Monday, October 17, 2022

மதநல்லிணக்கம்

#*

———————————

*இந்தப் படம் நேற்று ஸ்ரீநகரில் நண்பர் டாக்டர் சந்தீப்  எடுத்து எனக்கு அனுப்பியது.  சந்தீப் பண்டிட் வகுப்பைச் சார்ந்தவர். பிரிவு 370 யை நீக்கிய பின் ஸ்ரீநகரில் இஸ்லாத்தைச் சார்ந்தவர்,வரும் தீபாவளி திருநாளில் பயன்படுத்தக் கூடிய விளக்குகளைச் செய்யும் காட்சி. இதுதான் மத நல்லிணக்கம்*. 







• *திருக்கோயில்களில் ஆறு கால பூஜை சிறப்பாக நடக்கட்டும்*.

• *தேவலாயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்*.

• *மசூதிகளில் பாங்கோசையோடு ஐந்து கால தொழுகைகள்நடக்கட்டும்*.

• *குருத்துவாராக்கலில் கிரந்தங்கள் ஒலிக்கட்டும்*.

• *இறை*
*மறுப்பாளர்கள்* 
*தங்கள் கருத்துக்களை* *சதுக்கங்களில்* *முழங்கட்டும்*.
  
*இதுதான் உண்மையான மத நல்லிணக்கம். மதசார்பின்மை என்று தவறாக சொல்கிறோம் . அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது முரண் ஆனது. இங்கு பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. அந்த அடிப்படையில் மதநல்லிணக்கம் என்றுதான் குறிப்பிட வேண்டும்*.

#ksrpost
17-10-2022.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...