——————————————————
‘திசை எட்டும்’ மொழியாக்க காலாண்டிதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலனின் முத்துவிழா மலர் கிடைக்கப் பெற்றேன். இந்த மலரை குறிஞ்சி ஞான வைத்தியநாதன் சிறப்பாகத் தொகுத்துள்ளார்.
முக்கியமான தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் எழுதிய குறிஞ்சிவேலனைப் பற்றிய கட்டுரைகள் - என் கட்டுரை உட்பட - இந்த முத்துவிழா மலரில் இடம் பெற்றுள்ளன. சிறப்பான தொகுப்பாக இது அமைந்துள்ளது.
குறிஞ்சிப்பாடியில் இருந்து கொண்டு பல மொழிப் படைப்புகளைத் தமிழாக்கம் செய்து ‘திசை எட்டும்’ ஏட்டை சிறப்பாக குறிஞ்சிவேலன் வெளியிட்டு வருகிறார். ஆங்கிலம், பிரெஞ்ச், ஜப்பான், உருது, அரபி, ஹிந்தி, வங்கம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி படைப்புகள் எல்லாம் தமிழில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிஞ்சிவேலனுடைய பணிகள் பல பக்கங்களில் இடம் பெறும்.
முத்துவிழா காணும் குறிஞ்சிவேலனுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
#ksrpost
14-10-2022.
No comments:
Post a Comment