Sunday, October 30, 2022

பசும்பொன் தேவர்

  பசும்பொன் தேவர் பிறந்தது மறவர் சமூகம், ஆனால்….

தேவர் உயிரோடு இருக்கும் போதே
அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்,

தேவரை பற்றி முழுமையான வரலாற்றை
எழுதியது அகமுடையார்கள்,

தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்,

தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிருத்துவ சமுகம்,

தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து
முதன்முதலில் நூலாக வெளியிட்டது
ஆதரித்த நாயுடு/நாயக்கர் சமூகம்,

தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,

தேவரை முதன்முதலில் சொற்பொழிவு
ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,

தேவரை பற்றி முதன்முதலில் பாடல்
எழுதியவர் நாடார் சமூகத்தவர்,

தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை
வைத்தது பிள்ளைமார் சமூகம்,

தேவரின் வாழ்க்கை வரலாற்றை
முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள்
கொண்டாடியது பர்மா மக்கள்,

இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல்
கொலைக்கும் தேவருக்கும் துளியும்
சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டுபிரசுரம் கொடுத்தவர் பிஎல் சமூகத்தவர்,

தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில்
வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர்

பாராளுமன்றத்தில் தேவர் சிலையை
நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்

சாதிக்காக வாழவில்லை...
சாதித்து வாழ்ந்த
பசும்பொன் !

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட தெய்வீக திருமகனார்..


No comments:

Post a Comment