Thursday, October 20, 2022

இவர்கள் "உதட்டளவில் பேசுகிறார்கள். மனமறிந்துபொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்சொன்னதை அடுத்த கணத்தில் மறந்துவிடுகிறார்கள்.




எதிரில் இருப்பவன் பிரக்ஞையின்றி தங்களைப்பற்றியே பேசிக்கொண்டி
ருக்கிறார்கள். வயிறுகாலியானாலும் வீடு நிறைய சாமான்களை வாங்கி வைக்கிறார்கள். உடமை கருதிச் செத்துக் கொண்டிருக்கும் ஒருவன்
முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்
டேன்" என்கிறான் என்று பொறுமை
இழந்து நிற்கிறார்கள். எல்லாவற்றிலும்
அதிசயம் என்னவென்றால் இவர்கள்
தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

இவர்களுடன் தான் உறவுகளை
வைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
நாம் வாழும் உலகில் தான் இவர்களும்
வாழ்கிறார்கள்."

- *நகுலன்*

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...