*கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி,நண்பர் பா ஜெயபிரகாசம் அஞ்சலி* :
———————————
கரிசல் காட்டு மூத்த எழுத்தாளர் நண்பர் பா ஜெயபிரகாசம் alias சூரிய தீபன் நம்மை விட்டு பிரிந்தார். தமிழக அரசின் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். கிரா மூலம் அறிமுகம். கதைசொல்லி ஆசிரியர் குழுவில் இருந்தார். கடந்த 35 ஆண்டுகளாக நட்பு. ஓய்வுக்கு பின் புதுவை மற்றும் அரும்பாக்கத்தில் வசித்தார்
பா. செயப்பிரகாசம், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றியவர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த 10 மாணவரகளில் ஒருவர்.
மண்ணையும் மக்களையும் எழுத்தில் வடித்தவர். ஒரு ஜெருசலேம், காடு, இரவுகள் உடையும் முதலான சிறுகதைத் தொகுதிகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் படைத்தவர் பா. ஜெயப்பிரகாசம். அவரது ஒரு சிறுகதையின் தலைப்பு 'தாலியில் பூச்சூடியவர்கள்'. தெற்கத்தி மக்களின் பண்பாடு அது. ஒரு அழியாத ஓவியக் காட்சி அது. ஒரு காலகட்டத்தின் பதிவு அது.
ஒரு கதையில் கிழங்கு பறித்துச் சுட்டுத் தின்ன வயல்காட்டு மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பார்கள் சிறுவர்கள். ஓரிடத்தைத் தோண்டும்போது 'அங்கு மட்டும் தோண்டாதே' என்று ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனோடு சண்டை போடுவான். அது அவன் அம்மாவை புதைத்த இடம்.
இப்படிக் கரிசல் மண்ணின் கண்ணீர் ஓவியங்கள் பலவற்றை வரைந்தவர் ஜெயப்பிரகாசம். நாட்டுப்புறத்தின் எளிய மனிதர்கள் இவர் உலகின் நாயகர்கள்.
கடந்த 1 வருடமாக விளாத்திக்குளத்தில் இருந்தார். இதயக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த பா. செயபிரகாசம், தற்போது மறைந்த செய்தி மனதை வாட்டுகிறது. ஆழ்ந்த இரங்கல்.
#ksrpost
23-10-2022.
No comments:
Post a Comment