Thursday, August 22, 2019

#கச்சத்தீவுகுறித்துசிதம்பரம்

—————————————-
தந்தி டிவியில் ப.சிதம்பரத்தின் நேர்காணலை பார்க்க முடிந்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிக்கொண்டு வரும்போது நெறியாளர் அசோகா, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியபோது தமிழக மக்களின் கருத்தை கேட்டீர்களா என்று ஒரு வினாவை வைக்கிறார். அறிவுஜீவி, நுண்மான் நுழைபுலம், அனைத்து பிரச்சனைகளிலும் புரிதல் உள்ள கொண்ட சிதம்பரம்,என்ன சொல்கிறார் என்று பார்த்தால், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமில்லை என்ற ஒரு வார்த்தையை சொன்னபோது பகீர் என்றது. மேலும் ஏதோ இலங்கைக்கு சொந்தமான ஒரு தீவை திருப்பி கொடுத்ததை போல நியாயப்படுத்தும் வகையில், இதற்கு சரியான பதில் சொல்லமுடியாமல் தவிர்த்த அவரின் கோப நிலையும் முகத்தில் தெரிந்தது. அசோகாவிடம் காஷ்மீரைப் பற்றி பேசும்போது, கச்சத்தீவை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டார். இது ஏற்புடையதல்ல.

கச்சத்தீவு இராமநாதபுர மன்னருக்கு சொந்தமான தீவாகும் என்றார் நெறியாளர் அசோகா. அதையும் காதில் வாங்காமல் சரியான பதிலை சிதம்பரம்
சொல்லாமல் இரண்டுபிரச்னைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இது போல் கேட்பது திசை திருப்பும் வேலை என தவிர்த்தார்.

இராமநாதபுரம சமஸ்தானத்திலிருந்து 
குத்தகைக்கு விடும் ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தானது. இராமேஸ்வரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இதுகுறித்தும் ஆவணங்கள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து விரிவான நூலே எழுதியுள்ளேள். இதுகுறித்து நான் தினமணியில் எழுதிய கட்டுரையும்......

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-08-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...