#எழுவர்_விடுதலை #கச்சத்தீவு
———————————————————-
எழுவர் விடுதலை குறித்தும், கடந்த 2007ல் நான் எழுதி வெளியிட்ட கச்சத்தீவு புத்தகத்தையும், பாஜக அகில இந்திய தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கச்சத் தீவினை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்ற 1974-75 காலக்கட்டங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விபரங்களையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதாவது 14.01.2021 “இந்தியாவின் பாதுகாப்பும் ஈழத்தமிழர்களின் சிக்கல்களும்” என்ற தலைப்பில் தினமணியில் வெளிவந்த கட்டுரையின் ஆங்கில மொழியாக்கத்தையும், கடந்த 2 நாட்களாக முகநூலில் கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தைக் குறித்தான இந்திய இலங்கை பிரச்சினைகள் குறித்தும் எழுதிய பதிவுகளை டெல்லி முக்கிய பிரதிநிதிகள் வாங்கிச் சென்றுள்ளார்கள். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் கடமையினை ஆற்றிக் கொண்டே இருப்போம் என்ற திருப்தி இன்றைக்கு ஏற்பட்டது.

No comments:
Post a Comment