முன்னாள் மத்திய அமைச்சரும், சோசலிஸ்ட் மற்றும் ஜனதா கட்சித் தலைவர் என நாடு அறிந்தசரத் யாதவை இன்று சந்திக்கும்போது, “தமிழ்நாட்டைப் பற்றி நினைவு வந்தால் உங்களைப் பற்றி சிந்திப்பேன். அரசியல்களத்தில் டெல்லி வரை உச்சத்திற்கு வந்திருக்க வேண்டிய எல்லாத் தகுதிகளையும் படைத்தவர் நீங்கள். நானறிந்த வரையில் 1995 - இலிருந்தே உங்களுடைய வளர்ச்சியைத் தடுத்துவிட்டார்கள் என்று நான் நினைப்பது உண்டு. என்னுடைய சோசலிஸ்ட் கட்சியில் இருந்த பலரும் உங்களை போன்று இப்படி பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக உங்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன்” என்று சொன்னார்.
அவர் சொன்ன வார்த்தைகள் என் உழைப்பையும் உதவியும் பெற்றுக் கொண்ட இங்குள்ள (தமிழகத்தில்) சிலருக்குப் புரிகிறதோ, புரியவில்லையோ வடபுலத்தில் உள்ள அரசியல் தலைவர்களுக்குப் புரிகிறதே என்ற உண்மை எனக்கு ஆறுதலாகப்பட்டது.
இதே கருத்தை மத்திய அமைச்சரும், இந்திராகாந்திக்கு நெருக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கருத்தப்பட்ட கே.பி.உன்னி கிருஷ்ணன், பாஸ்வான் ஆகியோர் என்னிடம் சொல்லியதுண்டு.
உண்மைகள் அம்பலத்துக்கு வருவதுதான் இயற்கையின் நியாயம்….
#ksrpost
10-10-2022.
No comments:
Post a Comment