Tuesday, December 4, 2018

ராஜீவ்_காந்தி படுகொலையில் .....

பத்திரிக்கையாளர்களும், சில நண்பர்களும் என்னிடம், #ராஜீவ்_காந்தி படுகொலையில் விடுதலைப் புலிகளுக்கு சம்மந்தமில்லை என்று கடந்த 2 நாட்களாக விடுதலை புலிகளின் அறிக்கையையும், நீங்கள் 1991லிருந்து தொடர்ந்து இந்த படுகொலை தொடர்பாக எழுப்பிவரும் அதுகுறித்தான வினாக்கள், இந்த துயரச் சம்பவம் தொடர்பாக வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய காணொளிகளையும் பதிவுசெய்து வருகிறீர்களே அது குறித்து சற்று விரிவாக சொல்ல முடியுமா என்று கேட்டனர். 

அந்த நண்பர்களின் விசாரிப்புக்கு;

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியுறவுப் பொறுப்பில் இருந்த தளபதி கிட்டு 01/09/1991 அன்று பிபிசிக்கு அளித்த பேட்டியில், ராஜீவ் படுகொலைக்கும், புலிகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று அந்த சம்பவம் நடைபெற்ற காலகட்டத்திலேயே தெளிவுபடுத்தினார். அதற்குபின், விடுதலைப்புலிகளின் அறிக்கைகளிலும் இதுகுறித்தான பதில்களையும் சொல்லியதுண்டு. கடந்த 10/04/2002இல் சர்வதேச ஊடகவியலாளர்களின் பேட்டியிலும் பிரபாகரன், இதுவொரு துன்பியல் சம்பவம் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது பாலசிங்கமும் உடனிருந்தார். 

ராஜீவ் பிரதமராக இருந்தபோது 1980 களில், அந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் நல்ல தொடர்பிலும் உறவிலும் தான் இருந்தார். வடமராச்சியில் தமிழர்களின் மீது ஜெயவர்த்தனே போர் தொடுத்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் அந்த பகுதியில் உணவுப் பொட்டலங்களை இலங்கை அரசின் அனுமதியில்லாமல் வழங்கியதெல்லாம் கடந்த கால நினைவுகள். எனவே விடுதலைப் புலிகளை ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி ஆகிய இருவரும் மதித்தனர் என்பது வரலாற்று செய்தி.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04/12/2018

#KSRPostings 
#KSRadhakrishnanPostings 
#ராஜீவ்_காந்தி
#விடுதலை_புலிகள் 
#ஈழம்

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...