Sunday, October 30, 2022

முதன்முதலாக தமிழ் இலக்கியத்துக்கு ஞானபீட விருது பெற்ற அகிலனுக்கு நூற்றாண்டு விழா.கிரா-100.




தமிழகத்தைப் பொறுத்தவரை அகிலன், த.ஜெயகாந்தன் இருவர் மட்டுமே ஞானபீட விருது பெற்ற படைப்பாளிகள். நானறிந்தவரை பொள்ளாச்சி அருட்செல்வர் ந.மகாலிங்கம், அகிலன், காருக்குறிச்சி அருணாசலம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், வழக்கறிஞர் என்.டிவானமாமலை, வழக்கறிஞர் பாளை சண்முகம் என சில முக்கிய புள்ளிகளுக்கு இந்த ஆண்டு நூற்றாண்டு .




 மதுரையில், கி.ரா.வுக்கு 60 ஆம் ஆண்டு மணிவிழா,  சென்னையில் கி.ரா.70, கி.ரா. 75, ஆண்டு விழாக்கள், 80, 85, தில்லியில் தினமணி- டில்லி தமிழ் சங்கம் 90 ஆம் ஆண்டு விழாக்கள், புதுவையில் கி.ரா.வின் 95 ஆம் ஆண்டு விழா ஆகியவற்றை நான்  முன்னின்று நடத்தியதுண்டு. 95 ஆம் ஆண்டு விழாவுக்கு ( இதன் முதல் நாள் என் தாய் 98 வயதில் எனது கிராமத்தில் காலமானர். செய்யவேண்டிய காரியங்களை  கிரா 95 விழா  அன்று காலை வரை முடித்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் வந்து விழாவுக்கு புதுச்சேரி சென்றேன்)      அன்று திமுக செயல் தலைவர்,இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துச் செய்தி கேட்டிருந்தேன். அவருடைய உதவியாளர் தினேஷ் அவர்களிடம் அது குறித்து நினைவுபடுத்தினேன். ஆனால் வரவில்லை. ஏனோ தெரியவில்லை.  அப்போது துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யநாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் எல்லாம் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்கள். அன்றைக்கு யாரும் இவ்வளவு மும்முரமாக கி.ரா.வை கொண்டாடவில்லை. இன்றைக்கு அரசு சார்பில் கி.ரா. நூற்றாண்டு விழாக்கள் நடக்க இருக்கின்றன. மகிழ்ச்சி. அதற்க்கு அழைப்பு கூட இல்லை. அப்போது நான் தலைமை கழக நிர்வாகி வேறு…நான் கொண்டாடிய கி.ரா.மீது கடந்த 2021 முதல் திடீர் பாசம். இதுவும் மகிழ்ச்சியே . ஒருவர் 2016 வரை கிராவை புறக்கனித்தவர் கிராவை அப்பா என உறவு கொண்டவதும் மகிழ்ச்சிதான்.

வரும் 3-11-2022 அன்று காலை அகிலன் நூற்றாண்டு விழா கருத்தரங்கம், சென்னை லயோலா கல்லூரியில் நடக்கவிருக்கிறது. அதில் நான் பங்கேற்கிறேன். எனக்குத் தெரிந்தவரை,  அகிலன் நூற்றாண்டு விழாவை அவர் பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் அண்ணன் புலவர் மதிவாணன் நடத்தியதாக செய்தி வந்துள்ளது. அகிலன் என்ற ஆளுமையை பெரிய அளவுக்கு யாரும் கண்டு கொள்ளவில்லை.

#ksrpost
30-10-2022.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...