Sunday, June 18, 2017

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பிரான்சுவா ஹுட்டார்ட் மறைவு.

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய பெல்ஜிய நாட்டு எமிரேட்ஸ் பேராசிரியர் பிரான்சுவா ஹுட்டார்ட் தனது 92வது வயதில் கியூட்டோவில் மறைந்தார். 2013 டிசம்பரில் ஜெர்மன் நாட்டில் பிரேமன் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தை அமைய காரணமானவர். 

உலகெங்கும் உள்ள மனித உரிமைகளுக்காக களப்பணியாற்றியவர். 
ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விவசாயிகள், தொழிலாளிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கெல்லாம் சமூக பொருளாதார மனித உரிமைகளை மீட்க பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். 

கியூபா அதிபராக இருந்த ஃபிடல் கேஸ்ட்ரோ, வெனிசூலாவின் அதிபர் சாவேஸ் போன்றோர்களுடன் நட்பு பாரட்டியவர். அவர் மறைவுக்கு முன் ஈக்குவேடரில் ஈழத்தமிழர்கள் பிரச்சனை குறித்தான கூட்டத்தில் இறுதியாக கலந்து கொண்டு தன்னுடைய வாழ்வை முடித்தார்.

#பிரான்சுவா_ஹுட்டார்ட்
#ஈழத்தமிழர்கள்
#இனப்படுகொலை
#francois_houtart
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
18-06-2017 

No comments:

Post a Comment

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”   ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் ...