Thursday, June 23, 2016

Br exit

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகலாமா என்பது தொடர்பான பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இது தொடர்பான செய்திகளை அறிய கூகிளிட்டு, மேலோட்டமாக பார்க்கும் போதே, குடியேற்றம்(immigration), அகதிகள் ஆகியவற்றை முன்னிறித்தியே, பிரிய வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு வேளை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போகும் படி வாக்களித்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் பல. அதில் ஒன்று உப்பும்மா பல்கலைகழங்களின் வருமானம். இத்தகைய கல்வி நிறுவங்களில் பெரும்பாலும் படிப்பது முழுக்கவும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆட்கள் தான். 
28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டுமா என்பதற்கான  பொது வாக்கெடுப்பு  இன்று நடைபெறுகிறது.  பொது மக்களும், நாடும்  சம்பந்தப்படும் போதெல்லாம்  இது போன்ற வாக்கெடுப்பு நடக்கும் .மிகப்பெரிய ஜனநாயக நடை முறை பல நாடுகளில் இருப்பது மக்களின் ஜனநாயக உரிமைக்கு  கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகும். நாமும் மிகப்பெரிய ஜனநாயகத்தைப்பற்றி பெருமை படுகிறோம். நடைமுறையில் 31%  வாக்குகளை மட்டுமே பெற்று மிகப்பெரும்பான்மை பெற்றுள்ளதாக இறுமாப்புடன் ஒரு கட்சி ஆள்கிரதையும்  ஒப்பிட்டு பார்க்கும் போது நமது ஜனநாயக நடை முறை கேள்விக்குரியதாக  தெரிகிறது. ஒருமுறை தேர்ந்தெடுத்து விட்டால் அவர்கள் (இந்தியா, தமிழகம்)  என்னவேண்டுமானாலும் செய்யலாம் , எப்படி வேண்டுமானாலும்  பல்ட்டி அடிக்கலாம். நாம் கேட்டு மவுனியாகத்தான் இருக்க முடியும். .மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படாத சர்வதிகார மனப்பான்மை நம் நாட்டில் இருந்து வருகிறது.
அண்மையில் சுவிஸ் நாட்டில் இலவசம் சம்பந்தமாக மக்கள் கருத்து கேட்கப்பட்டது  .இன்று பிரிட்டன் மக்கள் தம் விருப்பத்தை  தெரிவிக்க இருக்கிறார்கள். இதனை இந்தியா உட்பட பல நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன. பொருளாதார பலனை விட ஆங்கிலேயர்கள் சமூக அடிப்படையில் பல பாதிப்புக்கு உள்ளாவதாக நினைக்கிறார்கள்.  இருந்த போதும் அரசியல் முதிர்ச்சி கொண்ட அம்மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதையே விரும்புவார்கள் என எண்ணத்தோன்றுகிறது. இன்றைய  பிரதமர் கெமரூன் அவர்கள் பிரிய வேண்டாம் என்கிறார் .ஆனாலும்  தமது தேர்தல் வாக்குறுதிப்படி பொதுவாக்கெடுப்புக்கு உடன் படுவது பாராட்டுக்குரியதாகும்.#brexit

No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...