• The Instrument of Accession is a legal document executed by Maharaja Hari Singh, ruler of the princely state of Jammu and Kashmir, on 26 October 1947.
• The Presidential order, to introduce Temporary Article 370 as per The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1950, came into force on 26 January 1950.
• The Constituent Assembly of Jammu and Kashmir was elected in 1951 and convened on 31 October 1951. The amendment represented the abolition of the monarchy of J&K.
• The Presidential order for inserting clause of 'Article 35A', officially The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1954 came into force on 14 May 1954.
*Shyama Prasad Mukherjee opposed this moves.*
• On the 11th September 1964, the “Government came in for vehement criticism for holding talks with Sheikh Abdullah who, according to the sponsor of the bill, Mr. Prakash Vir Shastri (Ind.), was preaching rebellion and creating doubts about Kashmir’s accession to India.
• “Strongly advocating the abrogation of the Article (370), Mr. Sham Lal Saraf, a member from Kashmir, said that talk of secession was a major offence under the law passed by Parliament. Any person violating this law should be dealt with severely.
• “Members belonging to all parties said that Kashmir’s accession was final and irrevocable and anyone challenging it should be considered the enemy of India.
• “They urged the Government to either accept the Bill or itself bring forward an amending Bill soon to do away with the Article which had served as a ‘big wall’ between Kashmir and the rest of the country.
• “Dr. Ram Manohar Lohia (Ind.) warned that any attempt to hand over Kashmir to Pakistan would result in bloodshed and revolution. …
• “In an indirect criticism of Mr. Jayaprakash Narayan, he said that attempts to solve the land and other problems by applying the Sarvodaya concept had failed. The same concept was now sought to be applied to Kashmir and he had no doubt the attempts would fail there also. …
• “Mr. K Hanumanthaiya (C) said that Sheikh Abdullah ‘must be told that the repeal of the Article flowed from the accession itself which was complete and which he had accepted in 1947.”
*ஜம்மு காஷ்மீர் பிரச்சனை சில குறிப்புகள்...அ முதல் ஃவரை*
————————————————
.அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846) (Treaty of Amritsar) : ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த முதலாவது போரின் இறுதியில் வெற்றி அடைந்த கிழக்கிந்திய கம்பெனி காஷ்மீரை டோக்ரா மன்னன் குலாப் சிங்கிற்கு பரிசாக அளித்தது. ஆனால் அன்றுள்ள சூழலில் தன்னால் நிர்வகிக்க முடியாது என காஷ்மீரின் அதிகாரத்தை 75 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் கொடுத்தான். அதாவது கிட்டத்தட்ட ஒரு குத்தகை என்பதுபோலத்தான் காஷ்மிர் ஆங்கிலேயர் வசமானது. காஷ்மீரைப் பொருத்த மட்டில் ஆங்கிலேயர் ஆட்சியாளர்களாக இல்லை. “பாதுகாவலர்” (protectorate) என்றே அழைக்கப்பட்டனர்.அதன்வரலாறு;
ஜம்முகாஷ்மீர் இராசபுத்திர குல டோக்ரா வம்சத்தவர்களால் 1846 முதல் 1952 முடிய ஆளப்பட்டது. முதலாம் ஆங்கிலேய சீக்கியர்போருக்குப் பின்னர் அமிர்தசரஸ் ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீர் இராச்சியம் 1846இல் நிறுவப்பட்டது.
பின்னர் இரண்டாம் ஆங்கிலேய சீக்கியப் போரில் தோல்வியுற்ற சீக்கியப் பேரரசின் காஷ்மீர், லடாக், ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகள், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால், ஜம்முவின் டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங்கிடம் (1792–1857) 7,50,000 நானக்சாஹீ ரூபாய்க்கு மாற்றித் தரப்பட்டது.இந்தியப் பிரிவினையின் போது 1947இல் ஜம்மு காஷ்மீர் மன்னராயிருந்த மன்னர் மகாராஜா ஹரிசிங், இந்தியாஅல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் சேராது, ஜம்மு காஷ்மீரை தனித்து தன்னாட்சியுடன் நிர்வகிக்க முடிவு செய்தார்.
ஜம்மு காஷ்மீர் இராஜ்ஜியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன்,பாகிஸ்தான் ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரிசிங்,ஜம்முகாஷ்மீரை இந்தியாவுடன்இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது. பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.
• 1947 இந்தியா விடுதலை மற்றும் பாக் பிரிவினை போது காஷ்மீரில் சீக்கிய அரசர் ஹரிசிங் ஆட்சி செய்தார்.
காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் தற்சார்புடன் இருக்கவே முடிவு செய்தார். அவர் காஷ்மீரை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். அவர், பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு தேசங்களையும் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார் (நடவடிக்கைகளை நிலுவையில் வைக்கும்படி). அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதும், இந்தியா மறுத்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்த எந்தத் தீர்வையும் எட்டுவதற்கு முன்னரே, பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது.
• அரசரின் கடுமையான வரிவிதிப்பு காரணமாக பூஞ்ச் வட்டாரத்தில் கிளர்ச்சி உண்டாகிறது.
• இந்திய விடுதலையின் போது, சமஸ்தானங்கள் தமது மக்களின் விருப்பப்படி இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வதற்கு ஆங்கிலேய அரசு அறிவுறுத்தியது.
• அப்போது இஸ்லாமியர் 77% இருந்ததால், அவரசப்படமால் தகுந்த முடிவெடுப்பதை தள்ளி வைக்க நிலை நிறுத்த ஒப்பந்த்தை(Standstill Agreement) இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஹரிசிங் வற்புறுத்தனார்.
• இதனால் வணிகம், போக்குவரத்து உட்பட அனைத்து சேவைகளும் தடைபடாமல் தொடர்ந்தது.
• ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட, இந்தியா நிறுத்தி வைத்திருந்தது.
• ஆகஸ்டில் பாகிஸ்தானுடன் இணையக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது ஹரிசிங் படை ஒடுக்கியது .
• அக்டோபர் 24-இல் பூஞ்ச் பகுதியை ஆசாத் (சுதந்திர) காஷ்மீர் அரசு என்று அங்கிருந்த போராளிகள் அறிவிக்கின்றனர்.
• சுமார் 5000 மேலான பதான் வீரர்கள் வடக்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி விரைந்தனர். பாகிஸ்தான் வீரர்களும் தொடர்ந்தனர்.
• ஹரிசிங் இந்தியாவிடம் உதவி கேட்க, இந்தியாவுடன் இணைந்துகொள்ள இந்தியா கேட்க, இணைப்பு ஒப்பந்தில் கையெழுத்திடுகிறார்.
• உடனே அடுத்த நாள் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் ஏற்றுகொள்கிறார்.
ஹரி சிங் ராஜா கடிதம்*
• அக்டோபர் 6, 1947-இல் நெருக்கடி நிலை காரணமாக இந்தியாவிடம் உதவி கேட்கிறார்.
• இரு நாடுகளுக்கும் பொதுவான அமைவிடம், எல்லைகள் பிரித்தல் , இணைவது குறித்து, நிலைநிறுத்த ஒப்பந்தம், பாகிஸ்தான் உணவு தடை விதித்தது போன்றவற்றை குறிப்பிடுகிறார்.
• பூஞ்ச், சியால்கோட், ஹசாரா மாவட்டங்களில் எழுச்சி, நவீன ஆயுதங்களுடன் பழங்குடியினர் அனுப்பி வைக்கப்படுவது, பாகிஸ்தான் வீர்கள் பின்தொடர்வது குறிப்பிடுகிறார் .
• இணைப்புப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கடிதம் கொண்டுவரும் வி.பி.மேனனுக்கு தகவல்கள் தெரியுமென்றும், உதவி கோருகிறார்.
• வி.பி. மேனன் மூலமாக கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு மவுண்ட்பேட்டன் பதிலளிக்கிறார்.
• இணைப்பு குறித்த பிரச்சனை எழுந்தால், அமைதி திரும்பியவுடன் மக்களின் விருப்படி முடிவு செய்யப்படும் என்று உறுதியளிக்கிறார்.
• சேக் அப்துல்லா தலைமையில் இடைக்கால ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார்.
• சேக் அப்துல்லாவை இடைக்கால பிரதமராக அரசமைப்பதற்கும் இணங்குறார்.
——
*ஹரிசிங் அனுப்பிய இணைப்புப் பத்திரம்*
• 1935 இந்திய அரசு சட்டப்படி, காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறது.
• 1947 இந்திய விடுதலை சட்டத்தின்படி, ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் 1935 இந்திய அரசு சட்டத்தின்படி, இந்திய அரசுக்குட்பட்ட பகுதியுடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இணைத்துக் கொள்கிறேன்.
• அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவற்றின் படி அரசு சட்டமியற்றிக் கொள்வதற்கு அனுமதிக்கிறேன்.
• அதன்படி, பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகியவற்றில் இந்திய அரசு சட்டமியற்றிக் கொள்ளலாம்.
• இவை தவிர மற்றவற்றிற்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை.
——-
*1947 போர் மற்றும் ஐ.நா. தீர்மானம்*
• அக்டோபர் 22, 1947 முதல் 1948 டிசம்பர் 31 வரை நீடித்தது.
• பாகிஸ்தான் லஸ்கர் பழங்குடிகளை அனுப்பியது.
• பல்லாயிரக்கணக்கான பஸ்தூன் வீர்கள் நுழைந்தனர்.
• பாகிஸ்தான் மேற்கு மற்றும் வடமேற்கு காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்தது.
• இந்தியா ஜம்மு, பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகளில் இராணுவத்தை நிறுத்தியது.
• போரின் இறுதியில் இந்தியா பகுதிகளை இழந்துகொண்டு வர, மவுண்ட்பேட்டன் நெருக்கடி கொடுக்க, நேரு ஐ.நா. சபைக்கு பிரச்னையை கொண்டு செல்கிறார்.
*1948, ஜனவரி 1-இல் போர் நிறுத்தம்*
• ஜனவரி 20-இல் ஐ.நா. தீர்மானம் 39-ன்படி பிரச்னைக்கு தீர்வளிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கான ஆணையம் (3 Member UNCIP)
• ஏப்ரல் 21 தீர்மானம் 47-ன்படி, அமைதியை நிலைநாட்டவும், சார்பற்ற பொதுவாக்கெடுப்பு நடத்த முன்னேற்பாடு செய்யவும் ஆணையம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
• ஜூன் 3, தீர்மானம் 51-இல் ஆணையம் பகுதிக்கு சென்று விரைந்து செயல்பட கூறியது.
• 1949 ஜூலையில் போர்நிறுத்த எல்லை UNMOGIP கண்காணிப்பில் கராச்சி ஒப்பந்தம்.
• மார்ச் 1950 தீர்மானம் 80 – போர்நிறுத்தம் தொடர, படைகுறைப்பு & போதுவாக்கெடுப்பு தலைமை.
• மார்ச் 30. 1951 தீர்மானம் 91 – UNCIP கலைக்கப்பட UNMOGIP போர்நிறுத்தை கண்காணித்தது.
———
*பிரிவு 370-ன் தோற்றம்*
• 1949-ல் பிரதமர் நேரு அம்பேத்கருடன் கலந்தாலோசித்து சட்ட வரைவை உருவாக்க கூறிகிறார்.
• 370வது பிரிவிற்கான வரைவை அம்பேத்கர் தயாரிக்க மறுத்துவிடுகிறார்.
• என்.கோபாலசாமி ஐயங்கார் வரைவை தயாரிக்கிறார்.
‘’இவர் தஞ்சாவூர்காரர்
1882ல் பிறந்து தஞ்சை சென்னை எனபடித்தவர், பச்சையப்பாவில் பட்டம் பெற்றார் அதன் பின் சட்டம் படித்தார், பச்சையப்பாவில் பேராசியராக பணியாற்றினார்
பின்பு அரசுபணி குறிப்பாக குடியுரிமை பணிகளில் கல்கத்தா டெல்லி என சுற்றியவருக்கு காஷ்மீர் மன்னனின் காரியதரிசியாகும் வாய்ப்பு கிடைத்தது
மன்னர் ஹரிசிங் இவரை காஷ்மீர் பிரதமராக நியமித்திருந்தார் கிட்டதட்ட திவான் பதவி
காஷ்மீரை 1937 முதல் 1947 வரை காஷ்மீரினை மன்னரின் பிரதிநிதியாக இருந்தார்.
1947ல் இந்திய தலையீடு வந்தபொழுது கோபாலசாமி அய்யங்காரே முழு பொறுப்பையும் செய்தார், பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கின்றது என ஐநாவில்
வாதங்களை வைத்தார்.
பாகிஸ்தான் அது உள்நாட்டு மக்களின் புரட்சி என சொன்னபொழுது அவர்கள் கைகளில் பாகிஸ்தானிய ஆயுதங்கள் வந்தது எப்படிஎன கோபாலசாமி கேட்டபொழுது பாகிஸ்தானிய பிரதிநிதியிடம் பதில் இல்லை
காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் அந்த 370 சட்டபிரிவினை கவனமாக உருவாக்கினார்.முதலில் அது பலத்த சர்ச்சையானது, ஒரு கட்டத்தில் முடியாத விஷயமுமானது
ஆனால் தன் சாதுர்யத்தால் அதனை சாதித்தார் கோபலசாமி அய்யங்கார், இந்திய காஷ்மீரிய இணைப்பு வரலாற்றில் மறக்க முடியாத நபர் அவர்
காஷ்மீரை காக்கவே இந்தியா வந்ததுஎன்பதும் இந்தியாவால் மட்டுமே காஷ்மீரை காத்து முன்னேற்ற முடியும் என்பதும் அவரின் நம்பிக்கை
சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் அவர் காலம் வரை அவரை கலந்து ஆலோசித்தே செய்யபட்டதுஇந்தியாவுடன் இணைந்துவிட்டபின் அது இந்தியாவின் ஒரு பகுதியே என்பதில் உறுதியாக இருந்தார் கோபாலசாமி
அவரின் மகனே பத்திரிகையாளரும் ஐ.நா பிரதிநிதியுமான டில்லி ஜேஎன் பல்கலைகழக துணைவேந்தர் ஜி. பார்த்தசாரதி.இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திரா ஆட்சி காலத்தில் பங்கு ஆற்றியவர். வேலு பிள்ளை பிரபாகரனுடன் நான் சில சமயங்களில் சந்தித்துண்டு. நல்ல அறிமுகவும் உண்டு. டில்லி சென்றால் இவரை 1980களின் துவக்கத்தில் சந்திப்பது வடிக்கை.
காஷ்மீர் விவகாரம் பரபரப்பாக விவாதிக்கபடும் நிலையில் அந்த மாநிலத்துக்கே பிரதமராக இருந்த அந்த தமிழனை நினைக்காமல் இருக்க முடியாது
• இணைப்புப் பத்திரத்தில் உள்ளவை அப்படியே சட்ட வரைவாக மாற்றப்படுகிறது.
• அக்டோபர் மாதத்தில் இந்திய அரசியலமைப்பின் பிரிவு XXI கீழ் தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.
• மற்ற மாநிலங்களுக்கான் சட்டங்கள் எதுவும் காஷ்மீருக்கு பொருந்தாது.
——-
*370வது சட்டப்பிரிவின் முக்கிய அம்சங்கள் *
• இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக நடுவண் அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் இசைவு இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
• ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்க்ள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
• இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
• இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
• இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
*1952 டெல்லி ஒப்பந்தம்*
• 1947 தொடக்கத்தில் இணைப்பை வரவேற்ற அப்துல்லா 1952இல் சுயநிர்ணய உரிமையை கோருகிறார்.
• 1952 ஜூலையில் டெல்லி ஒப்பந்தம் எனப்படும் நேரு-அப்துல்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
• இந்தியா-காஷ்மீருக்கான தொடர்பு, அதிகார வரம்பை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தது.
• இணைப்புப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவற்றை தவிர மற்றவற்றிற்கு காஷ்மீர் அரசு சட்டம் இயற்றிக்கொள்வதை இந்தியா ஏற்கிறது.
• மக்களுக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் வரையறுக்கப்படுகிறது.
• இந்திய குடியரசுத்தலைவர் தொடர்பான பிரிவிகள் 52 முதல் 62 வரை காஷ்மீருக்கு நீட்டிக்கப்படுகிறது.
• காஷ்மீரின் கொடியை ஏற்பதுவும், இந்தியக் கொடியின் பயன்பாடும் நிர்ணயிக்கப்படுகிறது.
• Sadr-i-Riyasat எனப்படும் ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவரை சட்டசபை பரிந்துரைக்க இந்திய குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
• ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவர் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
• மக்களுக்கான இந்தியாவின் அடிப்படை உரிமைகள் காஷ்மீருக்கு பொருந்தாது; காஷ்மீர் தனியாக சட்டமியற்றிக்கொள்ள வேண்டும்.
• முறையீடுகளை மட்டும் விசாரிக்கும் அளவில் உச்சநீதிமன்ற வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது.
• பிரிவு 352ன் படி நெருக்கடி காலத்தில், காஷ்மீர் அரசு வேண்டினாலோ அல்லது சம்மதத்துடனோ குடியரசு தலைவர் நெருக்கடி நிலை ஆணை பிறப்பிக்க முடியும்.
——-
*காஷ்மீருக்கான சிறப்புகள்*
• வேறு மாநிலங்களுக்கு இல்லாத அரசியலமைப்பு உள்ளது
• காஷ்மீர் அரசியலமைப்பு சபை அரசியலமைப்புச் சட்டத்தை உருவாகியது.
• காஷ்மீருக்கென தனித்த இறையான்மை, கொடி மற்றும் சின்னம் அங்கீகரிக்கப்பட்டன.
———
*அவசரகால சட்டங்கள்*
• பிரிவு 360-ன் கீழ் இந்திய ஒன்றியம் பொருளாதார அவரசநிலையை அறிவிக்க முடியாது.
• போர்க்காலத்தில் மட்டும் அவரச நிலையை அறிவிக்க முடியும்.
• நெருக்கடி காலத்தில், காஷ்மீர் அரசு வேண்டினால் அல்லது காஷ்மீர் அரசின் சம்மதத்துடன் குடியரசு தலைவர் நெருக்கடி நிலை ஆணை பிறப்பிக்க முடியும்.
• 1964 டிசம்பரில் சட்டப்பிரிவுகள் 356 மற்றும் 357 காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டது. • 1964-ல் உள்துறை அமைச்சர் நந்தா, 370வது பிரிவு இந்திய அரசின் அதிகாரங்களை அதிகப்படுத்த ஒரு வழியாக பயன்படும் என்றார்.
• ஆளுநர் ஜக்மோகன் சம்மதத்தில் 1986ல்பிரிவு 249 நீட்டிக்கப்பட்டது.
• நவம்பர் 2010ல் பிரச்சனைக்குரிய பகுதிகள் பட்டியலிலிருந்து ஜம்மு-காஷ்மீரை நீக்கியது.
• 2015 அக்டோபரில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் பிரிவு 370 நிரந்தரமானது என்று கூறியது.
KSRadhakrishnan_Postings
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
10-08-2019
No comments:
Post a Comment