Thursday, December 13, 2018

சில மனிதர்கள் சில நிதர்சனங்கள்.... morning இட மாறு அரசியல் தோற்ற பிழைகள்.



————————————————
எட்டையபுரம் பாரதி விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்ப மதுரை விமான நிலையத்தில் காத்து  இருந்த நிலையில் , தமிழகம் அறிந்த மூத்த பத்திரிக்கையாளர், படைப்பாளியை அங்கு சந்தித்த போது பல செய்திகளை பரிமாறிக்கொண்டோம். தமிழகத்தின் கடந்த கால அரசியல் வரலாறுகளும், தற்போதைய பிரச்சனைகளையே தெரியாதவர்கள் எல்லாம் 2002, 2010க்கு பிறகு தலைவர்களாக இப்போது மேடைகளில் வெத்து சவடாகள் விடுகின்றனர்.



எந்த அரசியல் அனுபவம், சம்பந்தமில்லாதவர்கள திடீர் தலைவராகிவிடுகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளாக இந்த போக்கு தமிழகத்தில் உள்ளது.மற்ற மாநிலங்களில் இந்த குழப்ப நிலை இல்லை. 
அரசியலுக்கு தியாகமும், நீண்டகால நேர்மையான பொது வாழ்வு களப்பணிகளும்,ஆளுமையான அரசியல் அனுபவம் தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் 4 பேர் அவரை ஆதரித்ததாலும் அவர் தலைவராகி
விடுகிறார். 

உங்களை 1970 களில் மாணவர் அரசியல் காலத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் இவர்கள் பிறந்திருக்க மாட்டார்கள். நீங்கள் தேர்தல் களங்களில் போட்டியிட்டிருந்த போதெல்லாம், ஏதோ குச்சி ஐசும்,பஞ்சு மிட்டாய் கையில் வைத்து கொண்டு ஓடி திருந்திருப்பார்கள்........

எந்த காலமும் நீண்டகால அரசியல் உழைப்பு,அதில் தூய்மையான அனுபவமும் தேவையில்லை. சாதி,வேறுசில பின்புலங்களை கொண்டு இன்றைக்கு சிலர் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பெயர்களை கூட 1999,2000 கால கட்டத்தில்  எல்லாம் அறிந்ததில்லை., 

தமிழகத்தின் முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் எல்லாம் நீண்ட கால அரசியல் களத்தில் இருந்து அந்த பதவிக்கு வந்தனர். பொதுவாழ்வில் உழைப்பு  என்ற ஏணிப்படிகளில் ஏறாமல்
தலைவர்களாகவும், முதலமைச்சர்க்
காளாவும் எளிதாக ஆகி விடுகின்றனர் என்ன செய்ய? என்று அவர் சொல்லிய வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

சாதாரண கடைநிலை ஊழியருக்கு அனுபவம்,தகுதி, படிப்பு வேண்டும் .
ஆனால் முதலமைச்சர் ஆவதற்கு எல்லாம் எவ்வித தகுதியும்,நீண்டகால பொது வாழ்வு உழைப்பும், அனுபவம் வேண்டாமென்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி சென்றுவிட்டார் என நன்பர் சொன்ன விடயங்களில் சமூக பதில் அளிக்க முடியாத நியாயங்களும், கவலைகளும் உள்ளன.

உங்களைப் போல காவிரி, கச்சத்தீவு, தமிழக நதிநீர்ப் பிரச்சனைகளில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய தமிழக பல உண்மையான பிரச்சனைகள்  திடீரென வந்துள்ள instant leaders க்கு தெரியுமா ?என்றார்.
இதுதான் இட மாறு அரசியல் தோற்ற
பிழைகள். நாடும் மக்களும் இதையும் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்றார்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-12-2018
#KSRadhakrishnan_postings
#KSRpostings
#தகுதியே_தடை

(படங்கள்: ஜெயலலிதா புத்தகம்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...