Tuesday, October 1, 2019

ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளும்

ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்புகளும்
----------------------------------
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Puducherry Institute of Linguistics and Culture) அமைதியாக அரிய பணிகளை செய்து வருகிறது. ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, புதுவை – தமிழக வரலாற்றை சொல்கின்ற ஆவணமாகும். இது 12 தொகுதிகளாக மலிவு விலையில் வெளியிடப்பட்டது. அதேபோல, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பு இரண்டு தொகுதிகளாக புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டின் துவக்கம், வரலாறுகள் இந்த நாட்குறிப்பில் உள்ளன. மொழிநடை, அந்த காலத்தின் பேச்சுவழக்கில் உள்ளது. இதை இன்றைய நிலைக்கேற்றவாறு திருத்தி, செம்பதிப்பாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எஸ். ஜெயசீல ஸ்டீபன் ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பை அற்புதமாக தொகுத்துள்ளார். மொழிநடை மட்டும் சற்று இன்னும் எளிதாக்கப்பட வேண்டும்.  இந்த இரண்டு டைரிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்புகள் இதன் இயக்குநராக இருந்த பக்தவச்சல பாரதியும், இப்போதைய இயக்குநர் சம்பத் அவர்களும் எனக்கு வழங்கினர்.

கி.பி. 1760 – 1762 வரையிலான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பின் சுவடுகளில் பழைய செய்திகள் கிடைக்கின்றன. சென்னை, பிரெஞ்சு தலைநகர் பாரீஸ், புதுவை, தரங்கம்பாடி, திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், ஐதராபாத், மைசூர், திருநெல்வேலி போன்ற  இடங்களில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதியுள்ளார். வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை, ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை நாட்குறிப்பையும் சற்று கவனத்தோடு படித்தால் பல அறியாத செய்திகள் கிடைக்கும். அத்தோடு இதுகுறித்தான ஆய்வுக் குறிப்புகளும் அடங்கியுள்ளன. 
வரலாற்று சிந்தனையாளர்களுக்கு இதுவொரு துணையாகும்.
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01/10/2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...