Wednesday, October 12, 2022

இலங்கைத் தமிழ் அகதிகள்

இன்று பத்திரிகைகளில் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்கள் 108 இருக்கின்றன என்றும், 106 முகாம்கள் இருக்கின்றன என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன . ஆனால் என்னுடைய நினைவுக்குத் தோன்றிய அளவில், அவை  108 - இலிருந்து 106 முகாம்களாகக்  குறைந்துவிட்டன.
 ஏறத்தாழ 70 ஆயிரத்துக்கும் மேலானோர் அகதிகளாக இந்த முகாமில் உள்ளனர். சிலர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். அவர்கள் தங்களுடைய தாயகத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றால், இங்கே இந்தியாவில் தங்கிய காலத்துக்கு தங்கிய கட்டணம் (Staying Charge) செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் . இந்த கட்டணத்தை ரத்து செய்து இலங்கைக்கு அவர்களை இலவசமாக கப்பலில் அனுப்பி வைக்க வேண்டும்.
 அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மாநிலங்களில் இந்திய அரசின் உதவியால் கட்டப்பட்ட 40 ஆயிரம் வீடுகளில் அவர்களைத் தங்க வைக்க வேண்டும். இதுதான் ஈழத்தமிழ் அகதிகளுக்கு நாம் செய்யும் முறையான உதவியாகும்.
#ksrpost
12-10-2022

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...