Sunday, October 20, 2019

ஈழத்தமிழர் பிரச்சனை – இன்றைய புரிதலுக்கு…

ஈழத்தமிழர் பிரச்சனை – இன்றைய புரிதலுக்கு… -----------------------
கடந்த 1980லிருந்து 1990வரை ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோடும், அவருடைய சகாக்கள் பேபி சுப்பிரமணியம், திலகர் போன்றோரோடு நட்பு பாராட்டி ஈழத் தமிழருக்காக கடமையாற்றியவர்கள் சந்திப்பு நடக்க வேண்டும்.
கடந்த 1987 வரை பிரபாகரன் தமிழகத்தில் இருந்தார். பாண்டி பஜார் சம்பவம், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இனஅழிப்பு (Genocide) நடக்கிறது என்று தமிழகத்தில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியளிக்க உதவி, அந்த காலக்கட்டத்தில் எங்களைப் போன்றோர்கள் எல்லாம் நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைத்தொடர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள தானிப்பாறை, இறுதியாக திண்டுக்கல் அண்ணன் அழகிரிசாமியுடைய சிறுமலை எஸ்டேட் பயிற்சிக் களமாக அமைந்தது, சேலம், தருமபுரி மாவட்டத்தில் அரசு அதிகாரிகளோடு முன்னாள் இராணுவ வீரர்களை பயிற்சிக்காக தேடி அலைந்தது, திம்பு பேச்சுவார்த்தை, இந்திராவின் தூதராக ஜிபி என்ற கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் ஏ.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோரின் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை, ரமேஷ் பண்டாரி, ஜெ.என்.தீட்சித் போன்றோரின் எதிர்வினைகள், இந்திய – இலங்கை ஒப்பந்தம் என பல நிகழ்வுகளை எல்லாம் இன்றைக்கு பதிவு செய்தால் நல்லது. எல்.டி.டி.ஈ (LTTE)க்கு முன்பு டி.என்.டி (TNT – Tamil National Tigers) என்று அழைக்கப்பட்டதெல்லாம் வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை.
இதுபோல, பல நிகழ்வுகள், நடந்த உண்மைகள் வெளிக்கொணர வேண்டியது அவசியமான பணிகளாகும். எனவே இந்த விடயத்தில் அக்கறைப்பட்டோர், ஆர்வமுள்ளோர், விவரமறிந்தவர்கள் முன்னெடுக்க வேண்டும். ராஜீவ் படுகொலைக்குப் பின் பல வேதனைகளைப் பார்க்க முடிந்தது. ராஜீவ் படுகொலையும் நடக்கக் கூடாத துன்பியல் சம்பவம் மட்டுமல்ல, அந்த குற்றத்தில் யார் சம்மந்தப்பட்டிருந்தாலும் முறைப்படி சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ராஜீவ் படுகொலையில் சரியான புலன் விசாரணை நடக்கவில்லை.
நியாயமான விடயங்களை தீர்ப்பதில் அக்கறை கொள்வது அனைவரின் கடமையாகும். இன்றைக்கு இதுகுறித்தான தெளிவுகளும், புரிதல்களும் ஏற்பட வேண்டிய அவசியமும் உள்ளது. காலச் சக்கரங்கள் ஓடிவிட்டன. கடந்த 1979லிருந்து இன்றைக்கு 40 ஆண்டுகள் ஆகிறது. -கே.எஸ். இராதாகிருஷ்ணன். 20-10-2019. #ஈழத்தமிழர்_பிரச்சனை #KSRPostings #KSRadhakrishnan_Postings

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...