை இந்த படத்தை நான் பார்த்து இருந்தாலும் இறைவி படம் பார்த்து விட்டு வந்த பின்பு இரண்டு முறை பார்த்துவிட்டேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். இறுதி காட்சியில் அவள் ஒரு தொடர்கதை ஏற்படுத்திய பாதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட இறைவி ஏற்படுத்தவில்லை.

ஒரு வசனம் மட்டும் மனதை தீண்டியது. உன்னோடு படுப்பேன், உன்னோடு வாழமாட்டேன் என்பதுதான். இது முன்நவீனத்துவமா? பின்நவீனத்துவமா? எதில் அடங்கும்?

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...