Friday, October 21, 2022

*தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகள்*.

*தாகூரின் கீதாஞ்சலியில் உள்ள வரிகள்*.
————————————
நண்பர்களே நான் பிரியப் போகும் இந்த நேரத்தில்
என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!
வானத்தில் வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது
எனது பாதையும் அழகைப் பொழிகிறது
நான் என்னுடன்
என்ன கொண்டுபோகிறேன் என்று கேட்காதீர்கள்
வெறுங்கையுடன் ஆர்வ இதயத்தோடு என் யாத்திரை
ஆரம்பமாகின்றது.
நான் எனது திருமண மாலையை அணிந்து கொள்கிறேன்.
எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் 
என் மனதில் 
எவ்வித பயமும் இல்லை.
எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம்
எட்டிப் பார்க்கும்
அரசனின் அரண்மனையிலிருந்து
அந்தி மாலையின் சோக  கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும்.
...
நான் இந்த வாழ்க்கையை விரும்பும் காரணத்தாலேயே 
மரணத்தை நேசிக்கிறேன்.
#KSRPost
21-10-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...