Saturday, February 17, 2018

ஆழியாறு – பரம்பிக்குளம், காவிரி விவகாரங்கள்……


அவர்களுக்கு வந்தால் மட்டும் தலைவலி, மற்றவர்களுக்கு வந்தால் பரிகாசம்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், கோவை மாவட்டம் ஆழியாறுபரம்பிக்குளம் ஒப்பந்தத்தின்படி பிப்ரவரி 15ஆம் தேதியில் கேரளத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டுமென்றும், ஆனால் நிலவரப்படி 80 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள். ஆனால் பாலக்காடு மாவட்டத்தின் சித்தூர் விவசாயத்திற்கு இந்தநீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த உடன்படிக்கை 30 ஆண்டு காலம் ஆகிவிட்டதால் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையான விடயமாகும்.

ஆனால், இதே கேரள அரசு நெய்யாற்றில், அடவிநயினாறில், செண்பகத்தோப்பில், முல்லைபெரியாறில், சிறுவாணியில், பம்பாற்றில், பாண்டியாறுபுண்ணம்பழா போன்ற பல நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழக நலம்நாடியும் நேர்மையாக நடந்து கொண்டதா என்று இதயச் சுத்தியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.
அம்மாதிரியே காவிரிப் பிரச்சனையில் கர்நாடகம் எப்படி தமிழகத்தை வஞ்சிக்கின்றதோ, மகதாயி பிரச்சனையில் கோவா கர்நாடகத்தை நடத்துகிறது என்று சித்தராமையா அரசு கூப்பாடு போடுகின்றது.

அவர்களுக்கு வந்தால் மட்டும் தலைவலி, மற்றவர்களுக்கு வந்தால் பரிகாசம்.

#பரம்பிக்குளம்_ஆழியாறு_நதிநீர்ப்_பிரச்சனைகள்
#Aliyar_Parambikulam_River_Problems
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

15-02-2018

No comments:

Post a Comment

2023-2024