மைக் கிடைச்சுட்டா......
கவனம் தேவை.
————————————————-
கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
எழைகள் யாருமில்லை ...செல்வம் ..ஏறியோர் என்றும் இல்லை ...
வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் ..மாண்புடன் வாழ்வோமடா ...
வெள்ளை நிறத்தொரு பூனை..எங்கள் வீட்டில் வளருது கண்டீர் ...
பிள்ளைகள் பெற்றதப் பூனை - அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந் தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது ஏற்றமென் றுஞ்சொல்ல லாமோ?
சாதி பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
சாதி கொடுமைகள் வேண்டாம், - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
-பாரதி.
ஜாதி, மத பேதங்கள் கூடாது என்பது நாகரிக, பண்பாட்டு மனிதர்களின் அணுகுமுறையாகும். இதை புரிதல் இல்லாமால் எந்த தரப்பும் அனுக்கூடாது.இதை முக்கியமாக நடுநிலையோடு பார்வையில் கொண்டு
செல்வது ஆரேக்கியமானது.
ஜாதி முறைகள் கூடாதென்று ராமானுஜர் எடுத்த நடவடிக்கைகள், கடையத்தில் பாரதி செய்த செயல்களும், மதுரை வைத்தியநாத ஐயரின் மீனாட்சிக் கோவில் ஆலயப் பிரவேசம், கோபி ஜி.எஸ்.லட்சுமண அய்யர், தந்தை பெரியார் போன்ற பல ஆளுமைகள் எல்லாம் வழிவகுத்த வழிகாட்டுதல்.
பக்தி இலக்கியங்களில் நம்பிக்கை இல்லையென்றாலும் நந்தனார், திருப்பாணாழ்வார், வால்மீகி, ஏகலைவன் போன்றோர்கள் எல்லாம் அங்கீகரித்த செய்திகளை எல்லாம் தலைமுறை, தலைமுறைகளாக கொண்டாடி வருகிறோம். அமைதி,நல்லிணக்கம் பேணி சமுதாயத்தை கொண்டு செல்லவேண்டுமே ஒழிய, இதை வைத்துக் கொண்டு குளிர் காய்ந்தும், சுயநலமாக குறுகிய ஆதாயத்தோடு செயல்படுவது நல்ல ஆரோக்கிய நிலை இல்லை.
இதனால் எதிர்வினைகள் அதிகரித்து மேன்மேலும் சிக்கல்கள் தான் உருவாகும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். போகின்ற சிக்கல்களை பார்த்தால் நல்லதாக தெரியவில்லை. ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்ற காலக்கட்டத்தில் நேர்மையாக, அமைதியாக, சுயமரியாதையோடு வாழ வேண்டும். நேர்மையான, சுயலாபமில்லாத போர்குணம் வேண்டும்.
மைக் கிடைச்சுட்டா......
கவனம் தேவை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings
No comments:
Post a Comment