Saturday, October 22, 2022

குறையொன்றுமில்லை #நிறையானது #மகிழ்ச்சி. #நன்றி!நன்றி.!!

#குறையொன்றுமில்லை 
#நிறையானது 
#மகிழ்ச்சி.
#நன்றி!நன்றி.!!

எனது 52 ஆண்டு காலப் அரசியல்- பொதுவாழ்க்கைக்கான உண்மையான பயனை கடந்த இரண்டு நாள்களாகத்தான் என்னால் உணர முடிகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து எத்தனை செல்லிடப் பேசி அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், விசாரிப்புகள்! என் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று யோசிக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. 
 
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் நலனுக்காக உழைத்தால், அதற்கான சமூக அங்கீகாரம், மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். என் மீது அன்பு கொண்ட ஆயிரக்கணக்கான உள்ளங்களே இதற்கு சாட்சி. 












 
எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து பணியாற்றுவதற்கு, என் மீது அக்கறை கொண்ட நல்லுள்ளங்களின் விசாரிப்பும், ஆறுதல் பேச்சுகளும், உற்சாக வார்த்தைகளும் மட்டுமே போதும் என்று தோன்றுகிறது. 
 
என்னுடன் தொடர்பு கொண்டு பேசிய அரசியல் கட்சி தலைவர்கள்-நிர்வாகிகள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ஈழத்து பெரும் மக்கள், டில்லி மற்றும் வட புலத்து அன்பர்கள, புலம் பெயர்ந்த தமிழர்கள், என் மீது அக்கறை கொண்டவர்கள என அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி.

தமிழகம் மற்றும் டில்லி, மும்பாய் என
வட இந்திய செய்தி தாட்கள், ஊடகங்கள் என செய்திகளாக வெளியிட்டன.
#KSR_Post
22-10-2022.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".