——————————————-
#சிறுவாணிவாசகர்மையம் மறுபதிப்பு செய்திருக்கிற க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ஆட்கொல்லி சிறுவாணி வாசகர் மையம் தலைவர் நன்பர் திரு ஜி.ஆர்.பிரகாஷ் அன்புடன் அனுப்பி வைத்தார். அதை படித்துவிட்டு அந்த
சூழலை இரண்டு நாட்களாக அசை
பொட்டுக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது; நகர முடியவில்லை .
கடந்த 1950-80ல்முப்பது ,நாற்பது ஐம்பது வருடங்கள் முன்புவரை உறவினர் வீட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி தங்கி படிக்க வைப்பது உறவு நடைமுறையில் இருந்திருக்கிறது . அப்படி தன் மாமா,மாமி வீட்டில் தங்க நேர்ந்து படிக்கிறவன் இதில் நாயகன்.அவன் பார்வையில் வட்டிக்குப் பணம் கொடுத்து ( லேவா தேவி)லட்சாதிபதியாகிற மாமா வை,அவர் மனைவியை ஆகியோரின் குணங்கள் படியாத அவர் மகனை , பணத்தை இரட்டிப்பாக்குகிறதிலேயே முனைப்புடன் இருந்து வாழ்கிற மாமாவின் நிழலில் ,அவரின் சாதுர்ய மனைவியின் வளர்ப்பில் தான் பெரியவனானாலும் தனக்கு பணத்தைப் பற்றிய ஒரு சமத்துவம்
இல்லாதிருப்பதை சொல்லியிருக்கிறார் இதன் படைப்பாளி க.நா. சு.
பணம் படைத்தவன் ,பணம் இல்லாதவன் என்கிற பேதம் தான் கொடுமை கொடுமையிலும் கொடுமை.குடும்பம்,பொது தளங்கள்,
உற்றார் உறவினர் இடையே மனிதனை
உயர்த்துகிறது அந்தஸ்தில்........
பணம் இருந்தால் கேடு கெட்டவனையும்
உத்தமர் ஆக்கிறது.பணம்தான் பிராதனம் என்பது யதார்த்தம்.அதுவே
சகலமும்,மிருக பலம் etc
ஆட்கொல்லியில் சில காட்சிகள்:
// மாமாவோ,மாமியோ ஓடிப்போ என்று சொல்லி அவனை விரட்டியிருக்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.அவன் வீட்டிலிருந்த வரையில் அவனை ஏவுவதற்கு மாமிக்கு ஆயிரக்கணக்கான காரியங்கள் இருந்தன. சாப்பாடு சரியாகப் போட்டிருக்க மாட்டாள்.உண்மைதான். சோற்றைத் தின்னும்போதும் வாயால் பொறிந்து கொட்டி, நெஞ்சுக்குக் கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்//
இந்த வரிகள் உணர்வு பூர்வமானது.
க.நா.சு வின் எழுத்தில் கதைநெடுக ஒட்டிக்கொண்டே வருகிற அந்த எள்ளல் தொனி..
" ஏய் எல்லாம் பொய்யடா! இதுக்காடா இப்படி அலையறீங்க !" என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
புத்தகத்தில் Bharathi Mani அவர்கள் தம் மாமனார் க.நா.சுப்ரமண்யம் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் , வ.ஸ்ரீனிவாசன் அவர்களின் வாசிப்பனுபவம்
இரண்டும் வாசகர்களுக்கு போனஸ்.
க.நா.சு தனது முன்னுரையில் சொல்கிறார்.
//வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் இன்னொரு மருமான் சமையற்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என று ஏற்பட்ட மெலோட்ராமா .அதிகப்படுத்திக்கூறல்.,கோயின்சிடென்ஸ் என்கிற வகையைச் சேர்ந்து விட்டது .அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது போகட்டும் என்று விட்டு விட்டேன். (//
// நல்லது செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச் சொல்லிச் சாதித்து விட முடியாது .நம் கண்ணெதிரிலே தப்பு செய் கிறவர்களை அப்படி ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை.தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறோம்.தவறு செய்துவிட்டு தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று சொல்லி ஆனந்தப்படும் உலகமிது .கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.//
// மனித சுபாவத்திலே ஒரு பகுதிக்குப் பிறர் செய்கிற தவறுகளை எடுத்துச்சொல்லி ஆனந்தப்படுகிற ஒரு கர்வம் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது//
// அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான்//
// சிருஷ்டி தத்துவம் மிகவும் விசித்திரமானது .மனிதன் தான் சிருஷ்டித்துக்கொண்டு ,சௌகரியம் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ என்று எண்ணும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது//
// பணத்தை ஒரு லக்ஷியமாக எண்ணாமல் வாழ்க்கை நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்றுதான் மதிக்கிறது.வாழத்தெரியதவன் என்றும் சொல்லி விடுகிறது.பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.சிலசமயம் சிந்திக்கும்போது இதை கலியுகம் என்று சொல்வதற்குப் பதில் பணயுகம்,பொருளாதார யுகம் என்று சொல்லலாம் என்றுதோன்றுகிறது.அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப் பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கி விட்டால் அதை என்னவென்று சொல்வது?//
// பணக்கார்ர்களிடம் பணம் சேருகிறது ஏழையிடம் பணம் படிப்படியாகப் பணம் குறைகிறது .கண்கூடாக இது தினமும் காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ பாங்குகள் முதல் தனிமனிதர்கள் வரையில் எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் .உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு,இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உறவினனுக்குச் செய்தால் ,அந்த ஏழை உறவினன் ஏழைமை நீங்காவிட்டாலும் ,அன்புடனும்,ஆதரவுடனும் ஒரு கவலை நீங்கியிருக்க மாட்டானோ? உதவி தேவையாகிற இடத்திலே ,உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக் கூடாது என்பதுதான்
ஈசுவர சிருஷ்டியின் நியதியா?//
தெரியாத ஒரு விஷயத்தை மறைப்பதற்காக" சில பேருக்கு அப்படித்தான் சேரும் ,தொட்டதெல்லாம் போன னாகும் ஜாதகம் " என்றுசொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.பர்ஸைத் தொட்டால் தொட்ட மாத்திரத்திலேயே பர்ஸைக் காலியாக்கி விடுகிற ஜாதகம் அதற்கென்ன செய்வது?//
#ஆட்கொல்லி
#கநாசுப்ரமண்யம்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25/12/2018
No comments:
Post a Comment