*நாட்டிலேயே எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தமிழகம் 3வது இடம்*
தமிழக எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு எதிராக மொத்தம் 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரிவாக விசாரிக்க உத்தரவிட கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நாட்டிலேயே எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. 321 வழக்குகளில் 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது, மற்ற வழக்குகள் தற்போது வரை விசாரணை நிலைக்கு வரவில்லை என அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment