Wednesday, June 14, 2017

காவிரி

காவிரி:

மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 மிகப்பெரிய அணைகளை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடகா, அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து விட்டது. அதை இன்னும் 15 நாட்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்று கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் செயச்சந்நதிரா அறிவித்துள்ளார்.
#மேகதாது அணையின் உயரம் 441.8 மீட்டர் [1546 அடி உயரம்]. அதில் 75 டி.எம்.சி நீரை தேக்க முடியும். இது நம் மேட்டூர் அணையின் கொள்ளளவை விட மிக அதிகம்.
#ராசிமணல், #சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ள 3 அணைகள் மூலம் மேலும் 45 டி.எம்.சி நீர் தேக்கப்படும்.

இதன் மூலம் தமிழகத்திற்கான காவிரி நீர் வரத்து அடியோடு நின்று விடும். பெருமழை காலங்களில் கூட ஒரு சொட்டு நீர் கிடைக்காது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் விவசாயம் அழிந்து முற்றிலும் பாலைவனமாகும்.
கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.
நீரின்றி வறண்டு போன நிலங்களால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உணவின்றி மடியும்.
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து செத்து மடிவர்.
அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை பன்மடங்கு உயரும்.[ஏனெனில் அவை அனைத்தும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து முற்றிலும் இறக்குமதி செய்யப்பட வேண்டும்]. 
உணவுப்பஞ்சமும் தலைவிரித்தாடும்.
ஒட்டு மொத்த தமிழக மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

கர்நாடகாவின் இந்த மனித நேயமற்ற செயலுக்கு மத்திய அரசும் துணை போகிறது.
தமிழக அரசியல்வாதிகள் கர்நாடக அரசிடம் பணம் பெற்றுக்கொண்டு இது  பற்றி போராட மறுக்கின்றனர். 

வரும் மே 9ஆம் தேதி பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டமானது கர்நாடக அரசின் சார்பில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

‘’*தூக்குக்கு தூக்கு*’’

‘’*தூக்குக்கு தூக்கு*’’                இராண்டாம் பதிப்பு வெளிவருகிறது.