Wednesday, September 6, 2017

போராட்டமுறைகள்

1960களில்ரேடியோஉண்டு;
தொலைக்காட்சி இல்லை. 

1970 களில் தொலைபேசி உண்டு; அலைபேசி இல்லை.

1980களில் இன்று போல கணினி இல்லை. 

1990களில் கணினி உண்டு;ஆனால் இன்றுப்போல சமூக ஊடகங்கள் இல்லை. 

காலம் மாறிக்கொண்டு போகின்றது. ஆனால் போராட்ட முறைகள் இன்னும் மாறவில்லை. 

அதே வேலைநிறுத்தம்
அதே மனித சங்கிலி 
அதே கண்டன ஆர்ப்பாட்டம் 
அதே அடையாள  உண்ணாவிரதம் 
அதே இரயில் மறியல்
அதே சாலை மறியல். 

இவைகளை எல்லாம் இன்றைய ஆளும்கட்சி நேற்று எதிர்க்கட்சியாக இருந்த போது செய்துவிட்டது. இன்றைய எதிர்கட்சி நாளை ஆளும்கட்சியாக வருகின்ற நேரத்தில் இம்மாதிரியான போராட்டத்தின் சூட்சுமம் அறிவர். அதனால் இம்மாதிரியான போராட்டங்கள் மீது ஆளும் ஆதிக்க சக்திகளுக்கு பயம் இருக்காது. போர்முறையை மாற்றினால் தான் போராட்டத்தின் வழி தீர்வை காணமுடியும் இல்லையேல் தினம் தினம் போராட்டத்தை மட்டுமே காணமுடியும். தீர்வு எட்டப்படாது.போராட்டங்களை ஆளூகின்றவர்கள பழகஞ்சியாக 
நினைக்கும் நிலை.

#பழையபோராட்டமுறைகள்
#kSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-09-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...