Monday, October 24, 2022

*பொன்னியின் செல்வன்- ஈழம்*

*பொன்னியின் செல்வன்- ஈழம்* 
————————————
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்''நீங்கள் இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு என் தம்பி அருண்மொழியை பார்த்து, அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும்" என குந்தவை வந்தியத்தேவனிடம் கூறும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வனில் கதைக்களங்களைப் பொறுத்தவரையில் அனுராதபுரம், யாழ்ப்பாணத்தில் தொண்டைமானாறு, முல்லைத்தீவு, நயினாதீவு ஆகிய களங்கள் கதைகளோடு இணைந்து வருவது நினைவில் உள்ளது. அருண்மொழிவர்மன் தொடக்கம் பல பாத்திரங்கள் ஈழம் களத்தில் உள்ளனர். 







இதில் 'இலங்கை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு, இலங்கை தமிழர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்  'ஈழ நாடு' என்ற பெயரே இடம்பெற்றுள்ளதாகவும், இலங்கை என்ற பெயரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.'ஈழம்' என்பது இலங்கையின் பூர்வீக பெயரல்ல எனில், "ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி." சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்ட 'ஈழம்' எது?
"அது மாத்திரமல்லாமல் ஈழத்து பூதந்தேவனார் யார்? ஈழ நாட்டிலிருந்து பாண்டிய நாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் விளங்கியவர். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்று புலவரானார் என்றும் கூறுவார்கள். ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் வரையப்பட்டுள்ளது. அப்படியானால் 'ஈழம்' எனும் பெயர் வரலாற்று ரீதியாக எவ்வளவு பழைமையானது" என கேள்வி
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் 'ஈழம்' என்னும் சொல் தவிர்க்கப்பட்டு 'இலங்கை'  சொல்வது பிழையானது என பலரின் 
கருத்து.

சிங்கள இனம் காலத்தால் மிகவும் பிற்பட்டது... தமிழ் பேசும் மக்களில் பௌத்தத்தை ஏற்றவர்களையும் இதர சிறிய சிறிய பௌத்த இன குழுக்களையும் ஒன்று திரட்டி செயற்கையாக உருவாக்கப்பட்டது... 

சோழர் காலத்தில் சைவ தமிழர்களும் - தமிழர்களாக இருந்து பௌத்தர்களாக மாறியவருமே இருந்தனர். சிங்கள இனம் அப்போது இல்லவே இல்லை.

வரலாறுரீதியாக தமிழ்நாடு -ஈழம் தொடர்பில் இருந்ததை மறைக்க கூடாது. எங்களை போன்றோர் ஈழம் என சொன்னால் பழித்துப்பேசுவது நல்லதல்ல.

#ksrpost
24-10-2022.

No comments:

Post a Comment

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...