Monday, December 10, 2018

பெருந்தலைவர் #காமராஜரோடு

நினைவுகள்...
——————-
இதே நாளில் 1973இல் கிட்டத்தட்ட இதே நேரத்தில் பெருந்தலைவர் #காமராஜரோடு தூத்துக்குடி - திருநெல்வேலி சாலையில் பயணித்த நினைவுகள். அப்போது ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம். மாலைப் பொழுதில் நெல்லை வட்டாரத்தில் மாலை 4 மணிக்கு மேல் மெதுவடை இஞ்சி, சின்னவெங்காயம், மிளகாய், கருவேப்பிலை கலந்து கடலெண்ணெயில் தட்டையாக, கையடக்கமாக சுட்டுத் தருவர். திருநெல்வேலி மண்ணுக்குகேற்றாற் இருந்த மெதுவடையை ரசித்து சாப்பிட்டார். மறுநாள் (டிசம்பர் 11) பாரதியார் பிறந்ததினம். அதையொட்டி எட்டையபுரம் பாரதி மண்டபத்தில் மரியாதையும் செலுத்தினார். ஆண்டுகள் 45 கடந்துவிட்டன. ஆனால், மனதில் நிற்கும் அழியா நிகழ்வுகள். அதே சாலையில் இன்று  பயணம்.....
நினைவுகள் ....

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#பெருந்தலைவர்_காமராஜர்

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...