மீத்தேன், ஹட்ரோகார்பனுக்கு அடுத்து மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கார்பைடு ஆய்வு
---------------------------
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி பகுதியில் நள்ளிரவில் பசுமையாக இருக்கும் நெல் வயல்களில் வருவாய்த்துறை அதிகாரிகளும், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா அதிகாரிகளும் 12 மணிக்குப் பிறகு கடந்த 2 வாரங்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். என்ன என்று கேட்டதற்கு, டங்ஸ்டன் கார்பைட் என்ற கனிமம் இந்த நெல் வயல்களில் இருப்பதாக ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் கமுக்கமாக தெரிவித்துள்ளனர். அங்குள்ள கிராம மக்களும் இதை அறிந்து தங்களுடைய எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். ஹட்ரோகார்பன், மீத்தேன் என்ற வரிசையில் டங்ஸ்ட்டன் எடுக்க அரிட்டாபட்டி விவசாயிகளை வஞ்சிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இனிமேல் விவசாயமே செய்ய முடியாமல் மக்களை தடுக்கக்கூடிய வகையில் சட்டங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும், தனியார்களையும் கிராமங்களில் ஆதிக்கம் செலுத்த மத்திய அரசு துணை போகிறது.
இதுதான் கிராம ராஜ்ஜியமா?
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02/12/2018
#KSRadhakrishnanpostings
#KSRpostings
#டங்ஸ்டன்_கார்பைட்
#Tungsten_Carbide
No comments:
Post a Comment