நான் தொகுத்த ‘கரிசல்காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்ற நூல் சென்னையில் புக்லேண்டில் மட்டும்தான் கிடைக்கிறது என்றும், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம் நகரங்களில் கிடைக்கவில்லை என்றும் அந்தப் பகுதி மக்கள் விசாரிக்கின்றனர். சென்னையிலும் பரவலாக ஹிக்கிம்பாதம்ஸ், பனுவல் போன்ற புத்தகக் கடைகளில் கிடைக்கவில்லை என்று நண்பர்கள் தொடர்ந்து ஒரு மாத காலமாகச் சொல்லி வருகின்றனர். இந்த நூலை வெளியிட்ட கலைஞன் பதிப்பக உரிமையாளர் நண்பர் நந்தாதான் இதைக் கவனிக்க வேண்டும்.
இந்த நூலைக் குறித்த விமர்சனங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழ் தினசரி, வார ஏடுகளிலும் நூலைச் சிலாகித்து எழுதியதையொட்டி, பல நண்பர்கள் இந்த நூலைப் பெற முயற்சிகள் செய்தும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை என்னிடம் தெரிவித்துள்ளனர். நூல் கிடைக்கக் கூடிய வகையில் உரிய முயற்சிகளை எடுக்கிறேன்.
இது குறித்து திரு.மாலன் நாராயணன் அவர்கள் தன்னுடைய முகநூலில் பதிவு செய்தததை இங்கு வைத்துள்ளேன். திரு மாலன் நாராயணன் அவர்களின் கடந்த மாத பதிவு:
பாரதி பற்றிய பதிவுகள் பல நேற்றுப் பார்த்தேன்
நாள் கிழமை பார்த்து சம்பிரதாயமாகக் கும்பிடு போடுகிறவர்கள் ஒரு வகை.
ஆனால் நேரம் காலம் பார்க்காமல் சிரமத்தைப் பொருட்படுத்தாது பாரதியின் படைப்புக்களைத் தேடி எடுத்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்கள் சிலர்
சுதேசமித்திரன் சேமிப்பு அறையில் தூசிகளுக்கு நடுவே பலவற்றை சேகரித்த தூரன், வி.ஜி.ஸ்ரீ நிவாசன், ர.அ.பத்மநாபன், தமிழண்ணல், பேராசிரியர் சஞ்சீவி, சீனி.விஸ்வநாதன், இளசை மணியன்,ய.மணிகண்டன், வேங்கடாசலபதி இவர்கள் வணங்கத்தக்கவர்கள்
பாரதியைப்பற்றி அவர் வாழும் காலத்திலும் பின்னரும் மற்றவர்கள் கொண்டிருந்த எண்ணங்களையும், ஏன் விமர்சனங்களையும் கூடத் தொகுப்பது இன்னொரு வகை. கடந்த ஆண்டு செங்கமலத் தாயார் லோகோபகரியிலிருந்து அத்தகைய கட்டுரைகளைத் திரட்டி நூலாக வெளியிட்டார்.
அண்மையில் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ராஜாஜி தொடங்கி, மீரா, நாகாமராசன், பாரதி கிருஷ்ணகுமார் வரை 106 பேருடைய கட்டுரைகளைத் திரட்டி நூலாக்கியுள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. முக்கியமான நூல். கலைஞன் பதிப்பக வெளியீடு. விலை ரூ 900/-
#கரிசல்_காட்டின்_கவிதைச்சோலைபாரதி
#ksrpost
19-10-2022.
No comments:
Post a Comment