Monday, December 31, 2018

திருப்பாவை. மார்கழி 16.

திருப்பாவை. மார்கழி 16.
*******************************
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பனே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய்.

விளக்கம்:
இப்பாடலில் பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.
"அனைவருக்கும் தலைவனான ஸ்ரீ நந்தகோபனுடைய கோயிலைக்காப்பானே! கொடிகளுடன் விளங்கும் தோரண வாயிலைக் காப்பானே! தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு நேற்றே, அனைவரையும் மயக்கும் நீல மணிபோன்ற நிறத்தையுடைய கண்ணபிரான், பறையை (மத்தளம்) தருகிறேனென்று வாக்களித்துள்ளான். எனவே, அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப, திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்கு தூய்மையுடன் வந்துள்ளோம். எனவே மறுக்காமல், வாசல் படியோடு சேர்ந்துள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு!

Sunday, December 30, 2018

#ஜனநாயகம் ,#குடியரசு #Democracy #Republic -#இந்தியா.....



————————————————
ஜனநாயகம் ,குடியரசு என்பது அரசியல் விஞ்ஞானத்தில் வெவ்வேறு போக்குகள் கொண்டது.ஜனநாயகம் #கிரக்க #ஏதென்ஸ் அரச சபையில் பிறந்தது.
#குடியரசு #இத்தாலியில் உருப்பெற்றது.

ஜனநாயகம் படிப்படியாக வளர்ச்சிப் பெற்று பிரிட்டனில் இடம் பெயர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளர்த்தது. பிரிட்டனின் நாடா ளுமன்றமே  நாடாளுமன்றங்களின் தாய் என்று  அழைக்கப்படுகிறது .#பிரட்டனின் காலனி  நாடுகள் இந்தியா உட்பட ஜனநாயக்த்தின் மீட்சியாக நாடளுமன்ற ஜனநாயகத்தைப்பின்பற்றுகிறது.

#இத்தாலில் வளர்ந்த குடியரசு #அமெரிக்கா  #பிரான்சு  போன்ற பல நாடுகளில் குடியரசு ஆட்சி நடக்கிறது.இதில் கவனிக்கப்படவேண்டிய விடையம் என்னவென்றால் நமது அரசியாலமைப்புச் சட்டத்தில் டெமாக்ரசி(democratic)ரிபாப்ளிக்ன்
(Republican)என்ற  இரு  சொல்லாடல்  போக்கு  உள்ளன.அமெரிக்காவில் ரிபாப்ளிக்ன் டெமாக்ரடிக் என்ற இரண்டு  கட்சிகள்வெவ்வறு கொள்கைகளைக் கொண்டு  இயங்குகின்றன.

இந்தியாவில்குடியரசுக்குஅடையாளம்
குடியரசுத்தலைவர்.ஜனநாயகத்தின் 
குறியீடு  இந்திய நாடாளுமன்றம்.
அரசியலில் இறையாண்மை என்பது மக்களின் மனத்திலிருந்து செல்லும் வீச்சுகள்......இந்த  நிலையில் இந்திய இறையாண்மை  .குடியரசுப் போக்கைச்சார்ந்ததா அல்லது  நாடாளுமன்ற ஜனநாயக அணுகு முறை  சார்ந்ததா இந்த விடயத்துக்கு இந்தியா விடுதலை பெற்ற  நாள்முதல்  யாராலும்  பதிலளிக்கமுடிவில்லை.

உலகத்திலயே  அதிக  பக்கங்கள்  கொண்ட அரசியலைமைப்பு சாசனம்  கூடஇவவினாவிற்குபதிலளிக்கவில்லை.இது குறித்தான விளக்கங்களோ பதில் இல்லை. 

Birth place of #Democracy Athens, Greece, the ancient Acropolis Hill.....
#Republic born in Italy....
Certain differences in function of Democracy and Republic.
We, India accepted both.
(Picture-Birth place of #Democracy Athens, Greece, the ancient Acropolis Hill.....)
(படம்-ஜனநாயகம் பிறந்த #கிரக்க #ஏதென்ஸ் அரச சபை)

#இந்தியாவில்குடியரசு
#குடியரசு
#Democracy
#Republic
#Athens

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30/12/2018

கண்டிக்க வேண்டிய குற்றம் #மணல்கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கெடார் கிராமத்தில் தமிழர் திருநாள்  பொங்கலுக்காக பாணை, மண் அடுப்பு போன்ற மண் பொருட்கள் செய்வதற்காக செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து  துப்பாக்கியால் காளை மாடு வாயில் சுட்டு விட்டனர்.
தமிழகமெங்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் வாரி லாரி லாரியாக மணல்
 கொள்ளையடிக்கும் லாரி லாரியாக... மணல் கடத்தும் மணற் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்கத் துப்பில்லை.
வாயில்லாத ஜீவனான "மாட்டை"
 வாயிலேயே... சுட்டிருக்கிறாயே...
இது கடுமையான கண்டிக்க வேண்டிய குற்றம் 
*****************************
காவல்துறையினர் இல்லை என்றால்; பிறகு யார் ? காவல் துறையின் அவசர நடவடிக்கை இதில் என்ன?
————————————————-
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் கெடார் கிராமத்தில் செம்மண் ஏற்றிய மாட்டுவண்டியை பிடித்து துப்பாக்கியால் காளை மாடு வாயில் சுட்டது காவல்துறையினர் இல்லை என்றால் பிறகு யார் ? காவல் துறையின் அவசர நடவடிக்கை இதில் என்ன?

தமிழகமெங்கும் பொக்லைன் இயந்திரம் மூலம் வாரி லாரி லாரியாக மணல்
 கொள்ளையடிக்கும் லாரி லாரியாக... மணல் கடத்தும் மணற் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்கத் துப்பில்லாத காவல் துறை.

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30/12/2018

#மணல்கொள்ளை
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30/12/2018


திருப்பாவை. மார்கழி 15.

திருப்பாவை. மார்கழி 15.
*******************************
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்றழையேன் மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோரெம்பாவாய்.

விளக்கம்: 
குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.

[எழுப்புபவர்] "இளங்கிளி போன்ற சொற்களையுடையவளே! இன்னமும் உறங்குகின்றாயோ?"

[எழுந்திருப்பவர்] "என் தோழிகளே! 'சில்' என்று மிக்க கூச்சலிட்டு என்னை எழுப்பாதீர்கள்". புறப்பட்டு வருகின்றேன்"

[எழுப்புபவர்] "பேச்சு வன்மையுள்ள உன் உறுதிமொழியையும் உன் பேச்சு திறனையும் நாங்கள் நன்கு அறிவோமே"

[எழுந்திருப்பவர்] "நீங்கள்தான் பேச்சுத்திறமையுடையவர்கள். அல்லது, நீங்கள் கூறும்படி நானே வல்லவளாக இருக்கட்டும்"

[எழுப்புபவர்] "சீக்கிரம் எழுந்துவந்து எங்களுடன் கலந்து கொள். வேறு எதை நினைத்து, இன்னும் எழுந்திராமல் இருக்கிறாய்?"

[எழுந்திருப்பவர்] "எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா?"

[எழுப்புபவர்] "எல்லாரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்று, கம்சன், சாணூரன், முஷ்டிகன் என்னும் பகைவர்களின் க்ர்வத்தை அழித்து, நம் அனைவரையும் மாயையில் வீழ்த்துபவனின் புகழைப் பாட காலம் தாமதியாது விரைவில் எழுந்துவா.

Saturday, December 29, 2018

சீனா மொழியும், கலாச்சாரமும் தினிக்கப்படுகிறது இலங்கையில்......



———————————————— 
Tamil is replaced with Chinese .
இது சீனா அல்ல.
இலங்கைதான்.சீனாவின் ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, சீனா மொழியும், கலாச்சாரமும் தினிக்கப்படுகிறது.
தமிழர் வாழம் தமிழ் ஈழத்திலும் இந்த நிலைதான்......
இந்தியாவின் அருகில் நடக்கும் இந்த
அக்கிரமத்தை நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

இந்த போக்கு இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஆபத்து என்பதை நாம் உணர வேண்டும்.
 
இப்படியான நிலையில், நாம் ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு
நாடு பட்டியலில் எப்படி இடம் பெறுவோம் ?.

#இலங்கை
#சீனாவின்ஆக்கிரமிப்பு
#ஈழம்

#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29/12/2018

குமரி முக்கடல் கடற்கரை



———————————

பேரழகு மிகுந்த உவப்பூட்டி குமரிகடற்கரை அழகைப் புகழ சொற்களே இல்லை ....

கன்னியகுமரியின் உயிர்ப்புக்கு நிகர்
ஏதும் இல்லை.. தென்கோடி நிலமுனையில் நாம் நிற்கலாம். நிலம் முடிந்து நீர் தொடங்கும் தெற்கில் சற்றே நெகிழ்ந்து எப்போதும் மயங்கி விடுவேன்.கவலைகள வரும் போது அதை
போக்கிடம் அமைதி தரும் யாத்திரை தலம்.
தமிழகத்துச் சுற்றுலாத் தலங்கள் புறக்கணிக்க படுகிறது  மற்ற மாநிலங்கள் குறிப்பாக கேரளம் கருநாடகத்திலும் ஆந்திரத்திலும் போய்ப் பாருங்கள்......

குமரி முக்கடலை  நின்று தெற்கு திசையை  நோக்கினால் இந்த சிந்தனைதான் அடிக்கடி எழம்;
‘’வாழ்க்கை,இழுத்துச் செல்லும் திசையை நோக்கிச் செல்லும் இயல்பினன் யான்.
இப்போது காலம் என்னை
Gypsy ஆக்குகிறது .....’’

#கன்னியகுமரி
#குமரிமுக்கடல்கடற்கரை
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
28/12/2018

திருப்பாவை. மார்கழி 14.

திருப்பாவை. மார்கழி 14.
*******************************
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.
விளக்கம்:

"உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்து தடாகத்துள் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து, கருநெய்தல் மலர்கள் பூத்துக் குவிந்துள்ளன. காவியுடை தரித்த வெண் பற்களையுடைய தவசிகள், தங்கள் திருக்கோயில்களைத் திறக்க செல்லுகின்றனர். பெண்ணே! நீ எங்களை முன்னரே எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாமலிருந்தும் செய்யவில்லையே என்ற நாணம் துளியும் இல்லாதவளே! பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப்பாட எழுந்திருப்பாயாக!

Friday, December 28, 2018

விருதுநகர் மாவட்டம் முதலிடம்!





—————————————-

பின் தங்கி வளர்கின்ற மாவட்டங்களில் வளர்ச்சி பணியில் தேசிய அளவில் வானம் பார்த்த கரிசல் பூமி விருதுநகர் மாவட்டம் முதலிடம்!
'நியு ஆயோடிக்' தகவல்!
ஏற்கனவே கல்வியில் சாதித்த மாவட்டம்.
பெருமை கோள்வோம்!
#விருதுநகர்மாவட்டம்
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2018

திருப்பாவை. மார்கழி 13.

திருப்பாவை. மார்கழி 13.
********************************
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழமுழங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைப்பிளந்து கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத்தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய கீர்த்திகளையும் பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நூற்க குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர். (சுக்கிரன்) வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (பிரஹஸ்பதி) மறைந்துவிட்டது. மேலும் காலைப்பறவைகள் ஒலித்துப் பறந்து செல்லும் சப்தம் உனக்கு காதில் கேட்கவில்லையா? சிவந்த தாமரைப் போன்ற கண்களையுடையவளே! இந்நன்னாளில் தூங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டு பாவனை செய்வதை விட்டுவிட்டு, எங்களுடன் குளிர்ந்த நீரில் அமிழ்ந்து முழுகாமல், படுக்கையில் உறங்குகிறாயே பாவைப்பெண்ணே! எழுந்து வா.

Thursday, December 27, 2018

வானம் பார்த்த கரிச காட்டில் நாட்டு கம்பு,குதிரைவாலி,தினைஅறுவடைக்கு.....ன்றகூ







கல்வி கூடங்களில் மதிய உணவு திட்டம் மூடப்படுமா.....? அதன் வரலாறும் இன்றைய நிலையும்

கல்வி கூடங்களில் மதிய உணவு திட்டம் மூடப்படுமா.....?
அதன் வரலாறும் இன்றைய நிலையும் 
———————————————
இன்று சத்துணவு திட்டம் என சொல்லப்படும் 
அன்றைய மதிய உணவு திட்டத்தை துவக்கியது யார்?   
1912 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்து மெட்ராஸ் எனப்படும் சென்னை மாகானத்தில் தங்கிப் படிக்க வரும் மாணவர்களுக்கு அப்போது எளிதாக உணவு கிடைக்கவில்லை. குஷ்டரோகிகளையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் ஒரே நிலையில் பார்த்தனர் சனாதனிகள்.சில உணவுகூடங்களில இவர்களை உள்ளே நுழையக் கூடாது என பலகையில்  எழுதி வைத்தனர். அப்போது தான் சி.நடேசனார் திராவிடர் இல்லம் ( Dravidian association Hostel) துவங்கி வசதியற்றோருக்கு தங்க இடமும் இலவச உணவும் கொடுத்தார். 

அதன் பின்னர் பனகல் அரசர் ஆட்சியில்  அதனை தொடர்ந்து 1920 ஆம் ஆண்டு சென்னை மேயர்  பிட்டி.தியாகராதயர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நகராட்சி பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். 

அதே பிட்டி.தியாகராயர் காலத்தில் கல்வி வளர்ச்சி பெற்றது.  அண்ணாமலை செட்டியாரை அணுகி  அவருடன் இணைந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஆந்திர பல்கலைகழகங்களை தன் சொந்த பணத்தை செலவிட்டு துவங்கினார். இது கடந்த கால வரலாறு.

காங்கிரஸ் ஆட்சியில் காமராசர் மதிய உணவு திட்டத்தை பரவலாக்கினார் , அதன் துவக்கம் நீதிக்கட்சி ஆட்சிகாலம். காமாராசர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தவர்  கல்வித்துறையின் இயக்குனராக இருந்தவருமான  பெரியாரின் சீடருமான என்.டி.சுந்தரவடிவேலு .  
'தனி மனிதனுக்கு உணவு இல்லை எனில் இத்ஜெகத்தினைஅழித்திடுவோம்' என்று பாடிய பராரதியின் எட்டையபுரத்தில்
காமராஜர் முதன் முதலாக மதிய உணவு
திட்டத்தை சென்னை மாகாணம் முழுவதற்கும் தொடங்கி வைத்தார்.
எம்.ஜி.ஆர் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை நடைமுறை படுத்தினார்.
கடந்த 1989இல் ஆட்சிக்கு வந்து
எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு 
திட்டத்தில் முட்டையும் சேர்த்து சத்துணவாக செயல் படித்தினார்.

இப்போதைய நிலை என்ன?மதிய உணவு திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி அரசு பள்ளி என்ற கட்டமைப்பையே சீர்குலைக்க நினைக்கும் மத்திய மாநில அரசுகளின் செயல் பாடுகள் உள்ளன.

தமிழகத்தில் இயங்கிவரும் 43,200 மதிய உணவு வழங்கும் மையங்களின் மூலம் 50லட்சம் மாணவர்கள் இதுவரை பயன்பெற்று வந்தனர். இப்படி இயங்கிக்கொண்டிருந்த மையங்களில்  8000மையங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கான காரணமாக மத்திய அரசு இந்த மையங்களில் வேலைசெய்யும் நபர் ஒருவருக்கு மாதம் இதுவரை வழங்கிவந்த ருபாய் 1000த்தை போன மாதத்தோடு நிறுத்திவிட்டது.எனவே தமிழக அரசுக்கு கூடுதல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டத்தை காரணம் காட்டி இந்த முடிவினை தமிழக அரசு எடுத்திருக்கிறது. 

மதிய உணவினை நம்பியே ஏராளமான பள்ளி செல்லும் ஏழை குழந்தைகள் குறிப்பாக கிராம புறங்களில் அரசு பள்ளிக்கு வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு வழங்குவதை நிறுத்தினால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் ஏற்கனவே அரசின் தவறான கொள்கைகளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. இதனை காரணமாக வைத்தே கடந்த மாதம் தமிழக அரசு 3003 அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தியது. 

இப்போது மதிய உணவு திட்டமும் கைவிடப்பட்டால்  அரசு பள்ளி என்ற ஒன்றே இருக்காது.ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகி விடும். மாகாணம் 

#மதியஉணவு
#சத்துணவுதிட்டம் 
#ஆரம்பக்கல்வி
#middaymeals
#schools
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2018

திருப்பாவை 12

பாசுரம் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

விளக்கம்:

எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.....

நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.......
————————————————-
கடந்த 1989இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக  வேட்பளாராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சமூக நீதி காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இதே நாள் (27.12.2018) 27-12-1988இல் வந்திருந்தார். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். எட்டையபுரத்துக்கும் வந்தார். ஆனால் அந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தேன்.
உடன்வைகோஅவர்கள். இந்த தேர்தலில் எனக்கு பணியற்றிய
வழக்கறிஞர்கள் பின் நாட்களில் உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஆனார்கள். எனது உதவியாளர்கள் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.

#வி_பி_சிங்
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2018


Wednesday, December 26, 2018

சுனாமி

இன்று (26-12-2018) சுனாமி என்கிற ஆழிப்பேரலை தனது கோர தாண்டவத்தை தமிழக கடலோர மாவட்டங்களில் நிகழ்த்தி 14 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதன் தாக்கத்தால் ஏற்பட்ட ரணங்களால் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தங்களது வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் உள்ளனர். அன்றைய தினம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்பட்டது. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் இந்தோனேசியாவில் ஒரு எரிமலை வெடிப்பின் காரணமாக சுனாமி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் இத்தகைய தொடர் சம்பவங்களால் இயற்கை நமக்கு ஏதோ சொல்ல வருகிறது. ஆனால் மனிதன் அதை ஏற்காமல் புறந்தள்ளுகிறான். ஒரு விடயம் இயற்கையோடு மானுடம் போட்டியிட முடியுமா?

மீண்டும் மீண்டும் 
சொல்லி கொண்டே உள்ளது
இயற்கை
என்னை நேசி என்றே?
ஆனால் மனிதா? நீ சிந்திக்காமல் மாயை வாழ்க்கை வாழ்கிறாய் .. ஆனால் உன்னிடம் சொல்லி கொண்டே இருப்பேன் 
சுனாமியாக 
நில அதிர்வாக 
வெள்ளமாக 
புயலாக 
வாழ்க்கையை தொலைத்த‌ மனிதர்களை நெஞ்சில் ஏந்துவோம் நினைவுகளை நேசிப்போம்...

#சுனாமி
#Tsunami
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
26/12/2018

எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.

நமது பொது வாழ்வு பணியில் வெற்றியோ தோல்வியோ அவமானமும் எதுவரினும்
அயராமல் கடமையைச் செய்வோம்.....
முயற்சிகள் தவறலாம்.ஆனால் எந்த நிலையிலும் முயற்சிக்க தவறக்கூடாது.
யார் பாராட்டினாலும் பாராட்ட
விட்டாலும் அங்கிகாரம் இருக்கோ இல்லையோ நேர்மையாக செயல் படுவோம்.நமது உழைப்பை பயன படுத்தி
கொண்டு தூக்கி வீசினாலும் கலக்கம் வேண்டாம்.
நமது ஆளும்மை ஒரு நாள் வெளிப்படும் போது அங்கிகரிக்கப்பட்டு நம்மை புறக்கணித்தவர்கள் மதிக்க தொடங்குவார்கள்.
எல்லாம் கடந்து போகும்......
#ksrpost
26-12-2018.

                      .


திருப்பாவை. மார்கழி 11.



*******************************
கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
 செற்றார்திறல் அழியச்சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய்.

விளக்கம்: 
                     "கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும், பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புறிபவர்களும் ஆன குற்றமற்ற இடையர் குலத்தில் பிறந்த கொடி போன்ற அழகிய வடிவையுடயவளே! பாம்பைப் போன்ற மெல்லிடை உடையவளும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! மேகம் போன்ற வண்ணக்கண்ணனின் புகழை பாடிக்கொண்டு ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்துவந்து, உன் வீட்டின் முன்னர் வந்து குழுமியிருந்தும், செல்வ சீமாட்டி நீ, சிறிதும் அசையாமலும் பேசாமலும் உறங்குவதன் பொருள் என்ன?

Tuesday, December 25, 2018

திருப்பாவை 10

திருப்பாவை  10
******************
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பொருள்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்:

  யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.

ஜோசப்பரராஜசிங்கம்#ஈழம்

கடந்த 2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது மாமனிதர் #ஜோசப்பரராஜசிங்கம் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த மூன்று வருடமாக கைதுசெய்யப்பட்டு சிறையில்.....
#ஈழம் 
#ksrpost
25-12-2019


ஆட்கொல்லி-க.நா.சுப்ரமண்யம்



——————————————-
#சிறுவாணிவாசகர்மையம் மறுபதிப்பு செய்திருக்கிற க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ஆட்கொல்லி சிறுவாணி வாசகர் மையம் தலைவர்  நன்பர் திரு ஜி.ஆர்.பிரகாஷ் அன்புடன் அனுப்பி வைத்தார். அதை படித்துவிட்டு அந்த
சூழலை இரண்டு நாட்களாக அசை
பொட்டுக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது; நகர முடியவில்லை .

கடந்த 1950-80ல்முப்பது ,நாற்பது ஐம்பது வருடங்கள் முன்புவரை உறவினர் வீட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி தங்கி படிக்க வைப்பது உறவு நடைமுறையில் இருந்திருக்கிறது . அப்படி தன் மாமா,மாமி வீட்டில் தங்க நேர்ந்து படிக்கிறவன் இதில் நாயகன்.அவன் பார்வையில் வட்டிக்குப் பணம் கொடுத்து ( லேவா தேவி)லட்சாதிபதியாகிற மாமா வை,அவர் மனைவியை  ஆகியோரின் குணங்கள் படியாத அவர் மகனை , பணத்தை இரட்டிப்பாக்குகிறதிலேயே முனைப்புடன் இருந்து வாழ்கிற மாமாவின் நிழலில் ,அவரின் சாதுர்ய மனைவியின் வளர்ப்பில் தான் பெரியவனானாலும் தனக்கு பணத்தைப் பற்றிய ஒரு சமத்துவம் 
இல்லாதிருப்பதை சொல்லியிருக்கிறார் இதன் படைப்பாளி க.நா. சு.

பணம் படைத்தவன் ,பணம் இல்லாதவன் என்கிற பேதம் தான் கொடுமை கொடுமையிலும் கொடுமை.குடும்பம்,பொது தளங்கள்,
உற்றார் உறவினர் இடையே மனிதனை
உயர்த்துகிறது அந்தஸ்தில்........
பணம் இருந்தால் கேடு கெட்டவனையும்
உத்தமர் ஆக்கிறது.பணம்தான் பிராதனம் என்பது யதார்த்தம்.அதுவே
சகலமும்,மிருக பலம் etc

ஆட்கொல்லியில் சில காட்சிகள்:

// மாமாவோ,மாமியோ ஓடிப்போ என்று சொல்லி அவனை விரட்டியிருக்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.அவன் வீட்டிலிருந்த வரையில் அவனை ஏவுவதற்கு மாமிக்கு ஆயிரக்கணக்கான காரியங்கள் இருந்தன. சாப்பாடு சரியாகப் போட்டிருக்க மாட்டாள்.உண்மைதான். சோற்றைத் தின்னும்போதும் வாயால் பொறிந்து கொட்டி, நெஞ்சுக்குக் கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்//
இந்த வரிகள் உணர்வு பூர்வமானது.

க.நா.சு வின் எழுத்தில் கதைநெடுக ஒட்டிக்கொண்டே வருகிற அந்த எள்ளல் தொனி..
" ஏய் எல்லாம் பொய்யடா! இதுக்காடா இப்படி அலையறீங்க !" என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.

புத்தகத்தில் Bharathi Mani அவர்கள் தம் மாமனார் க.நா.சுப்ரமண்யம் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் , வ.ஸ்ரீனிவாசன் அவர்களின் வாசிப்பனுபவம் 
இரண்டும் வாசகர்களுக்கு போனஸ்.

க.நா.சு தனது முன்னுரையில் சொல்கிறார்.
//வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் இன்னொரு மருமான் சமையற்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை  செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என று ஏற்பட்ட மெலோட்ராமா .அதிகப்படுத்திக்கூறல்.,கோயின்சிடென்ஸ் என்கிற வகையைச் சேர்ந்து விட்டது .அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது போகட்டும் என்று விட்டு விட்டேன். (//

  
// நல்லது செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச் சொல்லிச் சாதித்து விட   முடியாது .நம் கண்ணெதிரிலே தப்பு செய் கிறவர்களை அப்படி ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை.தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறோம்.தவறு செய்துவிட்டு தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று சொல்லி ஆனந்தப்படும் உலகமிது .கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.//

// மனித சுபாவத்திலே ஒரு பகுதிக்குப் பிறர் செய்கிற தவறுகளை எடுத்துச்சொல்லி ஆனந்தப்படுகிற ஒரு கர்வம் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது//
 

// அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான்//

// சிருஷ்டி தத்துவம் மிகவும் விசித்திரமானது .மனிதன் தான் சிருஷ்டித்துக்கொண்டு ,சௌகரியம் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ என்று எண்ணும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது//

// பணத்தை ஒரு லக்ஷியமாக எண்ணாமல் வாழ்க்கை நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்றுதான் மதிக்கிறது.வாழத்தெரியதவன் என்றும் சொல்லி விடுகிறது.பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.சிலசமயம் சிந்திக்கும்போது இதை கலியுகம் என்று சொல்வதற்குப் பதில் பணயுகம்,பொருளாதார யுகம் என்று சொல்லலாம் என்றுதோன்றுகிறது.அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப் பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கி விட்டால் அதை என்னவென்று சொல்வது?//

// பணக்கார்ர்களிடம் பணம் சேருகிறது ஏழையிடம் பணம் படிப்படியாகப் பணம் குறைகிறது .கண்கூடாக இது தினமும் காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ பாங்குகள் முதல் தனிமனிதர்கள் வரையில் எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் .உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு,இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உறவினனுக்குச் செய்தால் ,அந்த ஏழை உறவினன் ஏழைமை நீங்காவிட்டாலும் ,அன்புடனும்,ஆதரவுடனும் ஒரு கவலை நீங்கியிருக்க மாட்டானோ? உதவி தேவையாகிற இடத்திலே ,உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக் கூடாது என்பதுதான் 
ஈசுவர சிருஷ்டியின் நியதியா?//

தெரியாத ஒரு விஷயத்தை மறைப்பதற்காக" சில பேருக்கு அப்படித்தான் சேரும் ,தொட்டதெல்லாம் போன னாகும் ஜாதகம் " என்றுசொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.பர்ஸைத் தொட்டால் தொட்ட மாத்திரத்திலேயே பர்ஸைக் காலியாக்கி விடுகிற ஜாதகம் அதற்கென்ன செய்வது?//

#ஆட்கொல்லி
#கநாசுப்ரமண்யம்
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25/12/2018

*நல்லாட்சி நாள் - Good Governance day*



———————————————-
இன்றைக்கு (25/12/2018) *நல்லாட்சி நாள் - Good Governance day* என்று வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அறிவித்துள்ளனர். அவர் ஒரு நல்ல நிர்வாகி, மென்மையானவர், நல்ல ஆளுமையான பிரதமர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 

இந்தியாவில் நல்லாட்சி இருக்கிறதா என்பதை ஆளும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

சிவில் சட்டங்கள், கிரிமினல் சட்டங்கள் போல *நிர்வாக சட்டங்கள் - Administration Law* என இருப்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்படி இன்றைக்கு ஆளும் ஆட்சிகள்  நடக்கின்றனவா என்பது கேள்விக்குறியே.

நல்லாட்சி என்பது நல அரசாக (welfare state)அமைய வேண்டும். இன்றைக்கு ஜனநாயகமும் ஆதாயம் தருகின்ற சந்தை ஜனநாயகமாக (Market Democracy) மாறிவிட்டது. மக்களுக்கான ஜனநாயகம் (People's Democracy) இல்லை.

பிறகு நல்லாட்சி நாள் என கொண்டாட நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். எதிலும் பணம், ஆதாயம் என்று பொது வாழ்வும், அரசியலும், அரசும் இருக்கும்போது நல்லாட்சிக்கான வாய்ப்பு எங்கே இருக்கும். மக்களின் வாக்குகளை பணத்திற்க்கு வாங்கி ஆட்சிக்கு வருபவர்கள் வியாபாரிகள் தானே. வெற்றி பெற்றால் சம்பாதிப்பது தானே அவர்களின் ஆக்கறையானபணி. பிறகெப்படி நல்லாட்சி தருவார்கள். 

இந்தியாவில் கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம், இத்தாலியில் பிறந்த குடியரசு என்று இரண்டையும் கொண்டாடுகிறோம். நம் நாடு ஜனநாயக நாடா, குடியரசு நாடா என்று கூட பதிலளிக்க முடியாத நிலை. பிரிட்டன் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றினால் ஜனநாயக மரபியல் தான் நம்மை சாரும். பிறகெப்படி குடியரசு என்று வகைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அமெரிக்காவும், பிரான்சும் குடியரசு நாடுகளாகும். இந்தியா குடியரசு நாடா, ஜனநாயக நாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
 பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் சமஷ்டி அமைப்பும் (Federal) ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக பௌதிகம் சொல்கிற மாதிரி டைனமிசம் இருக்கும். சென்ட்ரி பியூகல்,சென்ட்ரி பெட்டல்  என்ற வீச்சில் எந்த வகையில் அமைப்பியல் ரீதியிலான ஆட்சி இந்தியாவில் நடத்துகிறோம் என்று தெரிந்தால் தான் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் கூட்டாட்சி சரியாக இயங்கும். இங்கு கூட்டாட்சியும் கேள்விக்குறியாக இருக்கிறது. நல்லாட்சியும் அப்படித்தான் ...........?

#குடியரசு
#ஜனநாயகம்
#சமஷ்டி அமைப்பு
#Federalism
#Democracy
#Republic
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25/12/2018

- பாரதி (பாஞ்சாலி சபதம்)

நல்லிசை முழக்கங்களாம் - பல
நாட்டியமாதர் தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள் - அருந்
தொழிலுணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள் - கடுங்
குதிரைகளொடு பெருந்தேர்கள் உண்டாம்
மல்லிசை போர்கள் உண்டாம் - திரள்
வாய்ந்திவை பார்த்திடுவோர்கள் உண்டாம்.

- பாரதி
(பாஞ்சாலி சபதம்)

Monday, December 24, 2018

On India's bilious babus, Chawla writes

Prabhu Chawla  - the life of a Civil Servant in India
"Conscience is the favourite opiate of retired civil servants. Once the perks of power are gone, they suddenly discover that institutions have collapsed, the Constitution has crumbled and communalism is holding an apocalyptic cookout. Life is a rat race for the average Indian apparatchik— 38 years of conspiring for plum posts, obliging greedy politicians, favouring unscrupulous corporates and, sometimes, at a price, turning a blind eye to mafias that pervade the system."On India's bilious babus, Chawla writes


மயிலை, லஸ் பழைய புத்தக விற்பனையாளர்

மயிலை, லஸ் பழைய புத்தக விற்பனையாளர்ஆழ்வார் மறைவு செய்தி சென்னையில் 1 வார காலமாக இல்லாததால்தெரியவில்லை.

இன்றுதான் தெரிய வந்தது. ஆழ்ந்த இரங்கல்.

எத்தனை நல்ல புத்தகங்கள் உன்னிடம் பெற்றேன்..



மார்கழி : 9 திருப்பாவை

மார்கழி : 9 ஆண்டாள் -திருப்பாவை 

தூமணி மாடத்துக் சுற்றும் விளக்கொ¢யத்
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ?  உன் மகள் தான்
ஊமையோ? அன்றிக் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று — ஏலோர் எம்பாவாய்

 

தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு
அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள்
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது
சீக்கிரம் உன் மகளை எழுப்பு

இலங்கையில் ....

இலங்கையில் வெள்ளத்தில் அகப்பட்டு அல்லலுறும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் அனுப்ப சிங்கள அரசுக்கு மனமில்லை.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.




இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம்.....




Sunday, December 23, 2018

*இன்றைக்கு விவசாயிகள் தினம் தான். யார் கவனத்திற்கும் வரவில்லை.*



-------------------------------------
தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் வழியாக விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க கூடாது என்று கடந்த 7 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளின் நிலத்தில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருக்கிறது. பவர் கிரிட் என்ற நிறுவனம் இதை முன்னெடுத்து விவசாயிகளுக்கு விரோதமாக இந்த திட்டத்தை அமல்படுத்துவதை கொங்கு வட்டார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் மூலக்கரை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன் சாவடி போன்ற பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். 




தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இந்த வட்டாரத்தை சேர்ந்தவர். மின்சாரத் துறை அமைச்சரும் இந்த பகுதியைச் சேர்ந்தவர் தான். ஆனால், மின்சாரத் துறை அமைச்சர் விவசாயிகளை திமுக தூண்டிவிடுவதாக அப்பட்டமாக பொய்யை பரப்பி வருகிறார். இந்த திட்டத்தை தடுக்க முடியாமல் தன் இயலாமையை ஒத்துக் கொள்ளாமல் மின்சாரத் துறை அமைச்சர் திமுக மீது போடும் பழிகளை போராடும் விவசாயிகளே நம்பவில்லை. என்ன செய்ய? 

இது தான் இன்றைய விவசாயிகளுடைய பாடு. ஒவ்வொரு துறையிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள். இன்றைக்கு விவசாயிகள் தினம். கொண்டாடப்பட வேண்டிய நாளில் போராடுகிறார்கள். தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விவசாயிகள் நேரடியாக தங்களின் விளைபொருட்களை விற்க உழவர் சந்தை, வறட்சியால் வாடிய விவசாயிகளின் 7,500 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை ரத்து செய்து அறிவித்தார். ஆனால், இதே பகுதியை சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சரால் கூட இந்த திட்டத்தை நிறுத்த முடியவில்லை. 

விவசாயிகள் தான் மனித நாகரிகத்தின் அடிப்படை. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டவர்கள், மண்ணிலிருந்து தானியங்களை விளைவித்து, முறையாக உணவுப் பழக்கங்கள் வந்த காலத்திலிருந்து நாகரிகங்கள் தொடங்கியது என்பது வரலாறு. விவசாயிகள் கால்வைத்த மண்ணில் கிடைக்கும் விளை பொருளால் தான் ஒவ்வொரு மனிதனும் ஜீவிக்கின்றான். அதற்காக தான் மண்ணை வணங்குகிறோம், போற்றுகிறோம், கொண்டாடுகிறோம். அந்த மண்ணை உணவாக மாற்றுவது தான் விவசாயம். விவசாயம் என்பது 12,000 ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்ததாக சில தரவுகள் உள்ளன. அமெரிக்கர்கள் மண்ணை அழுக்கு என்கிறார்கள். ஆனால், இங்கு விவசாயிகள் மண்ணை தாய் மண் என்றும் வணங்கி கொண்டாடுகிறோம். 

நாடு விடுதலை பெற்ற 1947இல் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு 60 சதவீதம் மக்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, விளைநிலங்களும் குறைந்துவிட்டது. இந்தியாவில் நமக்கு இருக்கும் ஒரே வளம் மனித ஆற்றல். அந்த மனித ஆற்றலின் பெரும்பான்மை விவசாயத் தளத்தில் தான் இருந்தது. கார்ப்ரேட் நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றி விவசாயத்தை பாழ்படுத்தியது. இந்தியாவில் கடன் தொல்லையால் 3000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். உரிமைகளுக்காக போராடிய 47 விவசாயிகள் தமிழக காவல் துறையால் சுடப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு விவசாயம் புரையோடிய நிலைக்கு போய்விட்டது. 12,000 ஆண்டுகளின் பாரம்பரியமான விவசாயம் தேய்மானத்தை நோக்கி செல்வதை தடுக்கவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. 

இன்றைய விவசாய நிலத்தில் இந்த உணர்வை நாம் எடுத்து செல்ல வேண்டும். இதில் என்ன வேடிக்கை என்றால் இன்றைக்கு விவசாயிகள் தினம் என்பது பலர் அறிந்திருக்கவில்லை என்பது தான் வேதனையான விடயம். என்ன செய்ய?

விதியே, விதியே, தமிழ் சாதியே!!!

#விவசாயிகள்_தினம்
#Farmers_day
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
23/12/2018

"தேசிய விவசாயிகள் தினம் டிசம்பர் - 23"





———————————————-
இன்று விவசாயிகள் தினம்.  
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.. இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என பாரதியும் ,  வள்ளுவப் பெருந்தகை *உழவு* க்கு அதிகாரம் அளித்து 10 குறள்களை எழுதி வைத்திருந்தாலும் அதில் பிரதானமானது. 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.//  

உழவுக்கு வள்ளுவர் தனி அதிகாரம் அளித்தாலும் இதுவரை உழவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரவில்லை.

இதுவரை தமிழகத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 45 விவசாய உயிர்களுக்கும், ஒட்டுமொத்த இந்தியாவில்  கடன் தொல்லை, பொய்த்த விவசாயம், இன்னபிற காரணங்களால் தற்கொலைக்கு பலியான 5லட்சம் உயிர்களுக்கும்   இன்றைய தினத்தில்  நன்றியுடன் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 15 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 10-க்கும் மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு.

நாம் சோற்றில் கை வைக்க நித்தமும் சேற்றில் கை வைக்கும் விவசாயிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
#விவசாயிகள்தினம்
#KSRadhakrishnanpostings
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2019.

மார்கழி : 8 திருப்பாவை






கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.

 

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி
உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்
நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.

Saturday, December 22, 2018

மார்கழி :7 #திருப்பாவை #தமிழைஆண்டாள்

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் #மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

#ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மார்கழி :7 #திருப்பாவை #தமிழைஆண்டாள்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.

 

கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட
கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக

நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.

வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் #நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.
————————————————

இதே நாளில் 1984இல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மறைந்தார். அப்போது உடன் இருந்தவன், 34 ஆண்டுகள் கடந்துவிட்டது.எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்கவேண்டி போராட்டங்கள் நடத்தியும் குறைக்கவில்லை. அதனால் இவரது வையம்பாளையம் வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் நாராயணசாமி நாயுடு.












இன்று தமிழகத்தில்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது  என்றால் அதற்கு காரணம் நாராயணசாமி  நாயுடு அவர்கள் நடத்திய போராட்டங்களும் அவரது தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தினர் செய்த உயிர்தியாகங்களும் தான் .
1984ல் சென்னை பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கல்கி இதழ்க்கு பேட்டி கண்டது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
"வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிவிட்டார் எம்ஜிஆர் "என்று  பேட்டியில் சொல்லியிருந்தார் நாராயணசாமி நாயுடு.-ப்ரியன்

#தமிழகவிவசாயசங்கம்
#நாராயணசாமிநாயுடு
 #Ksrposting 
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/12/2018.
கல்கி இதழ் -16/5/1982.


Friday, December 21, 2018

நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.

வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் #நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.
————————————————
இன்று (21/12/2018) உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 34வது நினைவு தினம்.வழக்கம் போல கோவை மாவட்டம் வையம்பாளையம் கிராமத்தில் புகழஞ்சலி செலுத்தினோம். முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர். நாராயணசாமி நாயுடுவின் பேரன் பிரபு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.



இதே நாளில் 1984இல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மறைந்தார். அப்போது உடன் இருந்தவன், 34 ஆண்டுகள் கடந்துவிட்டது.எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்கவேண்டி போராட்டங்கள் நடத்தியும் குறைக்கவில்லை. அதனால் இவரது வையம்பாளையம் வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் நாராயணசாமி நாயுடு.




#தமிழகவிவசாயசங்கம்
#நாராயணசாமிநாயுடு
 #Ksrposting 
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/12/2018


Thursday, December 20, 2018

இவ்வளவு தானா வாழ்க்கை ?

நல்ல எண்ணங்கள் என்றால் சமூக நீதிக்கான தாகம் என்று மக்கள் புரிந்துகொண்டால் சரி 



--------------------------------
புகழ்பெற்ற  கவிஞர்  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை ..." சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் ", 

    உலகப்பேரழகி கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம் ,"  உலகத்திலேயே  அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டிருக்கிறது . நல்ல  வேளை  இவள்  பிணமானாள் ,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும் ".

   மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள் ,  " இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது " .. 

     ஒரு  தொழிலாளியின்  கல்லறை வாசகம் ,  "இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான் " ....

    அரசியல்வாதியின்  கல்லறையில் , "  தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள் ,  இவன்  எழுந்து விடக்கூடாது ". 

   ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம் , "  இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள் ,தொந்தரவு  செய்யாதீர்கள்  ,   பாவம்  இனி  வர முடியாது  இவளால் "....

             இவ்வளவு  தானா  வாழ்க்கை  ?ஆம்,அதிலென்னசந்தேகம் ...ஆனானப்பட்டவர்களின்   ஆட்டமெல்லாம்  அடங்கிப்போனது  அடையாளம்  தெரியாமல் .... உலகையே  நடுங்க  வைத்த  ஹிட்லர்  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான் .

        அவனோடு  கூட்டு  சேர்ந்து  சர்வாதிகார  ஆட்டம்  போட்ட   முசோலினி   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின்  பிணத்தை  தலைகீழாக  தொங்க  விட்டு   ஒரு  வாரம்  வரை  அத்தனை   பொதுமக்களும்   தங்களது  செறுப்பால்  அந்தப் பிணத்தை  அடித்து  தங்கள்  மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள் .....இப்படி  சொல்லிக்கொண்டே  போகலாம் ,  ஆணவக்காரர்கள்  அடங்கிப்போன கதைகளை .....  

நாம்  எதை  ஆதாரமாக  வைத்து  ஆணவப்படுகிறோம்  ?காலம்  நம்மை  எத்தனை  நாள்  விட்டு வைக்கும் ?நமது  பதவியா ?நாம்  சேர்த்த  சொத்து  சுகங்களா ?  நமது  படிப்பா  ?நமது  வீடா ?நம்  முன்னோர்களின்  ஆஸ்தியா  ? நமது  அறிவா  ? நமது  பிள்ளைகளா ? எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது  ?

 ரத்தம்  சுருங்கி ,  நமது  சுற்றமெல்லாம்  ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை  காப்பாற்றப் போவதில்லை ...  

 பசித்தவனுக்கு  உணவு  கொடுத்து ,  உடை  இல்லாதவனுக்கு  உடை  கொடுத்து ,  எல்லாரையும்  நேசித்து , மனத் தூய்மையான  வாழ்க்கையை  வாழுபவர்கள்  மட்டுமே   என்றென்றும்  வாழ்பவர்கள் . கேவலம்  அற்ப  சுகங்களுக்காக   தமது  வாழ்க்கையை  பாழாக்கிக்கொள்ளும்  ஆண்களும்  பெண்களும்   பெருகி வரும்  சமூகத்தில்  வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்  . 

ஒரே  முறை  வாழப்போகிறோம் , எதை  விதைக்கிறோமோ   அதைத்தான்  பல நூறு  மடங்காக  அறுவடை  செய்யப்போகிறோம் ....நல்ல  செயல்களை  , எண்ணங்களை  விதைப்போம் ....
(படம் - பிரமிடுகள், எகிப்து )

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
18-12-2019.

திருப்பாவை. மார்கழி 4,5.....

பாசுரம் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை. மார்கழி 5
****************************
மாயனை மன்னுவட மதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.

விளக்கம்:
மாயனும் தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில் விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும், யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை, உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால் வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல் வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்.

இந்து மகா கடலில் தென்னிந்தியாவிற்கு பெரியதொரு ஆபத்து ஏற்படவுள்ளது.

இப்பவாச்சும் பேசுங்கய்யா !!!...
--------------------
இந்து மகா கடலில் தென்னிந்தியாவிற்கு பெரியதொரு ஆபத்து ஏற்படவுள்ளது.
———————————————-

இந்திய பெருங்கடலின் பெரும் பகுதியை சிங்கள அரசு கைப்பற்றத் துடிப்பதை இந்தியா பாரமுகமாகயுள்ளது. இது குறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த பிரச்சனைகளால் குறிப்பாக தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தான் முதலில் தனது பாதுகாப்பை இழக்கும். நான் இதை குறித்தெல்லாம் பல முறை பேசிவிட்டேன். ஆனால் நமது கவனமெல்லாம் சர்க்கார் சினிமா, மீடூ, என வீண் விவாதங்களுக்கு மட்டுமே செல்கிறது. 

நேற்றைய எனது பதிவு
-----------------------------
ஐநாவில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்திற்கு சொந்தமென உரிமைகோரி மனு அளித்துள்ளது. 

இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது. 

ஏற்கனவே தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க டீகோகார்சியாவில், பிரான்ஸ் மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதிக்கம், ஹம்பன்தோட்டா துறைமுகப் பிரச்சனை, திரிகோணமலை துறைமுகப் பிரச்சனை, சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது. 

இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக கேரளம் மற்றும் குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகைவரை உள்ள கடற்கரைப்
 பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். 
இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்சினை.

 இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித்தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா அமர்விற்கு தள்ளிப்போடப்பட்டிருகிறது. இந்திய அரசு அழுத்தம் கொடுத்தால் ஐ.நாவில் தீர்ப்பு வராமல் ஒத்திவைக்க முடியும். 

சிங்கள தேசம் கைப்பற்றத் துடிப்பது குமரிக்கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர் பரப்பை தான். ஆனால் இந்தியா இதை பாரமுகமாகயுள்ளது வேதனையை தருகிறது.

என்ன செய்ய?

விதியே விதியே தமிழ்சாதியே.

ஐநா மன்றத்தில் இலங்கை அரசு இந்து மகா சமுத்திரத்தை அபகரிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்த மனுவும், அது தொடர்பான ஐநா. ஆவணங்களும் இன்று கையில் கிடைத்தது. அதை படித்துவிட்டாவது இந்து மகாசமுத்திரத்தில் எதிர்காலத்தில் உள்ள ஆபத்தை உணருங்கள். அந்த ஆவணங்களைக் காண இங்கு சொடுக்கவும்.
http://ksradhakrishnan.in/இப்பவாச்சும்-பேசுங்கய்ய/


#இந்திய_பெருங்கடல்
#டீகோகார்சியா
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
20/12/2018

Tuesday, December 18, 2018

03மார்கழி திருப்பாவை

03மார்கழி-: 

 " *நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர்- எம்பாவாய்* "

இந்தப் பாசுரம் மிகவும் மங்களகரமானது! இரண்டு முறை சொல்லுவாங்க! திருமண வீடுகளில்/சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்திப் பாடுவாங்க!

ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி,
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து,
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயல் உகளப்,

பூங் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!
நீங்காத செல்வம் நிறைந்து ஏல்-ஓர் எம் பாவாய்!
 

ஓங்கி உலகளந்தவன் யாரு? = வாமனனா? திருவிக்ரமனா??
சாதாரணமா உலகு அளக்கல! குள்ளமாய் இருந்தாத் தானே பின்னாடி ஓங்க முடியும்? அப்படி வாமனனா இருந்து, திருவிக்ரமனா ஓங்கி, உலகளந்தான்!

மாவலி அசுரன்! ஆனாலும் பக்தன்! பிரகலாதனின் பேரன்!
எம்பெருமானுக்கு என்னிக்குமே தேவாசுர பேதா பேதங்கள் கிடையாது!

* அசுரன் பிரகலாதன் = பக்த சக்ரவர்த்தி! யாரும் பிரகலாதாசுரன்-ன்னு சொல்லுறதில்லை! பிரகலாதாழ்வான்-ன்னு தான் சொல்லுறாங்க! இன்னிக்கும் சுலோகங்களில்/பூசைகளில், பிரகலாதனை முதலில் சொல்லிட்டு, அப்புறம் தான், சுக-வசிஷ்ட முனிவர்களையே சொல்லுகிறார்கள்!

* அசுரன் வீடணன் = வீடணாசுரன் இல்லை! விபீஷணாழ்வான்! 

இப்படி குலம் பார்த்து அல்ல! குணம் பார்த்து வருவது தான் எம்பெருமானின் தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே, தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்!

நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும், நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்!

இந்த உண்மையை உலகத்துக்கு காட்டி அருளியதால் தான் ஓங்கி உலகளந்த "உத்தமன்" என்றாள் கோதை! இந்த அவதாரம் மட்டுமே அவன் திருவடிகளை "அனைவருக்கும்" தந்தது! இராம அவதாரம் கூட பாதுகைகளைத் தான் தந்ததே தவிர, திருவடிகளைத் தரவில்லையே மொத்த உலகத்துக்கும்? 

அதான் "திருவடிகளைத் தந்த ஒரே அவதாரம்" = அதை உத்தமன் என்று பாடுகிறாள்  கோதை!

சைவர்களும், சாக்தர்களும், இன்னும் வேறு வேறு பிரிவினரும், தங்கள் முதன்மைக் கடவுளாகக் கொள்ளாவிட்டாலும், இந்தத் திருவிக்ரமனுக்கு மட்டும், ஒவ்வொரு வேள்வியிலும் மூன்று முறை "உத்தமா, உத்தமா" என்று அழைத்து அவிர்ப்பாகமும், ஆகுதியும் கொடுக்கிறார்கள்! வைணவர்களும் அப்படியே!

திருப்பாவையும் ஒரு ஞான யக்ஞம் அல்லவா! ஆண்டாளும் மூன்று முறை இந்த வாமனை விளித்து, 

1 ஓங்கி "உலகளந்த" உத்தமன் பேர் பாடி
2 அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி "உலகளந்த"
3 அன்று "இவ்வுலகம் அளந்தாய்" அடி போற்றி-ன்னு 
முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்று மும்முறை "உத்தமனுக்கு" அவிர்ப் பாகத்தையும் அளிக்கிறாள்! அவள் பாகத்தையும் அளிக்கிறாள்!
 
ஓங்கி உலகளந்த உத்தமன், "பேர்" பாடி = அவனைப் பாடவில்லை! அவன் "பேரை"ப் பாடுகிறார்கள்! சென்ற பாட்டில் "அடி" பாடி! இந்தப் பாட்டில் "பேர்" பாடி! 
இறைவனின் பேர், இறைவனின் திருநாமம், இறைவனைக் காட்டிலும் உயர்வானது! அடியார்களுக்கு அவனைக் காட்டித் தருவது!

* முன்னம் அவனுடைய "நாமம்" கேட்டேன்! மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்!! - இப்படி முதலில் நாமத்தைச் சொல்லி, அப்புறமாத் தான் அவனைச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்!

* நமசிவாய வாழ்க-ன்னு முதலில் நாமத்தைப் பாடித் தான் திருவாசகமே தொடங்குறாரு மணிவாசகர்! 

இப்படி "நாமம்" பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
* நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "தெய்வம்" - அப்படின்னா இருக்கு? இல்லையே!
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்! நாராயணா என்னும் "நாமம்"!-ன்னு நாமம் தானே இருக்கு?

இந்த நாமத்தை நாமும் இப்போ உரக்கச் சொல்லிப் பாத்துக்குவோமா? ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா - கோவிந்தா! கோவிந்தா!
 

நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி, நீராடினால் = எங்கள் நோன்புக்கு, திருநாமத்தைச் சாற்றிக்கிட்டே (சொல்லிக்கிட்டே) நீராடுகிறோம்!

தீங்கின்றி, நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து = எந்தக் குறைவும் இன்றி, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், நாடு முழுக்க மும்மாரி என்னும் மூன்று மழைகள் பெய்யும்!
ஒரேயடியாக் கொட்டினாலும் பாதகம்! கொட்டவே இல்லீன்னாலும் பாதகம்! அதான் மும்மாரி! 

ஓங்கு பெறும் செந்நெல், ஊடு கயல் உகள = இப்படிப் பெய்ததால் விளைந்த நெல்லு! அந்த நெல் வயலின் ஊடே, தண்ணி பாய்ச்சி இருக்கு! 
அதில் கயல் மீன்கள்
குதித்து விளையாட

பூங் குவளைப் போதில் = நெல்வயலே குளம் போல சதசத-ன்னு இருக்க, அதில் குவளைப் பூ பூத்திருக்கு! (போது=பூ)
பொறி வண்டு கண் படுப்ப = அந்தக் குவளைப் போதில், சாதாரண வண்டு இல்ல பொறி வண்டு! அது வந்து கண் படுக்குது! ஆனா தூங்கலை! 

தேங்காதே, புக்கு இருந்து, சீர்த்த முலை பற்றி வாங்க = பசு வச்சிக்கிட்டே இல்லை-ன்னு சொல்லலை இந்த ஜீவன்! எல்லாத்தையும் நமக்குக் கொடுக்க, நாமளா பாத்து, அதுக்கும் அதன் கன்றுக்கும் கொஞ்சம் பாலை விட்டு வைக்கிறோம்!

குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் = குடம் குடமா நிறைக்கும் வள்ளல்கள் வாழ்க!

நீங்காத செல்வம் நிறைந்து = என்னிக்குமே நீங்காத செல்வம், உங்க வாழ்வில் நிறைஞ்சிக்கிடே இருக்கட்டும்!

ஏல்-ஓர் எம் பாவாய் = பெண்களே, மக்களே, நீடுழி வாழுங்கள்! நீடுழி வாழுங்கள்!!

#பிடித்து_பகிரல்

#திருப்பாவை
#கோதைமொழி

தூர்தர்ஷன் காலம் 1980களில்...... #நிகழ்ச்சி.

ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
 #சுரபி தூர்தர்ஷன் காலம் 1980களில்......
#நிகழ்ச்சி.
ஒவ்வொரு ஞாயிறு இரவு 9.30க்கு,அரை மணி நேர நிகழ்ச்சி.  பொது அறிவை வளர்க்கும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பண்பாடு,பழக்க வழக்கங்களைப் குறித்து ஆய்வு,தரவுகளை சொல்லும்  நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) தீவிர ரசிகன் அடியேன். தொகுத்து வழங்கியவர் சித்தார்த். இம் மாதிரி இப்போது நிகழ்ச்சிகளை
பார்க்க முடியவில்லை.
#ksrpost


*சிவகாசியும், காலண்டர் தொழிலும்.*



------------------------------சிவகாசியில் இப்போது காலண்டர் சீசன். சமீபத்தில் அங்கு சென்றபோது, காலண்டர் அடிக்கும் நண்பரின் அச்சகத்திற்கு சென்றிருந்தேன். முன்புபோல அந்த தொழில் இல்லாமல் மந்தமாக இருந்தது.



ஏற்கனவே பட்டாசு, தீப்பெட்டித் தொழில் இங்கே படுத்துவிட்டது. இந்தியா முழுவதும் இங்கிருந்து காலண்டர் அடித்து அனுப்புவது வாடிக்கை. தினக் காலண்டர், மாதக் காலண்டர்,மேஜை காலண்டர்,டைரி, வாழ்த்து அட்டைகள் என்று விதவிதமாக அடிக்கப்படும். கொண்டைய ராஜ் போன்ற ஓவியர்களின் படங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்தகால காலண்டர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும். ‘கலண்டே’ என்ற லத்தீன் சொல்லே காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. எகிப்தில் தான் முதன்முதலாக காலண்டர் பயன்படுத்தப்பட்டது. அங்கு அறுவடை நாளும், நைல் நதியில் வெள்ளம் வருவது குறித்தும் கணக்கிடப்பட்டதை அடிப்படையாக கொண்டு தான் காலண்டர் உருவானது. 365 நாட்களை 12 மாதங்களாக சந்திரனுடைய முழுநிலவை வைத்தே கால அளவுகளை ஆதிகாலத்தில் கணக்கிடப்பட்டது. 
இந்தியாவிலேயே காலண்டர் தயாரிப்பில் 70 சதவீதம் சிவகாசியிலேயே நடக்கிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக இந்த காலண்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். 1997 முதல் 2017 வரை இதற்கு மத்திய அரசு வரிவிலக்கும் அளித்திருந்தது. தற்போது இதற்கும் ஜி.எஸ்.டி உண்டு. பேப்பர் விலை உயர்வு, பணியாளர் கூலி உயர்வு, அட்டை விலை உயர்வு என்று நாளுக்கு நாள் காலண்டரின் மூலப்பொருட்களின் விலை உயர்வு அதிகரித்துக் கொண்டு வருகிறது. 
குடிசைத் தொழிலாக இருக்கும் இந்த தொழிலுக்கு 1997இல் தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, காலண்டர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று வரிவிலக்கும் அளித்தார். 
தற்போதுள்ள சூழலில் காலண்டர் தயாரிப்பு பணிகள் லாபகரமாக இல்லாமல் மந்தமாகிவிட்டது. சுமார் 1 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு இதனால் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் சிவகாசி வட்டாரத்தில் உள்ளது. இதை மத்திய, மாநில அரசுகள் கவனித்து இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும்.

#சிவகாசி #காலண்டர்_தொழில்
#Sivakasi_Calender_Works
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
18-12-2018.

*மாதங்களில் மார்கழி*

Yes----------------------------------



தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. விஞ்ஞான அடிப்படையில் ஆதிகாலத்தில் பிரித்துள்ளனர் என்று கூறுவது உண்டு. மகாபாரதத்தில் பீஷ்மர் தட்சிணாயணத்தில் வீழ்ந்து உத்திராயணத்தில் அமைதி பெற்றார் என்று சொல்வதும் உண்டு. இப்போது மார்கழி மாதம். மலையாளத்தில் தனுர் மாதம் என்று அழைக்கப்படுவதுண்டு. எல்லாம் கதிரவனைக் கொண்டு காலங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த மார்கழியில் பாவை நோன்புகளை கடைபிடிப்பார்கள். 
மார்கழி மாதத்தை மாண்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. #மார்கழி மாதத்தில் பாடும் பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை இந்த மாதத்தின் விடியலில் பாடுவார்கள்.
ஆண்டாள் என்ற மகாகவி மார்கழிக்கு முகம் தந்தவர். மார்கழியில் நான் ஆண்டாளைப் பார்க்கிறேன். அவர் தமிழில் திளைக்கிறேன். கடவுளை விடக் கவிஞர் பெறுகிற புகழின் முன்னோடி ஆண்டாள். கடவுளைக் கவிதையால் எழுப்ப இயலும் எனக் காட்டியவர். எனக்குப் பக்தியைவிடக் காதலுக்கு அடையாளம். மார்கழிதோறும் நினைவில் மலர்ந்து தமிழில் நம்மை நிறைக்கும் ஆண்டாளுக்கும் அவர் காதலுக்கும் தமிழ் கடமைப்பட்டிருக்கிறது.
*வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்*
*செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்*
*பையத் துயின்ற பரமன் அடி பாடி,
*நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,*
*மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்*,
*செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்*,
*ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி*
*உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.*

பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம் நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.

#Aandal #மார்கழி_மாதம் #திருப்பாவை 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
18-12-2018.

Monday, December 17, 2018

சில நேரங்களில்... தேடலை விட, தனிமையே அதிகம் அறிவை கொடுத்துவிடுகிறது.!

‘’நீ ஆசைப்பட்டு உழைத்தும்
உனக்கு கிடைக்காமல் தகுதியற்றவர்க்கு கிடைக்கிறது. உன்னால் 
நான் ஜெயித்தேன்.....’’  என்றார் நேற்று ஒரு அன்புக்குரியவர்.



ஒருகாலத்தில் விமர்சனங்களையும் வீண்பேச்சுக்களையும் கண்டு பயந்தவன் ஒதுங்கியோடியவன் வேதனைப்பட்டவன் தான் ஆனால் பின் காலங்களும் கடந்து வந்த பாதைகளும்  எனக்கு துணிவையும் தைரியத்தையும் நிறையவே கற்றுத்தந்திருக்கிறது. பல்கலைக்கழகப்பட்டங்களை தவிர என் வாழ்க்கையில் மேலதிக எந்த முயற்சியும் இதுவரை  இல்லைத்தான் ஆனால் எனது காலங்கள் வீணாகிவிட்டதென்றோ வீணாகிப்போகிறதென்றோ என்றும் கண்கலங்கியவனில்லை ஏனெனில் நான், யாரும்  எளிதில் பெற முடியாத நல்ல மனிதர்களின் அன்பை இந்த சமூகத்தில் சம்பாதித்திருக்கிறேன்  என்ற பெருமிதம் எனக்கு நிறையவே எண்டு. பட்டங்களும் பதவிகளும் ஆளமுடியாத நல்ல உறவுகளின் பக்கங்கள், நூல்கள் என்னிடம் நிறையவே உண்டு அதுபோதும் எனக்கு. எனது முயற்சிகளும் பயிற்சிகளும் இந்தமண்ணுக்கு......

வாழ்வின் சில உன்னதமான தருணங்கள் நம்மை அறியாமல் அரங்கேறும்...

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-12-2018.

Sunday, December 16, 2018

விவசாயிகள் சங்க தலைவர் மறைந்த திரு. *சி.நாராயணசாமி நாயுடு*வின் மணி மண்டபம்

விவசாயிகள்  சங்க  தலைவர் மறைந்த திரு. *சி.நாராயணசாமி நாயுடு*வின் மணி மண்டபம்  அமைக்கும் பணி  அவரின் நினைவு நாளான  21-12-2017 அன்று கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் ஆரம்ப  பணிகள் துவங்க உள்ளது. 

அதற்கான அடையாளமாக முதல் செங்கல்லை  திமுக செயல் தலைவர் தளபதி அவரகள் நாராயணசாமி நாயுடு அவர்களின் பேரன் பிரபு வெங்கடேஷிடம் இன்று வழங்கினார். 
அப்பொழுது  திரு சபரிசீசன் உடன் இருந்தார்.

தமிழகத்தின் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்து நினைவு மண்டபம் அமைக்கும் பணி குறித்து  பேசினோம். வைகோ அவர்களையும் சந்தித்தோம். தனது ஒத்துழைப்பை வழங்குவதாக கூறினார். 

திரு.நாராயணசாமி நாயுடு 1984 பொது  தேர்தலின்போது கோவில்பட்டி பயணியர் விடுதியில்,21-12-1984 அன்று மரணமடைந்தார். அப்போது உடனிருந்தவர்களில் நானும் ஒருவன். 




அவரது நினைவாக இந்த பணிகள் சிறப்பாக நடைபெற தளபதி அவர்கள், வைகோஅவர்கள் மற்றும் தமிழக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

#நாராயணசாமி_நாயுடு 
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
*K S Radhakrishnan*
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்*.16-12-2017


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.......

மாதங்களில் நான் #மார்கழி என்கிறான் கண்ணன்......

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்.......

பெருங்கோயிலுடையானுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த பெரியாழ்வாருக்கு துளசி வனத்தில் கிடைத்தப்பெண் கோதை ஆண்டாள்.

ஆண்டாள் பறை வேண்டுமெனக் கேட்கிறாள் , அனைத்தும் அவளது உணர்வாக  , பாடல்களாக.. இந்த மார்கழியில் பாவையின் விடியல் எழுச்சி கீதங்கள்......

கோதையாண்டாள்  தமிழையும்..ஆண்டாள் !

(
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

திருவில்லிபுத்தூர் கோபுரம்)

#ஆண்டாள்
#மார்கழி
#திருவில்லிபுத்தூர்
#andal

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-12-2018.


Saturday, December 15, 2018

திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டு.



————————————————

எட்டையபுரம் பாரதி விழா முடிந்தவுடன் திருநெல்வேலி சென்ற போது ஜங்சன் பஸ் ஸ்டாண்டு கண்ணில் பட்டது; திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை இடித்துக் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது பேருந்து நிலையம் அமைக்க இருக்கிறார்கள்.அதைச் சுற்றிக் கழிந்த எத்தனையோ நினைவுகள் அப்போதெல்லாம் தகரக் கொட்டகையும் மர அழியில் பிரப்பம் பாய் அடித்த டிக்கெட் கவுண்டர்தான் .
ஜங்சன் பஸ் நிலையத்தின் பழைய தோற்றத்தை மாற்றி புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி ஜங்சன் பஸ் நிலையம் இருக்குமிடம் வீரராகவபுரம். பழைய பஸ் நிலைய அடையாளம் மாறிவிட்டது. 

திருநெல்வேலி பழைய இரயில்வே சந்திப்பு கட்டிடம் அடையாளமும் மாறிவிட்டது. சிவாஜி ஸ்டோர், நடராஜ் ஸ்டோர், சந்திரவிலாஸ் ஹோட்டல், தாஜ் ஹோட்டல் (தற்போது பெயர் மாற்றப்பட்டு நியாஸ் ஹோட்டல் என்று உள்ளது), எஸ்.ஆர். சுப்பிரமணியம் பிள்ளை புத்தகக் கடை, ஆறுமுகம் பிள்ளை புத்தக கடை,பேலஸ் டி வேலஸ் சினிமா அரங்கம், சந்தோஷ நாடார் பாத்திர கடை, சந்திரா சாமி வாட்சு கடை போன்றவையெல்லாம் அன்றைய திருநெல்வேலி ஜங்சனின் அடையாளங்களாகும்.

அதில் இன்றைக்கு சாலைக்குமரன் கோவிலும், த. மு கட்டிடமும் தான் எச்சமாக அப்படியே உள்ளன. மற்ற அனைத்து வடிவங்களும் மாறிவிட்டன. பாளையங்கோட்டையில் பஸ் ஏறினால் ஜங்சனில் சற்று நேரம் நின்றுவிட்டு தான் டவுனில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்வதுண்டு. ஒருமுறையாவது இந்த ஜங்சனை வலம் வந்தால் தான் மனதிருப்தி ஏற்படும். 

வடக்கும், தெற்குமாக மூன்று செட்டுகள் இருக்கும். மேற்புறமுள்ள செட்டில் தான் டீ கடை, ஜூஸ் கடை, பேப்பர் கடை அமைந்திருக்கும். மேற்கு செட்டு பக்கம் தான் திருநெல்வேலி நகரப்பேருந்துகள் வரும். மத்திய செட்டிலும், கிழக்கு செட்டிலும் தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், திருச்செந்தூர், மணப்பாடு, சங்கரன்கோவில், இராஜாபளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பஸ்கள் நிற்கும். கல்லூரி காலங்களில்,விடுமுறைக்கு கிராமத்திற்கு திரும்புவதற்கு கோவில்பட்டிக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதற்குள் பெரும்பாடாகிவிடும். பலமுறை கெஞ்சினாலும் டிக்கெட் பெறுவது அவ்வளவு கடினம். அன்றைக்கு டிக்கெட் போடும் இடத்தில் பஸ் நடத்துநர் கம்பீரமாக, சக்தி வாய்ந்தவராக கண்ணில்படுவார். டிக்கெட் க்யூவிற்கு மரத்தடுப்புகள் போடப்பட்டிருக்கும். குறிப்பாக டி.வி.எஸ் பேருந்து சரியான நேரத்தில் புறப்பட்டு சரியான நேரத்தில் சென்று சேரும். பேருந்ததை சுத்தமாகவும், 50 பேருக்கு மேல் ஏற்றாமலும் சரியானபடி பராமரிப்பார்கள். அதுபோல லயன் பஸ், ஸ்ரீராம் பாப்புலர் டிரான்ஸ்போர்ட், சீதாபதி, ஏ.வி.ஆர்.எம், ஆண்ட்ரோஸ், சாலைக்குமரன் ஆகிய  நிறுவனங்களின் பஸ்கள் பிரதானமாக இருந்தன. 
அன்றைக்கு நான் 50களில் பார்த்த பஸ்நிலையம் இன்றைக்கு இல்லை. மனதளவு கவர்ந்த நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் என்றைக்கும் நினைவில் இருக்கும். 

அரசியல் கட்சி அலுவலகங்கள் ஜங்சனை சுற்றியே பெரும்பாலும் இருந்தன. திமுக கட்சி அலுவலகம் அன்றைக்கு சரஸ்வதி லாட்ஜில் இயங்கியது. சிந்து பூந்துறையில் கம்யூனிஸ்ட் மாவட்ட கட்சி அலுவலகம் இயங்கியது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி அலுவலகம் மீனாட்சிபுரத்திலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் வண்ணாரப்பேட்டையிலும், ஜங்சனிலும் மாறி மாறி இருந்ததாக  நினைவு.

நெல்லை நகரில் இயங்கிய முதல் நகரப்பேருந்து எண். 1 சிறிய பேருந்தாக இயங்கியது. வீரராகவபுரம் - நெல்லை டவுனுக்கு மீனாட்சிபுரம் குறுக்குத்துறை வழியாக செல்லும். அப்போதெல்லாம் பேருந்துக்கு முன்பாக இன்ஜின் மட்டும் தனியாக இருக்கும். தற்போது முன்பக்கம் தட்டையாக இருப்பது போலில்லாமல் சற்று கீழிறங்கி நீண்டிருக்கும்.

காயிதே மில்லத், ப.மாணிக்கம்(சிபிஐ) நல்லசிவன்(சிபிஎம்) சோ.அழகர்சாமி,
நல்லகண்ணு, முன்னாள் அமைச்சர்கள மஜீத் ,லூர்து அம்மாள் சைமன் மற்றும் 
ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்ற அரசியல் தலைவர்கள் தென்படுவார்கள்.

படைப்பாளிகள் தொ.மு.சி.ரகுநாதன்,
கு.அழகிரிசாமி,வல்லிக்கண்ணன், கி.ராஜநாராயணன்,தி.க.சிவசங்கரன்,தோப்பில் முகமது மீரான் என பலருடனும் இந்த பேருந்து நிலையத்தில்
வலம் வந்தது நினைவில் பசுமையாக
உள்ளது.

இந்த ஜங்சனில் பஸ் ஸ்டாண்டில், ஜான்ஸ் கல்லூரி ரசாயனப் பேராசிரியர் கல்யாணசுந்தரம் 6 மணிக்கு ஜங்சன் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தால் 10 மணிவரை அப்படியே அமர்ந்திருப்பார். தமிழ் பேராசிரியர் வளனரசு அங்கு பார்க்க முடியும்.ம.தி.தா.இந்துக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் லயனல்,அற்புதமாக ஷேக்ஸ்பியரை பாடம் எடுப்பார்,அவரை அங்கு காணலாம். இந்துக் கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர் ராமச்சந்திரன் அந்த கல்லூரியின் முதல்வரானார். அவர் அருமையான குவிஸ் மாஸ்டர். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் வட்டாரங்களில் நடக்கும் குவிஸ் போட்டியில் இவரை காணலாம்.
சவேரியர் கல்லூரி பேராசிரியர் அந்தோணிசாமி, கிளாரிந்தா  எழுதியவர் சாரா டக்கர் கல்லூரி பேராசிரியர் சரோஜினி பாத்திமுத்து ஆகியோரை அடிக்கடி ஜங்சனில் பார்ப்பதும் பேசிக்கொள்வதும் உள்ளது. முடிந்தால் இவர்களோடு அருகாமையில் உள்ள விடுதிக்கு சென்று காபி சாப்பிட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டதெல்லாம் உண்டு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#மலரும்_நினைவுகள்...
(படம் :திருநெல்வேலி பழைய ஜங்சன் பஸ் ஸ்டாண்டை1980களில்)

செய்தி ஊடகங்கள்

இன்றைய (15-12-2018)தினமணியில் வந்துள்ள  

 குறித்த எனது பத்தி:
————————————————
செய்தி ஊடகங்கள் - எங்கே செல்லும் இந்தப் பாதை?
- வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
சமீபத்தில் பி.பி.சி. சென்னையில் இன்றைய செய்தி ஊடகங்களைப் பற்றி இன்றைய போக்கும், அதன் நம்பகத்தன்மையற்ற நிலைப்பாட்டை குறித்து ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது. இன்றைக்கு உண்மையான பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு, அவசியமற்ற சில சங்கதிகளை பெரிய பிரச்சனைகள் என்று வெளிச்சம் போட்டு காட்டி திசை திருப்புகின்றனர். விவாதங்கள் என்ற பெயரில் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு அந்த விவாதங்களை நடத்தி, கருத்தாக்கம் இல்லாமலும், சரியான தீர்வுகளையும் கண்டறியாமல் ஒப்புக்கு இரவு நேரங்கில் கூடி சம்பாணஷனைகளை நடத்தி கலைகின்ற நடவடிக்கை தான்.
என் சிறுபிராயத்தில் பார்த்து வளர்ந்த உலகம் மாறிவிட்டது. ஊடகம் மட்டும் மாறாமல் இருக்குமா? அதிநவீன தொழில்நுட்பத்தில் மீடியா என்ற வார்த்தையின் எல்லையும் பரப்பும் விரிந்திருக்கிறது. ஆனால் அதன் கடமையும் பொறுப்பும் சமூகத்தையும் மக்கள் நலன்களையும் புறக்கணித்த நிலையில் பயணிக்கிறதோ என்ற கவலையும் வருத்தமும் மனதில் தேங்கியிருக்கிறது. தமிழகத்தில் காட்சி ஊடகங்களின் நிலை கவலைக்குரியதாக மாறிவருகிறது. பல ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுடன், பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் சில அக்கறைகளை தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
முன்பொரு காலத்தில் வார, திங்கள் இதழ்கள் தாம் நினைத்ததை வெளியிடும் அச்சுப்  பதிப்புகளாக வெளியாகின. அன்றாடச் செய்திகளுக்கு நாளிதழ்களைத்தான் நாட வேண்டும். நாளிதழ்களுக்கு வேறு முகம். பிற இதழ்களுக்கு வேறு உள்ளடக்கம். சிறுகதைகள், தொடர்கள், கவிதைகள், கேள்வி பதில்கள், துணுக்குகள் என்று களைகட்டும்.  நாளிதழ்களைப் படிப்போர் வேறு நாட்டமுடையவர்கள். நாளிதழ்களிலேகூட உள்ளூர்ச் செய்திக்கு தனியிடம் தரப்பட்டிருக்காது. உள்ளூர் மாவட்ட இணைப்பிதழ்களும் வரத்தொடங்கவில்லை.  ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, ராணி, தேவி போன்ற இதழ்களை வாங்குவோரின் விருப்பம் வேறு. மீறிப்போனால் அவ்விதழ்களில் அவ்வாரத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வினைப் பற்றிய தலையங்கமோ ஒரு கட்டுரையோ இருக்கும்.எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. 
பத்திரிகையை எழுத்துக்கூட்டிப் படித்த தலைமுறை வாட்ஸ் ஆப்பில் செய்தியைப் பார்க்கிறது. பேஸ்புக்கில் உள்ளூர் பிரச்சினை முதல் உலகப்பிரச்சினை வரை கருத்து சொல்கிறார்கள். கட்டற்ற சுதந்திரமான காலம். உண்மைதான். தனிமனித சுதந்தரம் தேவைதான். இதே நிலை தனிமனிதர்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் சமூக ஊடகங்களில் தொடர்கிறது. இன்று இணைய தொடர்பும் ஸ்மார்ட்போன்களும் வைத்திருக்கிற ஒவ்வொருவரும் ஊடகர்களாக மாறியுள்ளனர். பொதுவெளிகளில் ஒரு விஐபியைப் பார்க்கும் அவர்கள், அதன் சாட்சியாக செல்பியாக, புகைப்படங்களாக உடனே எடுத்து வெளியிடுகிறார்கள். அதுவே காட்சி ஊடகங்களின் செய்திகளுக்கான தீணியாகவும் மாறிவருகிறது.
ஒடிசா மாநில காவல்துறை கூடுதல் தலைவர் மனோஜ் சாப்ரா ஒரு பத்திரிக்கையில் எழுதிய பத்தியில், “கடுமையான தணிக்கைகளையும் தகவல்கள் உண்மையா என்பதற்கான சோதனைகளையும் தாண்டி வரவேண்டியிருந்தது. தற்போது அதற்கு போட்டியாக உருவெடுத்துள்ள சமூக ஊடகங்கள் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இதுவொரு பேரழிவுத் தொழில்நுட்பமாகிவிட்டது. தற்காலத்தில் எல்லோருமே செய்திகளைப் படிக்கும் வாசகரோ தொலைக்காட்சி பார்வையாளரோ மட்டுமல்ல. அவரே தகவல்களையும் செய்திகளையும் உருவாக்குபவராக இருக்கிறார். டிஜிட்டல் வெளியில் செய்திகளின் உண்மைத்தன்மையைப் பரிசோதிக்க வழியே இல்லை” என்று கவலையுடன் குறிப்பிடுகிறார்.
தற்கால ஊடகங்களின் நிலையைப் பற்றி சுட்டிக்காட்டும் அவர் மிர்சா காலிப்பின் கவிதையை எடுத்துக்காட்டுகிறார். ஒவ்வொரு முறை கண்ணாடியைத் துடைத்தாலும், அதில் முகத்தைக் காணும்போது அழுக்காகவே தெரிகிறது. முகத்தை சுத்தமாக்காமல் கண்ணாடியைத் துடைத்து என்ன பயன்? ஆயினும் வாழ்க்கை முழுவதும் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டே இருந்தேன். காட்சி மாறவேயில்லை என்கிறது அந்தக் கவிதை.
இன்றைய நிலையை இதைவிட தெளிவாக சொல்லிவிடமுடியாது. தமிழகத்தில் பெருகியுள்ள தனியார் காட்சி ஊடகங்களில் நேர்மையற்ற உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை அன்றாடம் பார்க்கமுடிகிறது. வாட்ஸ் ஆப்பில் வெளியாகும் எடிட் செய்யப்படாத காட்சிகளை செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள். உள்ளூரில் நடக்கும் குற்றச்செயல்கள் அப்படியே வெளிவருகின்றன. எத்திக்ஸ் என்பதை மண்ணில் புதைத்துவிட்டதைப்போன்ற உணர்வு.
வைரமுத்து – சின்மயில வீ டூ பிரச்சினையை தீவிரமாக தமிழ்ச் சூழலில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட தருணத்தில், சின்மயி பேஸ்புக்கில் லைவ்வாக பேசுவதை அப்படியே லைவ் செய்தார்கள். ஒன்றுமே புரியவில்லை. தனக்கான பிரத்யேகமான சமூக ஊடகப்பரப்பில் தன்னுடைய சொந்த கருத்துகளை அல்லது புகார்களை தெரிவிக்கும் ஒருவருடைய பேச்சை லைவ் செய்வது ஊடக தர்மமா என்று தெரியவில்லை. அதை ஆதாரமான ஒரு செய்தியாகக் கொள்ளமுடியுமா. அதிலிருந்து மக்களுக்கு ஊடகங்கள் என்ன கருத்தை தெரிவிக்க விரும்புகின்றன.
இந்தப் பக்கம் வந்தால், தமிழில் பெருகியுள்ள செய்தி சார்ந்த பரபரப்பூட்டும் யூடியூப் சேனல்கள். பெருமைப்பட முடியவில்லை. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் பசியில், அவர்கள் வைக்கும் தலைப்புகள் கவலை அளிக்கின்றன. பேசுவதற்கு கூசும் வார்த்தைகளை தலைப்பாக வைக்கிறார்கள். இந்தக் கட்டுரையில்கூட குறிப்பிடமுடியாத அவச்சொற்கள். ஒரு சாதியினர் பற்றி அவதூறாகப் பேசும் பிற சாதித் தலைவர்களின் பேச்சுகளை எடிட் செய்யாமல் யூ டியூப் சேனல்களில் வெளியிடுவதன் மூலம் எளிதாக ஒரு கலவரத்தை உருவாக்கிவிடமுடியும். மத இணக்கத்தைக் கெடுத்துவிடமுடியும். அதற்கான வாய்ப்புகளை யூடியுப் சேனல்கள் உருவாக்குகின்றன.
சமூக வெளியில் சின்ன பிழை நேர்ந்தாலும், ஒரு பிரபல மனிதரை கேவலப்படுத்திவிடமுடிகிறது. சமூக ஊடகங்களில் இருக்கிற எல்லோருமே விமர்சகர்களாக, சிறு தவறும் செய்யாத மாமனிதர்களாக, குற்றம் செய்யாத குணவான்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். அபத்தமாக இருக்கிறது.
நடிகர் சிவகுமார், ஏதோவொரு சூழலில் செல்பி எடுக்கும் செல்போனை தட்டிவிடுகிறார். அவ்வளவுதான், அவருடைய சாதியில் இருந்து அவர் பேசும் பேச்சில் இருந்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரே தவறு என்று உணர்ந்து அறிக்கை வெளியிட்ட பிறகும் அவரை விடவில்லை. எனக்குப் புரியவில்லை. என்ன மனநிலையில் நாம் இருக்கிறோம். மன்னிக்கும் மனநிலையை மறந்துவிட்டோமோ. நாம் செய்யாத ஒரு தவறை அவர் செய்துவிட்டாரா… மகாத்மாகவே இருக்கட்டும். தவறுகள் நேராதா. தினமும் சமூகவெளியில், அலுவலகத்தில், குடும்பத்தில் என தனிமனித வாழ்வில் எத்தனையோ அபத்தங்களையும் குற்றவாளி  மனிதர்களையும் சகித்துக்கொள்கிற, கண்முன்னால் நேர்கிற குற்றங்களை எதிர்த்துக் கேட்கத் திராணியற்ற நாம்தான் பிரபலங்களைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறாம். இது சரியான அணுகுமுறையா… யோசிக்கவேண்டும்.
வாட்ஸ்ஆப்பில் தினமும் ஆதாரமற்ற அவதூறுகளை அதிகம் வெளிவருகின்றன. அந்த செய்திகளைக்கூட விசாரிக்காமலேயே பத்திரிகைகள் வெளியிடத் தொடங்கிவிட்டன. நான் முந்தி, நீ முந்தி என்கிற ரேட்டிங் போட்டியில் மக்கள்தான் பணயக்கைதிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்குத் தேவையற்ற அனாவசியமான நூற்றுக்கணக்கான செய்திகளை ஊடகங்கள் திணிக்கின்றன.
சேலம் ஆத்தூரில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சிறுமி ராஜலெட்சுமியை ஊடகங்கள் மறந்துவிட்டன. அவரைப் பற்றிய கரிசனம் யாருக்குமில்லையா. அந்த ஏழைச் சிறுமியின் உயிருக்கு மதிப்பில்லையா.. டெல்லியில் நடந்தால்தான் கண்டுகொள்வோமா… ராஜலெட்சுமி கொலையுண்ட செய்தியைவிட சர்க்கார் பட சர்ச்சைதான் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக மாறிப்போனது. தமிழகத்தில் சென்னைக்கு வடக்கே சோழவரம், உளுந்தூர்பேட்டை, செட்டிநாடு, கோவில்பட்டி, கயத்தாறு என்ற 5 இடங்களில் விமான நிலையங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாக உள்ளன. இன்னும் அவை விமான நிலையங்களாகவே கருதப்பட்டு பேணப்படுகின்றன. இதற்கு பராமரிப்பு செலவும் வீணாக செய்யப்படுகிறது. இந்த விமான நிலையங்களை சரக்கு போக்குவரத்து, விமானப் படை பயிற்சியகம், விமானம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், வெறுமனே நிலமாகவே ஓடுதளத்தோடு இருக்கின்றது. இம்மாதிரியான பிரச்சனைகள் தமிழகத்திலுள்ள ஆட்சியாளர்கள், பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கூட தெரியாது. இப்படிப்பட்ட வெளிச்சத்துக்கு வராத முக்கிய பிரச்சனைகள் தமிழகத்தில் 100க்கும் மேல் உள்ளது. இதை ஒரு சிறு பிரசுரமாகவே வெளியிட்டுள்ளேன். இப்படியான தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எல்லாம் பேசுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. புலனாய்வு ஊடகவியல் – இதழியல் என்பதெல்லாம் நடிகையின் வாழ்க்கையில் நடந்தது என்ன? போன்ற கருமாந்திரங்களையே இன்றைக்கு புலனாய்வுக்கான ஊடக இலக்கணமாக திகழ்கிறது. வாழ்வாதாரப் பிரச்சனைகளில் புலனாய்வு என்பதில் அக்கறைப்படுவதுமில்லை. அதனால் அவர்களுக்கு ரேட்டிங்கும், உரிய விளம்பர வருமானமும் கிடைக்காது என்பதற்காக மேற்சொன்ன தமிழ்நாடு பிரச்சனைகளில் எல்லாம் கவனம் செலுத்த மாட்டார்கள். மக்களும் இதற்கு ஒரு காரணம் தான். சில திடீர் தலைவர்கள் எந்த தியாகமும், தகுதியும் இல்லாமல் பொது வாழ்வில் நுழைந்து அவர்களுக்கும் ஊடக வெளிச்சத்தை தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையைத் தான் இன்றைய ஊடகங்கள் செய்கின்றன. இப்படியான சில திடீர் தலைவர்களுக்கு இந்த ஊடக வெளிச்சங்களால் தான் தங்களுடைய இருப்புகளையும் காட்டிக் கொள்கிறார்கள். இரவுநேர விவாதங்கள் என்ற சம்பாஷனைகளில் பிரச்சனைகளின் தன்மையை தெரியாத சிலரை எல்லாம் எதற்கு அழைத்து முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதும் கமுக்கமாக உள்ளது. இதுவே இன்றைய ஊடகங்களின் 24 மணி நேர செய்திச்சேவையாக உள்ளது.
களநிலவரம் தெரியாத செய்தி ஊடகங்கள் ஒரு நாள் மக்களால் புறக்கணிக்கப்படும். இன்றே அது மெல்ல நடக்கத் தொடங்கிவிட்டது. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளை ஆர்வத்துடன் பார்த்தவர்கள், சீரியல்கள் தேவலாம் என்று பேசுகிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களின் பின்னணி அரசியலை மக்கள் தெரிந்துவைத்துப் பேசுகிறார்கள். இந்த செய்தி ஏன் இப்படி வருகிறது… என்ற மக்களின் கேள்விக்குப் பின்னால் உள்ள அரசியல் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டது.
டெல்லியில் நடந்த ஒரு விருதுவிழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து நினைவுகூரத்தக்கது. “நம் நாட்டில் பத்திரிகை துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றுடன் பத்திரிகை துறைக்கு நெருங்கிய தொடர்பும் பங்களிப்பும் இருக்கிறது. 1819 ம் ஆண்டு ராஜாராம் மோகன்ராய் கொண்டு வந்த சம்வாத் கெமுதி முதல் மகாத்மா காந்தி கொண்டு வந்த ஹரிஜன், யங் இந்தியா வரையில் சமூகத்தையும், தேசியத்தையும் வளர்த்ததில் அச்சு ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது” என்றார்.
பிரிட்டனில் சமூக ஊடகங்கள் இளைஞர்களின் மனநலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்ற ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இளைஞர்களின் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூவலைதளங்களின் தரவரிசையில் இன்ஸ்டாகிராம் மிக மோசமானது என்று தெரியவந்தது. இதுபற்றிய செய்தி பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியானது. ''சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே மனநல பிரச்னையை தூண்டுவதாக இருக்கலாம்" என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களை நன்மைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அதே நேரத்தில், இன்ஸ்டாகிராம், சுய வெளிப்பாடு மற்றும் சுய அடையாளம் ஆகிவற்றின்மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுததியிருப்பதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆய்வில் வெளியாகியுள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், மனநலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை சரிப்படுத்துவதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்தவேண்டும் என்று பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனநல பாதிப்பு உள்ளவர்களை சமூகஊடகங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான உதவியை பற்றிய தகவல்களை மறைமுகமாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களின் தாக்கம் ஒருபுறம், மறுபுறத்தில் செய்தி என்ற பெயரிலான யூ டியூப் சேனல்களின் கட்டற்ற சுதந்திரம் எல்லாமே வளர்ச்சியுடன் கலந்த கவலையாகவே தெரிகிறது. சிலர் அவசியற்றைதை  ஊதிப்பெருக்கு
வதிலேயே குறியாக இருப்பார்கள் சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரச்சனைகளே இல்லாத சமாச்சாரங்கள், உப்புக்கு சப்பில்லாத பேட்டிகள் பெரிதாக்கக்பட்டு நேரத்தை வீணடித்து இதுதொடர்பான செய்திகளில் வெளியிடப்பட்ட யூ டியூப் காட்சிகள், டிரோல்கள், மீம்ஸ்கள் ஆராயப்பட வேண்டியவை. இவை நாகரிக சமூகத்தின் அடையாளமா என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.  
Issues are non - issues here, Non - issues are issues here.
என்ன செய்ய? இது தான் இன்றைய நிலை.....
விதியே விதியே தமிழக சாதியே, என் செய்ய நினைத்தாயோ?

#ஊடகங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings

-செய்தித் தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
rkkurunji@gmail.com

Friday, December 14, 2018

காங்கிரஸ் பார்வைக்கு ..........

காங்கிரஸ் பார்வைக்கு ..........
————————————————
ராகுல் காந்திக்கு அரசியல் தெரியாது, தெரியாது என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். இன்றைக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் என இருப்பது மறைமுகமாகவும், உளவியல் ரீதியான பார்வையும் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு ஒரு அடிப்படையாக இருந்தது. 

இது மட்டுமல்லாமல் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஏடிஎம்மில் காத்திருந்தது, பணப்பரிவர்த்தனை போன்ற பிரச்சனைகளில் சாதாரண மக்களையும் அல்லாட வைத்துவிட்டார். 

விவசாயிகளும் வாடி வதங்கினர். அதிகபட்சமாக நிடி ஆயோக்கின் அறிக்கையின்படி சாதாரண விவசாயியின் வருட வருமானமே இருபது ஆயிரம் ரூபாய் தான்.இதை கொண்டு எப்படி ஜுவிக்க முடியும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான நியாயமாக விலையில்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். இதையெல்லாம் மோடி பரிசீலிக்கவே இல்லை. 
மகாராஷ்ட்டிராவிலும், டெல்லி விவசாயிகள் தெருக்களிலும் போராடினார்கள். இதையெல்லாம் மோடி பாராமுகமாகவே இருந்தார். 

சட்டீஸ்கரில் பூர்வகுடி, கிராமப்புற மக்களின் வாழ்வைக் கெடுத்து கார்ப்பரேட்களின் ஆதிக்கம் அதிகப்படியாகி நடுத்தர மக்களும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர். 
சட்டீஸ்கரில் சட்ட ஒழுங்கு மீறல் ராஜஸ்தானில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் காங்கிரசுக்கு வாக்களித்தனர். 

ராகுலுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தல் என்ற சவாலை வென்றெடுக்க இந்த 5 மாநிலங்களில் கீழதட்டு மக்களின் கவலைகளையும் போக்கினால், இந்திரா காலத்தில் காங்கிரஸ் கோலோச்சியது மாதிரியான உயரத்தை எட்டலாம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings

Thursday, December 13, 2018

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பு பிரச்சனை.

* “இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவு செல்லாது .அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து*_” 
சிறிசேனா,இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமா?சீனா தவிர உலக நாடுகள் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தை கடுமையாக கண்டித்தது. ஆனால் இந்தியா வேடிக்கை பார்த்தது. பிரதமர் 
மோடி இது குறித்து வாயே திறக்க வில்லை....

#இலங்கை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...