Tuesday, October 18, 2022

#*பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்குப்பாலபாடம்! #ஜெயலலிதா!!*



————————————

  ஜெயலலிதா மரணம் குறித்தான நீதி விசாரணை அறிக்கையில், ஜெயலிலிதாவின் உடல்நிலையைக் கவனித்து அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான முன்னெடுப்புகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படிச் செய்திருந்தால், அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
  அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; ஆனால் அது நடக்கவில்லை. அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.
   ஜெயலலிதா அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், எந்த தியாகமும் இல்லாமல் அதிமுகவில் இணைந்து, அதிமுகவில் பதவி,  தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் பொறுப்பு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என எம்.ஜி.ஆரின் உதவியால் பல உயரங்களை வெகுவிரைவில் எட்டி, எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அரசியலில் உச்சத்துக்கு அவர் எளிதாக வந்தார். இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிட்டிவிடாது. 
  ஆங்கிலத்தில் commission and omissions சொல்வார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டு, செய்யக் கூடாததைச் செய்து, தன்னுடைய உடல்நிலையைச் சரியாகப் பாதுகாத்துக் கொள்ளாமல் ஜெயலலிதா மறைந்தது ஒரு துக்கமான செய்திதான்.  கூடா நட்பு என்பார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் ஜெயலலிதா. அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்திருக்கலாம். தமிழகத்தின் அரசியலில் உச்சத்துக்குச் சென்று, இன்னும் 10 ஆண்டு காலம் வரை அவர் புகழின் உச்சியில் இருந்திருக்கலாம். முடியவில்லை என்பதற்கு ஊழ்தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? 
 ஜெயலலிதாவுக்கு குடும்பம் கிடையாது. அவர் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சியில் இருந்திருக்கலாம். அதனால் வந்த பெரும்கேடு, வழக்குகள், சிறைச்சாலைகள்,  இறுதியாக மரணம். இதற்கு யார் காரணம்? அந்த அம்மையாருக்குக் கிடைத்த - வேறு யாருக்கும் கிடைக்காத - நல் வாய்ப்பை தவறவிட்டு விட்டார். வேறு என்ன சொல்ல? 



 அந்த அம்மையார் பொறுப்பில் இருந்த காலத்தில் பிழையாக, மக்களுக்கு விரோதமாக பொன்னும் பொருளும் சேர்த்தார். சரி, இப்படி சம்பாதித்த இந்தப் பொன்னும் பொருளும் சாவில் உடன் வரப் போகிறதா? இல்லையே. ஜெயலலிதாவின் கடந்த கால சில செயல்களைப் பார்க்கும்போது, பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணமான மேரி அன்டாய்னெட் நினைவுக்கு வருவார்.
  பொதுவாழ்வில் இருக்கும் வரை நேர்மையான மக்கள் பணிகளைச் செய்வதும், தனக்காக பொதுவாழ்வில் உடன் இருப்பவர்களை நேர்மையாக அங்கீகரிப்பதும் தான் ஓர் நல்ல அரசியல் தலைவரின் அடிப்படை இலக்கணம். அதை ஜெயலலிதா அரசியல் வாழ்க்கையில்  கடைப்பிடிக்காமல் இருந்ததால், இறுதியில் துயரங்களையும் ரணங்களையும் அந்த அம்மையார் பட நேர்ந்தது. உள்வட்ட செய்தி.எவ்வளவு பெரிய வழக்கறிஞரை வைத்தாலும் தண்டனை உறுதி.So she preferred death and took ice cream kind of things to expediate her final breath.whether it s true or not ,lay man don't know இவை எல்லாம் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்குப் பாடம்.

இறுதியில்,,

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு - குறள் 

பொருள் : வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

#ksrpost
18-10-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...