Thursday, December 27, 2018

நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.....

நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.......
————————————————-
கடந்த 1989இல் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் திமுக  வேட்பளாராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக சமூக நீதி காவலர், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் இதே நாள் (27.12.2018) 27-12-1988இல் வந்திருந்தார். கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். எட்டையபுரத்துக்கும் வந்தார். ஆனால் அந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தேன்.
உடன்வைகோஅவர்கள். இந்த தேர்தலில் எனக்கு பணியற்றிய
வழக்கறிஞர்கள் பின் நாட்களில் உச்ச நீதிமன்ற, உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஆனார்கள். எனது உதவியாளர்கள் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள் . 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீங்கா நினைவுகளாக இன்றும் பளிச்சிடுகிறது.

#வி_பி_சிங்
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27/12/2018


No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...