Sunday, June 19, 2016

யாழ் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பாவின் பெயர்

யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் #துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம்  திறக்க வைத்துள்ளது.

1974ம் ஆண்டில் ஜனவரி 3ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை #யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது.  இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர். சிங்கள அரசோடு சேர்ந்து இந்த மாநாட்டைத் யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிரமாக செயல்பட்டார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் மீது சிங்கள காவல்படையை ஏவி 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் அவரே காரணம்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் சி. நந்தகுமார், வே. கேசவராசன், பு. சரவணபவன், இ. சிவானந்தம், வ. யோகநாதன், இ. தேவரட்னம், பி. சிக்மறிலிங்கம், சி. ஆறுமுகம், சி. பொன்னுத்துரை ஆகியோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பா இதை கண்டுக்கொள்ளக் கூட இல்லை. அவர் இந்தத் துக்கத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினார். சிங்கள அரசாங்கமும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. இங்கே சாகடிக்கப்பட்ட 9 தியாகிகளுக்கு நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டது.

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டினால் அது எத்தகைய மன்னிக்க முடியாத செயலோ, அதைப் போன்ற செயல்தான் யாழ் திடலுக்கு துரையப்பாவின் பெயரைச் சூட்டியதாகும்.

இதே திடலில் படுகொலையான 9  தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் இடித்துத் தகர்த்துவிட்டது.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...