*அண்ணன் பழ.நெடுமாறனின் ‘மத்திய, மாநில உறவுகள் - சில குறிப்புகள்’ என்ற நூலினை 1982- இல் பெரியார் திடலில் தலைவர் கலைஞர் வெளியிட, அரசியல் சாசன வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த கிருஷ்ணசாமி பாரதி பெற்றுக் கொண்டார். இவர் நாவலர் சோமசுந்தர பாரதியின் மருமகன். இவருடைய துணைவியார் லட்சுமி பாரதியும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்த நிகழ்வில் நீதிபதி இஸ்மாயில், கி.வீரமணி, தஞ்சை இராமமூர்த்தி, தி.சு.கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்பிரமணியம் என சிலர் பங்கேற்றோம். நான் அந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்தினேன். கலைஞர் மத்திய, மாநில உறவுகள் குறி்த்தும் மாநில சுயாட்சி குறித்தும் விரிவாகப் பேசினார். இந்த நூலை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டது. அகிலன் கண்ணன் பொன்னாடை போர்த்தி பாராட்டப் பெற்றார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது. நேற்றைக்கு அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இன்று தத்துவங்களையும் ஆலோசனைகளையும் தமது மனம் போன போக்கில் பேசுவதைப் பார்க்கும்போது ஒரு சில வேடிக்கை மனிதர்கள்தாம் நினைவுக்கு வருகின்றனர்*.
#ksrpost
3-10-2022.
No comments:
Post a Comment